ஈரம் - 2

337 24 17
                                    

" அருண விபுன்யா... பேரே அற்புதமா இருக்கே... பாட்டு அத விடவும் அருமை டா கண்ணா... இப்டி ஒரு குரல நா என்னோட நுப்பது வர்ஷ கரியர்ல கேட்டதே இல்ல... அதுவும் அந்த பிட்ச் இருக்கே... வாவ்... " என பாடகர் ராமன் புகழ்ந்து தள்ள லட்சனமாய் பட்டுப்புடவை அணிந்து மணப்பெண் போல அழகே உருவாய் நின்றிருந்தாள் அருண விபுன்யா..

அனைவரும் அவளுக்குக் கைத்தட்ட தன் வீட்டிலிருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டு ஏதோ அவளுக்கே கேட்கப் போவதை போல இங்கிருந்து வேகமாய் கை தட்டினான் அந்த இளைஞன்... வாட்டசாட்டமாய் ஒரு அழகான புன்னகையுடன் ஃபார்மல் உடையில் அழகனாய் அமர்ந்திருந்தான் அவன் அருண விபுன்யாவின் அன்பு தமையன் ஹரீஷ் விபுன்...

அவன் வாயெல்லாம் பல்லாக தன் தங்கையை இரசித்து கொண்டிருந்த நேரம் அவனது செல்பேசி விடாது ஒலிக்கத் தொடங்கியது... இங்கிருந்தே தாவி மேஜையிலிருந்த செல்பேசியை கவ்வி எடுத்தவன் உற்சாகமாய் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்...

ஹரீஷ் : ஹரீஷ் விபுன் ஹியர் என புன்னகையுடன் தொடங்கியவனின் புன்னகை மெல்ல சுருங்க அப்புறம் என்ன கூறப்பட்டதோ " உடனே வரேன் " என்று விட்டு அழைப்பை துண்டித்தான்...

தன் கேசத்தை கோதியபடி தனது ஜீபின் பனெட்டின் மேல் சாய்ந்தமர்ந்திருந்த அபிமன்யு சுற்றுவட்டாரத்தை அமைதியாய் நோட்டமிட அவன் எண்ணியதை போலல்லாமல் அந்த பார்க்கில் நடமாட்டம் அதிகரித்து கொண்டே தான் இருந்தது... எனெனில் விடியற்காலையிலிருந்தே ஒரு மணி நேரத்திற்கு பல முறை பத்து பேராவது அந்த பார்கிற்கு யோகா செய்ய வந்தேன், ஓட வந்தேன், அமர வந்தேன், காற்று வாங்க வந்தேன், விளையாட வந்தேனென மொத்தமாய் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வந்து சென்று விட்டனர்...

அப்படியிருக்க இரவிலும் கூட இந்த பார்க்கில் நடமாட்டம் இருக்க அதிகபட்ச வாய்ப்பிருப்பதாலும் அந்த பெண் நிச்சயம் நேற்று ராத்திரியில் தான் கொலை செய்யப்பட்டிருப்பதால் யாரேனும் ஒருவராவது சம்பவத்தை பார்த்திருக்கக் கூடுமென ஒரு பக்கம் ஒரு யோசனை இருந்தாலும் ஸ்டீஃபன் எடுத்து வந்த சீசீடீவி கமராவில் பார்த்த போது தான் தெரிந்தது அப்பெண் வந்த நேரத்திற்கு வேறெவரும் அந்த பார்க்கிற்கு வரவில்லை... அப்படியே அவள் தனியாக வந்திருந்தாலும் நடு நிசி இரண்டு மணிக்கு அவள் எதற்காய் இங்கு தனியே வர வேண்டுமென்ற ஒரு கேள்வி வேறு மண்டையை குழப்பியது...

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️Wo Geschichten leben. Entdecke jetzt