அபி ரிதன்யாவை பற்றி எனக்கு தெரிந்த மீதி கதையை கூற ஆரம்பித்தான்.
வீட்டை விட்டு வெளியே சென்ற ரிதன்யா வெளியூர் வந்து சேர்ந்தாள். அங்கு ஏற்கனவே அவள் அவளுடைய ரெஸ்யூமை ஒரு கம்பெனிக்கு அனுப்பி வைத்திருந்தாள். அங்கிருந்து போன் கால் வரும் வரை சமாளிக்க பக்கத்தில் உள்ள ஒரு ஹாஸ்டலில் தங்கினாள். ஹாஸ்டல் வார்டன் அவள் திருமணமானவள் என்பதை அறிந்து ஏன் அவள் தனியாக வந்தாள் என்று கேட்டதற்கு ரிதன்யா "மேடம் நானும் என்னோட கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இப்போது என்னுடைய கணவர் வேலை விசயமாக வெளியூர் சென்று உள்ளார். அவர் வருவதற்கு ஒரு இரண்டு வருடங்களாகும். அதுவரை நான் தனியாக இருந்தால் பாதுகாப்பு இருக்காது என்று இந்த ஊரில் உள்ள ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். தனியாக வீடு எடுத்து தங்கினால் அது பலவிதமான சிக்கல்களை உருவாக்கும் அதனால் ஹாஸ்டலில் தங்க முடிவு செய்துள்ளேன்" என்று கூறினாள்.
அவள் கூறுவது பொய் என்று அந்த வார்டன் உணர்ந்தாலும் அவளை தனியாக அனுப்ப மனமின்றி அங்கேயே தங்க வைத்தார். ஆனால் ரிதன்யா அங்கிருந்த யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். அவள் வந்து சேர்ந்த ஒருவாரத்தில் சரியாக அந்த கம்பெனியிலிருந்து இன்டர்வியூ காக அழைப்பு வந்தது.
ரிதன்யா சென்று இன்டர்வியூ அட்டென்ட் செய்தாள் அதில் அவள் தேர்வும் ஆனாள். அங்கும் அவள் யாரிடமும் அதிகமாகப் பேசவில்லை ஆனால் அவள் திருமணமானவள் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்திருந்தது ஒரு சிலர் கேட்ட கேள்விகளுக்கு அவள் ஹாஸ்டல் வார்டனிடம் கூறிய அதே பதிலைக் கூறிவிட்டாள். அதை ஒரு சிலர் நம்பியும் நம்பாமலும் அமைதியாக இருந்துவிட்டனர்.
இப்படியே இரண்டு மாதம் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சென்றது அபியும் ரிதன்யா எங்கிருக்கிறாள் என்று தேட முயற்சி செய்யவில்லை. ஆனால் தினேஷ் குழு மட்டும் அவளைத் தேடிக் கொண்டிருந்தது. ஆனால் அவளுடைய நல்ல நேரம் அவள் அவர்கள் கண்ணில் சிக்காமல் தப்பி கொண்டிருந்தாள்.
VOUS LISEZ
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)
Roman d'amourthis is my first story padichu parthu sollunga