மறுநாள் காலை முதலில் கண்விழித்த அபிமன்யு தன்னருகில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் தன் மனைவியைப் பார்த்து முகம் மலர்ந்தான். மெதுவாக அவளுக்கு தெரியாமல் அவளுடைய நெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்து எழுந்து குளிக்க சென்றான்.
அவன் குறித்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் கண்விழித்த ரிதன்யா நேரத்தைப் பார்த்தாள். அது 7 என்று காட்ட பக்கத்தில் அபிமன்யுவை பார்த்தாள். ஆனால் அவன் இடம் காலியாக இருந்தது 'எங்க போச்சு இந்த லூசு' என்று எண்ணிக்கொண்டே எழுந்து அமர்ந்தாள்.
அப்போது பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்டதை வைத்து அவன் குளிக்க சென்று உள்ளான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தன்னுடைய உடைகளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த விருந்தினர் அறைக்கு சென்று தயாராகி வந்தாள்.
கீழே சமையலறையில் இன்னும் ரிதன்யா வரவில்லை என்பதை அறிந்த ஆனந்தி கீதாவிடம் "என்ன கீதா நேத்து என் புருஷன் போட்ட போடல இன்னும் ரிது எழும்பவில்லை போல" என்று கேட்டாள்.
கவுசி "அப்படி என்ன நடந்துச்சு அவதான் எதுவுமே பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாதே" என்று கேட்டாள்.
ஆனந்தி "அது ஒன்னும் இல்லக்கா நேத்து குரு வந்து எங்க மூனு பேரையும் அவங்க மூணு பேருக்கு பர்சனல் அசிஸ்டன்ட் புரோமோஷன் கொடுக்கிறதா சொன்னாங்க. அதுக்கு நம்ம ரிது டென்ஷன் ஆகிட்டா அத பார்த்தவர் இன்னைக்கு மூணு பேரு புதுசா சேர போறதா சொன்னாங்க அதுல ஒரு பொண்ணு அபியை காலேஜ் படிக்கும்போது விரும்பி இருக்கும் போல அதையும் சொன்னாங்க அதைக் கேட்டதிலிருந்து ரிதன்யா பதட்டமாகவே தான் இருக்கா" என்று கூறினாள்.
கீதா "எனக்கு என்னமோ பயமா இருக்கு ஏன்னா இவ இன்னும் அபி அண்ணாவை காதலிக்கிறது உணரவில்லை. இன்னொரு விஷயம் அபி அண்ணா இவள விரும்புவதும் இவளுக்கு தெரியாது. இதனால் ஏதாவது பிரச்சனை வருமோ என்று தோனுது அந்த பொண்ணு இங்க வர்றது நல்லதாகவும் முடியெல்லாம் கெட்டதாகவும் முடியலாம்" என்று தனக்குத் தோன்றியதை கூறினாள்.
VOCÊ ESTÁ LENDO
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)
Romancethis is my first story padichu parthu sollunga