கார்த்திக் வீட்டை அடையும் பொழுது இரவு 7மணியாகி இருந்தது.காலையிலிருந்து நேரம்
கிடைக்கும் பொழுதுதெல்லாம் சௌமீக்கு மேசெஜ் அனுப்பி, அவள் அதை பார்த்த பிறகும் பதில் அனுப்பாமல் போக சோர்ந்து தான் போனார் நம் ஹிரோ.அத்தையும் மாமாவும் எதற்காக வந்தார்கள், என்ன பேசினார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் ஒரு புறம் இருக்க,சௌமீ அவர்களை எப்படி நடத்தினாள் என்ற பதற்றம் மறுபுறமாக வீடு வந்து சேர்ந்தான்.
தோட்டத்திலே இருவரும் பேசிக்கொண்டு இருப்பது கண்டவன்" வாங்க மாமா, வாங்க அத்தை , சாப்பிட்டிஙகளா,வர கொஞ்சம் லேட்டாகிடுச்சி"உள்ளுக்குள் இருக்கும் பதற்றத்தை மறைத்துக் கொண்டு உற்சாகமாக பேச
இவ்வளவு பிரச்சினைக்கு பிறகும், இத்தனை ஆசையாக பேசுபவனை பார்த்து,பெரியவர்கள் நெகிழ்ந்து தான் போனார்கள்"வாங்க மாப்பிள்ளை, உங்களுக்கு தான் காத்துக்கிட்டு இருந்தோம்". என்று ராகவன் சொல்ல
"மாப்பிள்ளை"என்றதும் ரெக்கை காட்டி பறக்காத குறை தான் கார்த்திக் கிற்கு.
நைட் டின்னருக்கு வெளியே போகலாம்னு சொல்லியிருந்தேன், ரெடியாகி வாங்க, போகலாம்,சௌமீ எங்கே போனா, அவகிட்ட சொல்லிட்டு தானே போனேன் என்று அவளை தேட
நாங்க சொன்ன கதையெல்லாம் கேட்டுட்டு அந்த அதிர்ச்சியில் இருந்து அவளால் மீள முடியலைன்னு தான் நினைக்கிறேன், மதியமும் சாப்பிடல, சாயங்காலம் தலைவலின்னு படுத்தவள் தான் இன்னும் எழுந்தே வரலை"என்று சொல்ல.
"என்னாச்சு,. என்ன கதை..."என்று புரியாமல் கேட்க, பெரியவர்கள் நடந்ததை கூற, கார்த்திக் அதிர்ச்சியில் ஆழ்ந்தான், "ராஜேஷ் கெட்டவன்னு தெரியும், ஆனால் மற்ற விஷயங்கள் கேட்கவே பதற்றமா தான் இருக்கு" என்று கார்த்திக் கூற பெரியவர்கள் இவனிடமும் மன்னிப்பு கோர, கார்த்திக் பதறி எழுந்தான் "என்ன மன்னிப்பு எல்லாம் கேட்கிறீங்க,என்னோட
சந்தர்ப்பம் உங்ககிட்ட பொய் சொல்றது போல் ஆகிடுச்சி நீங்களும் என்னிடம் அப்படி நடக்கும்படி ஆகிடுச்சி,தயவு செய்து எல்லாத்தையும் மறந்திடலாம் "என்றவன் உரைக்க
YOU ARE READING
அவளும் நானும்(Completed)
Romanceநாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை