மறுநாள் காலை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக விடிந்தது. முந்தைய தினம் அபி சொன்னதுபோல் காலை அனைவரும் எழும்பும் நேரத்திற்கு எழுந்து வந்த ரிதன்யா அனைவருடனும் சேர்ந்து காலை மற்றும் மதிய உணவிற்கான வேலைகளில் உதவி செய்தாள்.
அனைத்து வேலைகளையும் முடித்தவுடன் பெண்கள் கிளம்புவதற்காக தங்களது அறைக்கு சென்றனர் அங்கே ஏற்கனவே ஆண்கள் ரெடியாகி கொண்டிருந்தனர்.
அனைவரும் தயாராகி சாப்பிட அமர்ந்தனர் அப்போது அரவிந்த் "நான் கவுசிய ஸ்கூலில் விட்டுவிட்டு ஆபீஸ் செல்கிறேன் நீங்க எல்லாரும் எப்படி கிளம்புறீங்க" என்று கேட்டான்.
சித்தார்த் "நாங்க இவங்க மூணு பேரையும் கூட்டிக்கிட்டு போறோம் எல்லாரும் ஒரு ஆபீஸ் தானே போறோம் அதனால பிரச்சினை இல்லை" என்று கூறினான்.
ஆனால் இதற்கு நிச்சயம் அபி மறுப்பு சொல்வான் என்று எதிர் பார்த்த ரிதன்யா அவன் எதுவும் பேசாமல் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சித்தார்த்திடம் "அண்ணா என்னதான் நாங்க மூணு பேரும் உங்க வைப்பா இருந்தாலும் அங்க நாங்க மூணு பேருமே ஒரு சாதாரண ஸ்டாப் தான் அதனால நாங்க மூணு பேரும் எங்களோட ஸ்கூட்டிலேயே வருகிறோம்" என்று கூறியவள். கீதா மற்றும் ஆனந்தியை பார்த்து "உங்களுக்கு இதுல ஏதாவது பிரச்சினை இருக்குதா" என்று கேட்டாள்.
அதற்கு அவர்கள் இருவரும் குரு மற்றும் அபியை கேள்வியாக பார்த்தனர். ஏனென்றால் காலையில் கீதாவை சந்தித்த அபி "கீதா எப்படியும் ரிதன்யா தனியா ஸ்கூட்டியில் தான் ஆபீஸ் போவேன் என்று கூறுவாள் அதுக்கு துணையா எப்படியும் உன்னையும் ஆனந்தியையும் கூப்பிடுவா" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே தன் பெயர் அடிபடுவதை தெரிந்த ஆனந்தி குருவுடன் சேர்ந்து இவர்கள் இருக்குமிடம் வந்தாள்.
ஆனந்தி "என் பெயர் அடிபடுது ஏதாவது முக்கியமான விஷயமா" என்று இருவரையும் பார்த்து கேட்டாள்.
அபி "ரியா உங்க ரெண்டு பேரையும் ஆபீசுக்கு ஸ்கூட்டியில் போக சொல்லி கூப்பிட்டா வேண்டான்னு சொல்லிருங்க" என்று கூறினான்.
![](https://img.wattpad.com/cover/203840265-288-k533494.jpg)
YOU ARE READING
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)
Romancethis is my first story padichu parthu sollunga