"கதை நல்லா சொல்ற, எவ்வளவு கற்பனை உனக்கு,இவ்வுளவு தானா , இல்லை இன்னும் ஏதாவது இருக்கா, நீ என்னை கல்யாணம் செய்யலைனா நான் செத்துடுவேன், இப்படி சொன்னா இன்னும் எமோஷனல் டச் கிடைக்கும் தானே என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சௌமீ சொல்ல
கார்த்திக்கோ தளர்ந்து போய் அமர்ந்தான், தருணோ " அந்த கௌதமிற்கு கால் செய்து இவளுக்கு கொடுடா" என்று சொல்ல
கார்த்திக்கோ இடவலமாக தலையே ஆட்ட,"நான் முயற்சி செய்துட்டேன், ரீச் செய்ய முடியலை"என்று பரிதாபமாக கூறவும்
"கடல்லே இல்லையாம்,"என்று சௌமீ கனல் கக்கும் குரலில் கூற
அவர் ஏர்போர்ட்டில் இருந்து ஊருக்கு கிளம்பிட்டு இருந்தார், அதனால்.... என்று சொல்ல ஆரம்பிக்க
"ஏரோப்ளேன் நடுவானில் வெடித்து சிதறியது,அதானே... என்று வெடுக்கென்று சொல்ல
"ஏன் சௌமீ அவன் இவ்வளவு தூரம் செல்றான், அப்பவும் அவனை நம்பமாட்டியா நீ" என்று மது கேட்க
"உண்மையே சென்றால் நம்பறேன்.என்னை நீ வேண்டாம் என்று சொன்ன, உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போறது நினைச்சு மனசு தாங்கல அதனால் சந்தார்ப்பத்தை பயன்படுத்தி கல்யாணத்தை நிறுத்தேன்னு சொல்லு" என்று அழுத்தமாக சொல்ல
அவள் சொன்னதை கேட்டு கார்த்திக் மீது நண்பர்களுக்கு பரிதாபம் பிறந்தது
அங்கிருந்த அனைவரையும் உற்று முறைத்து விட்டு விறுவிறுவென்று பெட்ருமிற்கு சென்று விட, கார்த்திக் தன் தலையை அழுத்தி கொதிக்கொண்டு சோஃபாவில் அமர
மதுவோ "டேய்,விடுடா பார்த்துக்கலாம், சித்தார்த்தை எங்கிருந்தாலும் இங்கே நிறுத்துவது எங்க கடமை சரியா," என்று துடிப்புடன் கூற, நண்பர்கள் இருவரும் தீர்க்கமாக அவனை பார்க்கவும்
ச்சூ, உங்களுக்கு புரியலையா இவ யார் என்ன சொன்னாலும், அதை நம்ப தயாராக இல்லை, இவ்வளவு ஏன் அந்த ராஜேஷ் வந்து நான் ஒரு வுமனைசர் என்று சொன்னாலும்,இவ "இல்ல, நீ ஒரு உத்தம சிகாமணி என்று கதறுவா போல" என்று வெறுப்புடன் கூற
DU LIEST GERADE
அவளும் நானும்(Completed)
Romantikநாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை