அத்தையும், சித்தார்த்தும் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு வரசொன்னதால் நானும் முன்னதாகவே சென்றேன்.
அன்னைக்கு சௌமீக்கு நலங்கு வச்சி
க்கிட்டு இருந்தாங்க, அந்த பிங்க் புடவை,தலை நிறைய மல்லிகைப்பூ, முழங்கை முழுக்க மருதாணி, கன்னமெல்லாம் சந்தனம்,அதை மிஞ்சும் அவளின் சிரிப்புன்னு, அமர்க்களமாக இருந்தாள், என்று சொல்லும் பொழுதே அவன் முகம் புன்னகையில் விரிய, அதைக் கண்டு சௌமீ கடுப்பாக .அஜயோ" டேய் மச்சான்" என்று எச்சரிக்க "சரிடா" என்றவன்
எல்லாம் சரியாக தான்டா போயிட்டு இருந்தது, திருமண வரவேற்பில் ராஜேஷ் அருகில் அவளை பார்த்தவுடன் உடைஞ்சிட்டேன் மச்சான், தெரியுமா? அதுவரைக்கும் சௌமீ மனசுப்படி வாழணும் தான் நான் நினைச்சேன், ஆனால் அவள் பக்கத்தில் நின்றுக்கொண்டு செல்ப்பி எடுக்கும் பொழுது செத்துட்டேன்டா, அந்த நிமிஷம் தோணுச்சு இங்கே வந்தே இருக்கக்கூடாதுன்னு என்று சொன்னதில்லை கண்களின் வலியை புரிந்துக் கொள்ள முடிந்தது.
"ஓ, அதனால் தான் கல்யாணத்தில் நடந்த சின்ன பிரச்சினையே உனக்கு சாதகமாகிட்ட இல்ல" என்று சௌமீ கண்கலங்க
"சத்தியமா இல்ல சௌமீ, நான் எடுத்த செல்ஃபியே ஃபேஸ்புக்கில், போட்டு விட்டு, தனியாக இருக்கலாம் என்று மொட்டை மாடிக்கு சென்று வெறுமனே கால்வாய் நடந்துக்கிட்டு இருந்தேன், அப்போ தான் நம்ம சினியர் கௌதமிடம் இருந்து கால் வந்தது.
"யாருடா, CS டிபார்ட்மெண்ட் , கிட்டார் வாசிப்பானே அவனா" என்று மது கேட்க
CZYTASZ
அவளும் நானும்(Completed)
Romansநாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை