ஈரம்- 23

156 16 0
                                    

மறுநாள் விடியலில் அபிமன்யு அழைத்ததால் விபுன்யாவையும் அழைத்து கொண்டே ஹரீஷ் ஸ்டீஃபனின் வீட்டிற்கு வந்திருக்க ஸ்டீஃபன் மற்றும் அபிமன்யு ஆதி வேலை பார்த்த மருத்துவமனை மீதிருக்கும் தங்களின் சந்தேகத்தை அவர்களிடம் வெளியிட்டனர்.

" அப்போ அந்த ஹாஸ்பிட்டல் மேல தான் தப்புன்னு சொல்றீங்களா?? " என ஹரீஷ் கேட்க அதற்கு இடவலதாய் தலையசைத்த அபிமன்யு " இல்ல,  இருக்களாம்னு சொல்றேன். எப்படி பார்த்தாலும் ஆதி கொலைய பத்தி நாம விசாரிக்கனும்னா அந்த ஹாஸ்பிட்டலையும் விசாரிச்சு தான் ஆகனும். அதனால நாம அங்க ஒரு நாள் போகனும் "

" நீங்க சொல்றது தான் சரின்னு எனக்குத் தோனுது அபி ஸர். ஆதி அங்க வேலை பார்த்தப்போ சந்தோஷமா தான் இருந்தா. அவ நிம்மதியில்லாம இருந்ததோட அவளப் பத்தி அந்தளவுக்கா தப்பா பேசியிருக்காங்கன்னா கண்டிப்பா அங்க ஏதோ ஒரு தப்பு இருக்கு. உங்க கூட நானும் வரேன் " என முன் வந்தாள் விபுன்யா.

ஸ்டீஃபனை இன்றும் வீட்டிலே விட்டு விட்டு ஹரீஷ் மற்றும் விபுன்யாவுடன் அந்த மருத்துவமனையை நோக்கிச் சென்றான் நம் நாயகன். அவர்கள் உள்ளே சென்றதுமே வரவேற்பரையிலிருந்த ஒரு பெண் சற்று பதட்டமாய் அவர்களை பார்த்தாள்.

" நாங்க உங்க ஹாஸ்பிட்டல்ல விசாரணைக்காக வந்துருக்கோம். " என ஹரீஷ் கூறிக் கொண்டிருக்கும் போது அபிமன்யு பொருமையாய் அந்த மருத்துவமனையை நோட்டமிட்டான். வாயிலிலே அங்கு பல கண்காணிப்பு கமெராக்கல் இருக்க நிச்சயம் ஒவ்வொறு வளாகத்திலும் கூட இருக்க வாய்ப்பிருக்கிறதென எண்ணிக் கொண்டே பதிலுக்காய் காத்திருந்தான்.

அந்த பெண் யாருக்கோ அழைப்பு விடுத்து கூறியதும் ஹரீஷிடம் ஒரு வழியை கூறி அங்கு செல்லக் கூறினாள். ஹரீஷ் வழி நடத்த அவனோடு நடந்த விபுன்யா பின் வரும் அபிமன்யுவை அவ்வப்போது கவனித்தபடியே வர அபிமன்யுவின் கண்கள் கூர்மையாய் ஒவ்வொரு இடத்தையும் அளந்து கொண்டே வந்தது.

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️Donde viven las historias. Descúbrelo ahora