அத்தியாயம் 6

2K 73 80
                                    

ஞாயிறு அதிகாலை நான்கு மணிக்கே கண் விழித்த அரவிந்த் தன் ரூமில் இருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு திரும்பி படுத்தான். எவ்வளவு முயன்றும் அதன் பின்பு உறக்கம் வராமல் மணியை பார்த்துக்கொண்டே "ஐயோ இன்னைக்கு மட்டும் ஏன் தான் இந்த நேரம் இவ்வளவு மெதுவா போகுதோ தெரியல பேசாம அபி சித்தார்த் இல்லனா குரு யாரையாவது போய் எழுப்புவோம்" என்று கிளம்பினான்.

மூவரது அறைக்கும் சென்று பார்த்த அரவிந்த் அங்கு மூவரையும் காணாமல் "இவனுங்க எங்க போனானுங்க ரூம்ல யாரையும் காணோம். நேத்து மதியமே சித்தார்த் வீட்ல இருந்து இங்க வந்து ஸ்டே பண்ணிட்டாங்க .அப்படி மூணு பேரும் எங்கதான் போய் இருப்பானுங்க . அதுவும் இவ்வளவு காலையிலேயே" என்று தன் போக்கிலேயே புலம்பிக் கொண்டே தன் அறையில் சென்று மீண்டும் நேரத்தை பார்க்கும் வேலையை தொடர்ந்தான்.

இவனைப் பற்றி ஏற்கனவே அறிந்த மூவரும் இரவு தூங்குவது போல் தங்கள் அறைக்கு சென்று படுத்துக்கொண்டனர் அதன்பின்பு வீட்டினர் அனைவரும் தூங்கிய பிறகு மெதுவாக பின்வாசல் வழியாக சென்று சித்தார்த் வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

வழக்கமான நேரத்தில் கண்விழித்த அபி தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த தன் நண்பர்களை எழுப்பி "சீக்கிரம் கிளம்புங்க நம்மள தேடுவதற்கு முன்னாடி வீட்டுக்கு போய் சேர்ந்து இருக்கணும்".

அதன்பின்பு மூவரும் எப்படி சென்றனரோ அதேபோல் தத்தமது ரூமுக்கு சென்றடைந்தனர். மூவரும் ரெடியாகி கீழே வரும்போது பொண்ணு பார்க்க செல்வதற்கு அனைவரும் தயாராகி அமர்ந்திருந்தனர்.

லட்சுமி "சரி வாங்க எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பலாம் நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டிலருந்து கெளம்பனும்".

அதன்பின்பு அனைவரும் சாப்பிட அமர லட்சுமி மற்றும் வள்ளி அவர்களுக்கு பரிமாறிவிட்டு அவர்களும் சாப்பிட்டு கிளம்பினர்.

சரியாக 10 மணிக்கு பொண்ணு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் வாசலுக்கே வந்து வரவேற்றனர் கவுசிகாவின் தாய் வசந்தா மற்றும் தந்தை துரை அதைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தனர் லட்சுமி மற்றும் வள்ளி. உள்ளே சென்ற அனைவரும் சோபாவில் அமர்ந்தனர் அவர்களுக்கு காஃபி மற்றும் ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டன.

எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora