சனிக்கிழமை இரவு -8 மணி
நண்பர்கள் பட்டாளம் கார்த்திக் வீட்டின் தோட்டத்தில் இருக்கும் சிறிய குடில் போன்ற இடத்தில் மும்முரமாக வேலையாக இருந்தனர், இது அவர்களுக்கு வழக்கமான ஒன்று தான்.
எவ்வளவு வேலை இருந்தாலும் சனிக்கிழமை இரவு ஒன்றாக பொழுதை கழிப்பது பல வருடங்களாக இருந்து வரும் பழக்கம்
அன்றும் அப்படித்தான் வெளியே மெலிதாக மழை துறி கொண்டிருக்க ,குடிலின் நான்கு புறத்திலும் முங்கிலில் செய்யப்பட்ட ஸ்கிரீன் போடப்பட்டு இருந்தது, நடுநாயகமாக பெரிய ஊஞ்சல் இருக்க, நான்கு புறமும் தூண்கள், அதன் அருகில் சின்ன சின்ன செடிகள் என்று இருக்க, உள்ளே கார்த்திக்கோ கீரில் அடுப்பில் சிக்கன் தந்தூரி சமைத்துக் கொண்டு இருக்க, மதுவும் தருணும் சாப்பத்தியும் சாதமும் இன்டக்ஷன் அடுப்பில் செய்து கொண்டு இருக்க, அஜெயோ தனியாக பழங்களை வைத்து சாலாட் செய்ய,ஸ்பபிக்கரில் இளையராஜா "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்று அந்த இடத்தை ரம்மியமாக மாற்றிக் கொண்டிருக்க
YOU ARE READING
அவளும் நானும்(Completed)
Romanceநாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை