விடியலை நோக்கி-04

50 4 1
                                    

*விடியலை நோக்கி....*

✍🏻சிறுகதை ஆக்கம்: Afaã

★பாகம்: 04★

பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்த Aizaa.... அவளின் பர்தாவை அடிக்கடி சரி பார்த்துக் கொண்டவளாய் Townகு செல்வதற்கான பஸ் வண்டி வரும் வரை பல மணி நேரமாய் காத்துக் கொண்டிருந்தாள். அவளின் விழியிரண்டும் தூரத்தில் வரும் வாகனங்களையே பார்த்துக் கொண்டிருந்தன. அவ்வேளை, கதிரவனின் பொற் கிரணங்கள் அவளின் வெண் முகத்தை சுட்டெரிக்கவே Aizaa தன் கையில் இருந்த கடதாசி File ஆல் அவள் முகத்தை சற்று மறைத்துக் கொண்டாள். அன்றைய தினம் அவளோ பட்டினி நோன்பாளி என்பதால் சுட்டெரிக்கும் வெயிலை தாக்குப்பிடித்து நிற்க முடியுமோ தெரியவில்லை என அவள் மனதிற்குள் கேள்விகள் பல உருவாகிக் கொண்டிருக்கும் போதே இறைவன் அருளால் Townக்கு செல்வதற்கான பஸ் வண்டியும் வரவே, Aizaaவோ இறைவனுக்கு நன்றி கூறியவளாய் பஸ் வண்டியில் ஏரி ஓர் ஆசனத்தில் அமர்ந்தவாறு town ஐ நோக்கி பயணம் செய்தாள், விண்ணை தொடும் அளவிற்கு கட்டப்பட்டிருந்த அவள் கனவுக் கோபுரங்களுடன்.....

 அன்றைய தினம் அவளோ பட்டினி நோன்பாளி என்பதால் சுட்டெரிக்கும் வெயிலை தாக்குப்பிடித்து நிற்க முடியுமோ தெரியவில்லை என அவள் மனதிற்குள் கேள்விகள் பல உருவாகிக் கொண்டிருக்கும் போதே இறைவன் அருளால் Townக்கு செல்வதற்கான பஸ் வண்டியும் வரவே, Aizaaவோ இறைவனுக்கு...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அரை மணித்தியாலத்திற்கு பின்னர் Town ஐ வந்தடைந்த Aizaa.... நகரத்தின் இரு புறங்களிலும் பெரிய பதாதைகளுடன் காணப்பட்ட அலுவலகங்களுக்கும், கடைத்தெருக்களுக்கும் களைப்பு பாராது ஏறி இறங்களானாள், தான் சொந்தக் காலில் நிற்பதற்கான ஓர் உத்தியோகத்தை எதிர்ப்பார்த்தவளாய். ஆனால் அங்கு யாரும் அவளை பொருட்படுத்தவும் இல்லை. அவளுக்கு உதவ நினைத்துப் பார்த்ததுமில்லை.... இதற்குப் பின்னர் என்ன செய்வது என்பதோ அவளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. "ஓர் இஸ்லாமிய கன்னிப் பெண்ணாக என்னால் முடிந்த முயற்சிகளை தளராது செய்தேன், இருப்பினும் என் முயற்சி ஏதும் கைக்கெட்டவில்லை. இறைவா என் ஆசைகள் எல்லாம் வெறும் கனவாகவே தான் இருக்குமா? எனக்கொரு விடிவு காலமே இல்லையா?" என வீதியோரத்தில் இருந்த ஓர் மரத்தடியில் உட்கார்ந்து தன் ஆதங்கத்தை கண்ணீர் மழ்க தன் இறைவனிடத்தில் முறைப்பாடு செய்தாள் Aizaa....
அவ்வாறிருக்க தூரத்தில் ஓர் வீடு இருப்பது அவள் கண்ணிற்கெட்டியது. மரத்தடியில் உட்கார்ந்திருந்த Aizaaவின்  உள்ளமோ அதே நினைவில் ஊசலாட அவள் கால்கள் மட்டும் தூரத்தில் இருந்த அந்த வீட்டை நோக்கியே நகரலாகின......

 மரத்தடியில் உட்கார்ந்திருந்த Aizaaவின்  உள்ளமோ அதே நினைவில் ஊசலாட அவள் கால்கள் மட்டும் தூரத்தில் இருந்த அந்த வீட்டை நோக்கியே நகரலாகின

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

தொடரும்......

(Created by-Afaã)

(Created by-Afaã)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
 விடியலை நோக்கி.....Where stories live. Discover now