Mature content 18+ kindly ski p if you don't want to read this
அடுத்த இரண்டு நாட்கள் வெகு இயல்பாக நகர இருவருமே காரணம்.
சௌமீ அவனோடு ஒட்டி உறவாடமில்லை என்றாலும், முகத்தை திருப்பிக் கொண்டும் போகவில்லை.அவன் ஏதாவது பேசினால், திரும்ப பதில் சொல்லும் அளவுக்கு முன்னேற்றமாகி இருந்தது.கார்த்திக்கோ மனம் முழுவதும் மகிழ்ச்சி தான்,எல்லா பிரச்சினைகளும் சரியாகும் நாள் தூரமில்லை என்று தோன்றியது.
அப்பொழுது தான் மது போனில் இருவரையுமே நியூ இயர் முந்தைய இரவு பார்ட்டிக்கு அழைக்க, இருவரும் போக முடிவேடுத்தனர்.
அந்த நாளும் வந்தது, கார்த்திக் கறுப்பு நிற டீஸ்ர்ட்,ஜீன்ஸ் அணிந்து கிளம்பியவன், தன் மனைவிக்கு காத்திருந்தான், அப்பொழுது தான் அறையில் இருந்து வெளியே வந்தவளை கண்டவன், வெட்கமில்லாமல் அவளை வெறித்தான் கறுப்பு நிறத்தில் முட்டி வரைக்குமான கவுன் அணிந்து, தலையை ஃப்ரன்ச் ப்ரேட் போன்ற கொண்டிருந்தாள்,"போச்சு, இன்னைக்கு எத்தனை பேர் எனக்கு போட்டிக்கு கிளம்ப போறாங்களோ, தெரியலையே,கடவுளே யார் கண்ணுக்கும் இவள் அழகாக தெரிய கூடாது, என்றெல்லாம் வேண்டுதல் வைத்தான்.
ESTÁS LEYENDO
அவளும் நானும்(Completed)
Romanceநாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை