அவளும்-நானும் 20

1.5K 71 13
                                    

🔞 kindly skip, mature content. Sorry guys for late epi, Thanks guys for motivating me....

அறைக்கு வந்து அலுப்பு தீர குளியல் போட்டு,இரவு உடைக்கு மாறியவள், வெளியே வர, அங்கு கார்த்திக் இன்னும் வந்ததிற்கு அடையாளம் இல்லாமல் இருந்தது,யோசனையோடு‌ அவனுக்கு அழைக்க, அதற்கு பதில்யில்லாமல் போக,சந்தேகத்தோடு சித்து தங்கியிருக்கும் அலுவலக அறைக்கு செல்ல,அங்கே , கார்த்திக் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

"இப்படி விம்பு பிடிச்சி சுத்தறான்,பேசறதை காது கொடுத்து கேட்கறானா" என்று வாய் விட்டே சலித்துக்கொண்டாள்.

பின் தன் அறைக்கு வந்தவள், அசதியில் உறங்கியும் போனாள்.அடுத்த நாள் அவள் எழும் பொழுதே நேரமாகி இருந்தது.

நேராக கீழே செல்ல, அவளை பார்த்த அம்மாவோ அமைதியாக கடந்து செல்ல,சௌமீயால் அதை தாங்க முடியவில்லை.

"ம்மா, எதுக்கு இப்படி மூஞ்ச தூக்கி வைச்சியிருக்க நீ.... உனக்கு என்மேல் கொஞ்சமாவது பாசம் இருக்கா,சொல்லு.... நேற்று எனக்கு முடியமால் இருக்கும் பொழுது கூட,என்னை திட்டிட்டு போற, இப்பவும் பார்க்காத மாதிரி போற..... எனக்கே உடம்பு முடியாமல் தான் மயங்கி வீழுந்தேன.....என் மேல் என்ன தப்பு சொல்லு"என்று பரிதாபமாக உரைக்க.

"நீ பேசாதேடி‌..... எனக்கு இங்க நடக்கிறது எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறியா நீ, எனக்கு எல்லாமே தெரியும்"என்று அவர் கோப முகம் காட்ட.

சௌமீ பயந்து தான் போனாள், அவளுக்கு அவள் அம்மாவை தெரியுமே, எதை கண்டுபிடித்தார்... எதுவரைக்கும் தெரியும்..... என்று மூளைக்குள் நூறு கேள்விகள் ஓட.

"என்னம்மா,சொல்ற.....என்ன பிரச்சினை.... எனக்கு புரியலை.."என்று நெஞ்சு படபடக்க கேட்க.

"ஒண்ணு வைச்சா தெரியும் உனக்கு,
கார்த்திக்கும் உனக்கும் என்ன பிரச்சினை..... எனக்கு தெரியாதுன்னு மட்டும் நினைக்காதே, கார்த்திக் முகமே சரியில்லை.... இப்போ கூட கார்த்திக் சித்து ரூமில் நைட் தூங்கியிருக்கான், எப்பவுமே நீ இருக்கிற இடத்தில் தான் இருப்பான்,நானும் வந்ததில் பார்க்கிறேன் இரண்டு பேரும் பேசற மாதிரியே தெரியலை....."என்று புகார் பட்டியல் வாசிக்க.

அவளும் நானும்(Completed)Donde viven las historias. Descúbrelo ahora