அத்தியாயம் 13

1.9K 69 14
                                    

அபியின் வீட்டில் அனைவரும் ஓய்வெடுக்க சென்ற நேரத்தில் குரு மற்றும் சித்தார்த் அபியை இழுத்துக்கொண்டு விருந்தினர் அறைக்கு சென்றனர்.

அங்கே அவர்கள் சென்று பார்த்த பொழுது அங்கே அனன்யா, கீதா, அன்பு, தமிழ், நிகிதா, ஆனந்தி, அரவிந்த் மற்றும் கவுசிகா அமர்ந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்து ஒரு நிமிடம் ஷாக்கான அபி கவுசிகா மற்றும் ஆனந்தியை பார்த்து "நீங்களும் ஓய்வெடுக்கப் போகவில்லையா அப்படி என்ன ஆர்வம் உங்க எல்லாருக்கும் என்னோட கதையை கேட்பதில்" என்று கேட்டான்.

ஆனந்தி "உங்களுக்கு எல்லாருடைய காதல் கதையும் தெரிஞ்சிருக்கு ஆனா உங்களோட கதை இங்கே யாருக்குமே தெரியல அந்த ஆர்வத்தில் தான் உங்க பொண்டாட்டியை தவிர வேற எல்லாரும் இங்க வந்துட்டோம்" என்று கூறினாள். அதற்கு அனைவரும் ஆமா என்று தலையசைத்தனர்.

அபி "அவள் வந்துட்டாலும் போங்கப்பா எல்லாரும்" என்று அவர்கள் அருகில் வந்து உட்கார்ந்தான்.

அன்பு "ரொம்ப அனுபவித்துப் இருப்பாய் போல மாமா" என்று நக்கலாக கேட்டான்.

"எல்லாத்தையும் சொல்றேன்" என்று தன்னுடைய கதையை கூற ஆரம்பித்தான்.

"நான் முதன் முதலில் ரிதன்யாவை பார்த்தது சித்தார்த் கீதாவை பார்த்து அன்று தான்" என்று தன்னுடைய நினைவுகளில் தொலைந்த கூற ஆரம்பித்தான்.

அன்று சித்தார்த் மற்றும் குரு வேறு வேலையாக சென்றுவிட தன் ஆபிஸில் நேரம் போகாமல் வெளியே வந்தான் அபி. அப்போது ஒரு பெட்டிக் கடையின் முன்பு நின்றுகொண்டு தன் தாயிடம் புளிப்பு மிட்டாய்கள் வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்த ரிதன்யாவை பார்த்தான்.

பருவ மங்கையாக இருந்த  பெண் தன் தாயிடம்  மிட்டாய்காக  கெஞ்சி  கொண்டிருப்பதை சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தான் அபி.

ரிது "அம்மா ப்ளீஸ் மா புளிப்பு மிட்டாய் வாங்கி தா மா வேற எதுவுமே நான் கேட்க மாட்டேன்" என்று கேட்டாள்.

எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora