அவளும் நானும்-3

1.5K 75 2
                                    

"எத்தனை பேருக்கு இந்த மாதிரி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும் ஜெய்,"என் சௌமீ பிறந்து வெளியே எடுத்து வரும் பொழுது பார்த்த சிலரில் நானும் ஒருத்தன், அம்மா " கண்ணா,என் ‌மருமகளை பாருடா, சொல்லி விட்டு என் கையில் கொடுத்தாங்க , இப்போ நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பா இருக்குடா" என்று சென்னவனின் கண்களில் பூரிப்பு தெரிந்தது.

அப்போ எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும், ஆனால் அப்பொழுதே எனக்கு சௌமீ என்றால் அவ்வுளவு பிடிக்கும்,மது .

அந்த குட்டி கண்கள், சப்பையான மூக்கு, குண்டு கன்னம்,அவ்வளவு அழகுடா என் சௌமீ.என்னை தவிர வேறு யாரோடும் அவள் விளையாடினால் அவ்வுளவு கோபம் வரும்டா, இப்போ அதெல்லாம் யோசிக்க சிரிப்பா இருக்கு

"ஆமா உனக்கு சிரிப்பா தான் இருக்கும்,உன்‌ ஆசைக்கு என்னை என் குடும்பத்தில் இருந்து பிரிச்சி என்னை அசிங்கப் படுத்தி இப்படி நிக்க வச்சிட்ட தானே, நான் உன்னை வேண்டாம் என்று சொன்னதிற்கு என்னை பழி வாங்கிட்ட தானே" என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க, மதுவும்,தருணும், அவளை தடுத்து இழுத்து நிறுத்தினர்.

"சௌமீ தயவு செய்து நான் பேச விடு", நான் உன்னை ஏம்மாற்றவில்லை, என் பக்கத்து நியாயத்தை கேளுன்னு தான் சொல்றேன், என்று கார்த்திக் கெஞ்ச

சௌமீயோ முறுக்கி கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கைகட்டி கொண்டு, கொஞ்சமும் கோபம் குறையாமல் நின்றாள்,அவளுக்கோ இவன் பேசினால் முழு சாயம் வெளியே வரும் அதனால் அவள் அமைதி காக்க

இவளுக்கு எப்படி தன்னை உணர்த்துவது என்று புரியாமல் ஒரு பெரிய முச்சை உதிர்த்தான்

"சௌமீ உனக்கு நினைவு இருக்கும்ன்னு நினைக்கிறேன், என் அப்பா, அம்மா, பாட்டி எல்லோரையும் ஒரே நேரத்தில் இழந்துட்டு நின்ற அந்த நேரத்தில் அப்படியே செத்திடலாம்ன்னு தோணுச்சு ஆனால் நீ தானே அப்போ தேவதை மாதிரி வந்த,நீ என்கிட்ட என்னை சொன்னேனு தெரியுமா, என்று அந்த நாளின் நினைவுகளில் மூழ்கினான்

அவளும் நானும்(Completed)Où les histoires vivent. Découvrez maintenant