சித்விற்கும் ரிதன்யாவிற்கும் திருமணம் முடிவு செய்து வந்த குடும்பத்தினர் சித்து , அபி மற்றும் குருவிடம் நடந்த அனைத்தையும் கூறினர்.
வள்ளி "பசங்களா நம்ம சித்தார்த்துக்கும் கல்யாணம் முடிவு பண்ணியாச்சு இன்னைக்கு பார்த்த பெண்ணை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு அதனால பூ வெச்சுட்டு வந்திருக்கோம் அரவிந்த் அப்புறம் குரு கல்யாணம் முடிஞ்ச உடனே சித்துவுக்கு நிச்சயதார்த்தம் இருக்கும் பொண்ணு போட்டோ ரூம்ல இருக்கு போய் பார்த்துக்குங்க" என்று முடித்தார்.
குரு "சரி மா நாங்க இப்ப ரூமுக்கு போறோம் அண்ட் சாரிமா வேலை முடிய கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதான் வர முடியல"
லட்சுமி "சரி டா போங்க மூணு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க" என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வள்ளியிடம் "எப்ப பாரு இதே வேலை மூணு பேரும் சேர்ந்து ஏதாவது பண்ண வேண்டியது கடைசில பாவப்பட்ட குருவே நம்ம கிட்ட மாட்டிவிட்டு போயிட வேண்டியது" என்று தன் மற்ற இரு மகன்களை செல்லமாக கடிந்தார்.
ரூமுக்கு சென்ற மூவரும் சோம்பலாக சோபாவில் அமர்ந்தனர். அபி சித்துவிடம் பொண்ணு போட்டோவை பார்க்குமாறு கூறினான்.
அபி "டேய் வீட்ல பார்த்து இருக்கிற பொண்ணு எப்படின்னு இப்பவே பார்த்து விடு அப்புறம் பின்னாடி மாத்தச் சொன்னா மாத்த மாட்டாங்க"
சித்து "இப்ப அது தான் ரொம்ப முக்கியம் பாரு. முதல்ல அந்த தினேஷ் குரூப் புதுசா ஏதோ பிளான் பண்றாங்கன்னு நியூஸ் வந்து இருக்குல்ல அது என்னன்னு கண்டுபிடிக்கணும். இப்பவே கண்டுபிடிச்சா தான் பின்னாடி பிரச்சனை பெருசாகுறதுக்குள்ள யாருக்கும் எந்தவித பாதிப்பும் வராம முடித்து வைக்க முடியும்".
குரு "நீ ரொம்ப கவலைப் படுற மச்சான் ஏற்கனவே அவனுங்கள க்ளோசா வாட்ச் பண்ணி நமக்கு இன்ஃபார்ம் பண்ண ஆள் ரெடி பண்ணியாச்சு சோ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு" என்று ஆசுவாசப்படுத்தினான்.
![](https://img.wattpad.com/cover/203840265-288-k533494.jpg)
ŞİMDİ OKUDUĞUN
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)
Romantizmthis is my first story padichu parthu sollunga