அத்தியாயம்-2

3.2K 96 45
                                    

அபிமன்யுவையும் ரிதன்யாவையும் புரியாத பார்த்துக்கொண்டிருந்த சங்கீதா மனதிற்குள் "என்ன ஆச்சு இந்த ரிது சாரை இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்கா சாரும் சலிக்காம அவளை எதிர் பார்வை பாக்குறாரு ஒருவேளை நமக்கு தெரியாமல் இவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே மீட் பண்ணி இருப்பாங்களோ" என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

ரிது" ஹலோ சார் கொஞ்சம் வழியை விடுகிறீர்களா நாங்க வீட்டுக்கு  போகணும்".

அபி "போங்க இப்ப நான் என்ன உங்களை பிடிச்சா வச்சிருக்கேன்".

ரிது "இவன் கிட்ட பேசினா நமக்கு தான் பிரச்சனை நம்ம நல்ல மூட டென்ஷன் மூடு ஆகி ஆக்கிவிடுவான் பேசாம அமைதியா சுத்தி போறதுதான் நல்லது" என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு "கீதா வா நாம சுத்தி போய்விடலாம்" என்று தன் தோழியிடம் கூறினாள்.

கீதா "என்ன பண்றது இவ  கூப்பிடுகிறாள் என்று இவ கூட  போறதா இல்ல சார் நிற்கிறார் என்று மரியாதை கொடுத்து வெயிட் பண்ணவா" என என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது கம்பெனியில் இருந்து வெளியே இருந்த சித்து மற்றும் குரு இவர்களை பார்த்து "என்ன நடக்குது அங்க சரி வா போய் பார்ப்போம்" என்று அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

சித்து" டேய் லேட் ஆச்சு வீட்டுக்கு  போகிறேன்  என்றுதானே நீ கிளம்பி வந்த இன்னும் போகாம என்னடா பண்ணிட்டு இருக்க"

அபி "இல்ல மச்சி சும்மா பேசிகிட்டு இருந்தேன் தெரிஞ்சவங்க மாதிரி இருந்துச்சு அதான் அத விசாரிக்கலாம் என்று வந்தேன் அதுக்குள்ள மேடம் வழியை விடுறீங்களா போகணும் என்கிறார்கள்".

குரு "ரிது  உனக்கு முன்னாடியே அபியை தெரியுமா நீங்க நண்பர்களா"

ரிது "இல்லன்னா எனக்கு இவரை யாருனே தெரியாது வீட்டுக்கு போற நேரம் வழியை மறைத்து கொண்டு போகவிடாமல் பண்றாரு வழியை விட சொல்லுங்கண்ணா"

அபி "ஏய் என்ன உங்க எம் டி ஐ அண்ணன் கூப்பிடுற "

ரிது "சார் ஆபீஸ் குள்ள வச்சு தான் அவர் என்னுடைய எம்டி நான் அவருடைய எம்ப்ளாயி வெளிய வச்சு அவர் என்னோட அண்ணன் நீங்களும் ஆபீசை விட்டு வெளியே  ஒரு சக மனுஷன் தான் அத முதல்ல ஞாபகம் வச்சுக்கோங்க"

எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora