அத்தியாயம் 27

1.6K 60 9
                                    

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ரிதன்யா முகத்திலிருந்த தெளிவு அனைவருக்கும் நிம்மதியை தந்தது. ஆனால் அபி அவளுடைய தெளிவான முகத்தினால் குழம்பி போனான். அவனுடைய முகம் குழப்பமடைந்த பார்த்த ரிதன்யா தனக்குள் சிரித்துக்கொண்டு எதுவும் கூறாமல் கவிதா ஹரி மற்றும் பிரபு அருகில் சென்று இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் தங்களை முறைப்பது மூவருக்கும் தெரிந்தாலும் எதுவும் காட்டிக்கொள்ளாமல் அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர் இதில் இன்னும் கடுப்படைந்த ரிதன்யா கவிதா மற்றும் பிரபு முதுகில் மொத்து மொத்து மொத்தி விட்டாள். அவர்கள் இருவரும் வலிப்பது போல் கத்திக்கொண்டு இருக்க ஹரி நல்ல வேளை நமக்கு இந்த மொத்து கிடைக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனால் அது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை கவிதா ரிதன்யா கொடுத்ததை வாங்கிவிட்டு ஹரி முதுகில் நன்றாக கொடுத்துவிட்டாள்.

ஹரி வலியில் கத்திக்கொண்டே "ஏண்டி ராட்சசி வீட்லதான் அடிக்கிற என்றால் இங்கேயும் எல்லார் முன்னாடியும்  அடித்து  இப்படித்தான் மானத்தை வாங்குவதா" என்று கூறினான்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கவிதா "பின்ன அவங்க ரெண்டு பேரும் அந்த அடி அடிக்கிறா நீங்க சும்மா வேடிக்கைதானே பாத்துட்டு இருக்கீங்க அதனாலதான் உங்களுக்கும் கொடுத்தேன்" என்று கூறினாள்.

ஹரி பாவமாக ரிதன்யாவைப் பார்க்க அவள் "நீங்க எல்லாரும் எனக்கு எதிரா துரோகம் பண்ணி இருக்கீங்க எனக்கே தெரியாம என்ன பத்தின எல்லா விவரத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கீங்க யாரைக் கேட்டு இதெல்லாம் செய்தீர்கள்" என்று கேட்டாள் .

ஹரி மட்டும் அவளைப் பார்க்க மற்ற இருவரும் கீதாவிடம் "பசிக்குது ஏதாவது சாப்பிட கொண்டு வா இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா இருக்கா இல்ல வழக்கம் போல தானா" என்று தீவிரமாக சாப்பாட்டை பத்தி பேசிக் கொண்டிருந்தனர்.

எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)Where stories live. Discover now