நன்றாக தூங்கி எழுந்து ரிதன்யா வெளியே வந்த நேரம் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர் அதை பார்த்து அவள் மனதிற்குள் 'இதுங்க ஒன்றுகூடி உட்கார்ந்தாலே ஏதாவது பெருசா பிளான் பண்றாங்கன்னு என்று அர்த்தம்' என்று எண்ணிக் கொண்டே கீழே இறங்கி வந்தாள்.
அவள் வந்ததை பார்த்த லட்சுமி அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். காபியை வாங்கிக்கொண்டு அபியின் அருகில் போய் அமர்ந்தாள்.
( அவ பக்கத்துல போய் உட்கார்ந்தா அப்படிங்கறது காக பாசத்துல உட்கார்ந்தா என்று தப்பாக நினைத்து விடாதீர்கள் உட்காருவதற்கு வேறு இடம் இல்லாத காரணத்தினால் அபியின் அருகில் போய் அமர்ந்தாள்.)
சரவணன் "முத்துவை பார்த்து சம்மந்தி இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு ரிசப்ஷனுக்கு உங்களுக்கு எந்த நாள் சரியா வரும்னு சொன்னிங்கநா அன்னைக்கே போய் எல்லாருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துடலாம்" என்று கேட்டார்.
ஒத்து அனிதா மற்றும் அமுதாவை கேள்வியாக பார்க்க அனிதா அமுதாவிடம் "நீ சொல்லு அமுதா என்னைக்கு போனா சரியா இருக்கும்" என்று கேட்டார்.
அதற்கு அமுதா "நான் இதுல எதுவுமே முன்ன நின்னு செய்யக்கூடாது ஏன்னா நான் ஒரு விதவை அதனால நீங்களே ஒரு நல்ல முடிவா எடுங்க" என்று தயங்கினார்.
அமுதா கூறியதை கேட்ட சங்கீதா தன் தந்தையை நினைத்து தன்னை அறியாமல் கண்ணீர் விட்டாள்.
அவளது கண்ணீரை பார்த்த சரவணன் மற்றும் வெங்கடேஷ் அவளுக்கு ஆதரவாக இருபுறமும் சென்று அமர்ந்து கொண்டனர். சரவணன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டார் அதில் நான் இருக்கிறேன் என்று நினைப்பு இருந்தது இருவருக்கும்.
லட்சுமி மட்டும் வள்ளி அமுதா அருகில் சென்று "நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற எல்லாருமே இதுல முடிவு சொல்லுங்க நீங்க வேற எதை பத்தியும் யோசிக்காதீங்க. கண்டிப்பா நீங்க ஏதாவது சொன்னிங்க அப்படின்னா அதுல ஒரு காரணம் இருக்குன்னு தெரிஞ்சு தானே உங்க கிட்ட கேக்குறாங்க அதனால நீங்க இந்த ரிசப்ஷனில் எல்லாத்துலயும் முன்னால் நின்று செய்யணும் இது சம்பந்தியா எங்களோட ஆர்டர்" என்று முடித்தனர்.
YOU ARE READING
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)
Romancethis is my first story padichu parthu sollunga