ஈரம் - 3

271 21 7
                                    

மருத்துவமனை

பொருமையின்றி தரையில் காலை தட்டி கொண்டே அமர்ந்திருந்தான் அபிமன்யு.. வேக மூச்சுக்களை இழுத்தபடி அபிமன்யுவை இறுதியாய் வந்து சந்தித்தார் மருத்துவர்...

மருத்துவர் : ஓஹ் வாங்க அபிமன்யு. உங்களுக்காக தான் வெயிட் பண்ணீட்டு இருந்தேன் என்றபடி அவர் அபிமன்யுவின் தோளை தட்ட அபிமன்யு எழுந்து நின்று கொண்டான்...

அபிமன்யு : டாக்டர் கெஸ்ஸிங்ஸென்ன... அத சொல்லுங்க ப்லீஸ்...

மருத்துவர் : இந்த பொண்ணு தூக்கு போட்டு இறக்கல ஸர்.. அதுக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க..

அபிமன்யு : அப்டி பாத்தா வேற எதனால தான் இறந்தாங்க டாக்டர்... கத்தி குத்து மாரி எதுவும் இல்லையே... அடிச்சேவா இப்டி பண்ணாங்க... என தயக்கமாய் கேட்க மருத்துவர் மீண்டும் இடவலதாய் தலையாட்டினார்...

மருத்துவர் : இல்ல ஸர்... நீங்க சொன்ன மாரி அவங்கள அடிச்சிற்காங்க தான்... மே பி ஒரு ஒன் ஹவர் அடிச்சிற்களாம்.. ஆனா அந்த அடிகள் எதுவுமே அவங்கள ரொம்ப பாதிக்கல.. கிட்டத்தட்ட மயக்கமடைய மட்டும் தான் வச்சிருக்கு...

அபிமன்யு : அப்போ.. மே பி எதாவது டப்லெட்ஸ் இல்ல பாய்சன் அந்த மாரி குடுத்துருக்க வாய்ப்பிருக்கா டாக்டர்??

மருத்துவர் : அப்டி இருந்துருந்தா இந்நேரத்துக்கு தெரிஞ்சிருக்குமே,  ஸர். ஆனா அப்டி எதுவும் இல்ல. இறக்குரதுக்கு ஆறு மணி நேரம் முன்னாடிலேந்தே அவங்க எதுவும் சாப்டவும் இல்ல. சோ அவங்க சாப்பாடுலையுமே எதுவும் கலக்கப்படல.

அபிமன்யு : அப்ரம் எதனால தான் டாக்டர் அந்த பொண்ணு இறந்தா???

மருத்துவர் : அது தான் தெரியல ஸர். என அவர் கூறவும் அபிமன்யுவுக்கு குழப்பம் தான் இன்னும் மேலோங்கியது. இறந்த பின் தான் தூக்கிலிடப் பட்டிருக்கிறாள். ஒரு மணி நேரம் அடித்த அடிக்கும் அப்பெண்ணிற்கு பெரிதாய் பாதிப்பு ஏற்படவில்லை. உடலில் எங்குமே கத்தி குத்தோ அல்ல கீறலோ கூட ஏற்பட்டிருக்கவில்லை. அப்படியெனில் எதனால் தான் இப்பெண் இறந்தாள்??

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️Where stories live. Discover now