அன்றைய விடியலில் சூரிய தேவன் எழும் முன்பே ஸ்டீஃபனின் வீட்டை விட்டு கிளம்பியிருந்தான் நம் நாயகன். மலைமகளடி சாய முணைந்த சந்திரனும் நாயகனை பார்த்தபடி தன் சகோதரனுக்கான இடத்தை கொடுத்து விட்டு விடியல் கதிர்களில் மறைந்தான்.
விடியற்காலையிலே அபிமன்யு போய் நின்றது இரண்டு நாட்கள் முன் இவர்கள் கண்டுப்பிடித்த கல்யாணின் வண்டி இருக்கும் கிராமப்புறம் தான். அதே இடத்திற்கு சென்று விட்டு வயலோரமாய் சற்று நடைபயின்றவன் தூரத்தில் தெரியும் ஊர் மக்களின் குடிசைகளை நோக்கி நடை கட்டினான்.
பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்த நேரமதில் மஃப்டியில் பொருமையாய் அனைத்தையும் அலந்தபடியே சென்றவனுக்கு அவனது ஹெட் கான்ஸ்ட்டபிலிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று காதில் வைத்த அபிமன்யு அவர் ஏதோ ஒன்றை கூறியதும் நன்றி கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
இரண்டு நாட்கள் முன்னே ஒரு சிறுவனை கண்டு விட்டு அவனை பற்றி அங்கிருந்த காவலரிடம் விசாரிக்கக் கூறியிருந்தான். " இது தர்மராஜுடைய வீடா?? " என வாயிலில் நின்ற பெண்மணியிடம் அவன் கேட்க நம் நாயகனை குழப்பமாய் பார்த்த அப்பெண்மணி ஆமென தலையசைத்து விட்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
" ஏங்க யாரோ உங்கள பார்க்க வந்துருக்காங்க " என அப்பெண்மணி அறையிலிருந்த யாரிடமோ கூறிவிட்டு சென்றதும் அறையிலிருந்து வெளிபட்டார் தர்மராஜ்.
" ஸர் நான் உங்க பையன பார்க்க வந்துருக்கேன். " என அபிமன்யு பொருமையாய் பேச்சை தொடங்க " பையன் இப்போ தான் எழுந்தான் தம்பி. நீங்க யாரு?? " என கேள்வியெழுப்பினார் தர்மராஜ்.
" அபிமன்யு. இரெண்டு நாள் முன்னாடி உங்க ஊர் வெளிய ஒரு கார் கண்டுப்புடிச்சோம். அதை பத்தி விசாரிக்க தான் வந்துருக்கேன் " என நம் நாயகன் விளக்கியதும் அவர் சற்று அதிர்ச்சியாய் " நீங்க போலீஸா " என கேட்கவும் சரியாக " அப்பா அக்கா அடிக்கிறாப்பா " என கத்திக் கொண்டே அவரிடம் ஓடி வந்தான் அந்த சிறுவன்.
YOU ARE READING
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️
Mystery / Thrillerஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன்...