கண்ணில் பட்டுத் தெறித்த ஆதவனின் மஞ்சள் கதிர்களில் மீண்டும் தனது மற்றொரு கனவிலிருந்து எழுந்தமர்ந்தான் ஸ்டீஃபன். அவனின் உடலில் அங்கங்கு இரத்தம் கட்டியதை போல் சிவந்திருக்க வலியினால் தனக்குள்ளே முனகிக் கொள்ளத் தான் முடிந்தது அவனால்.
" என்னத் தம்பி இன்னோறு கனவா?? " என கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ஒரு கான்ஸ்ட்டபில் அவன் எடுக்கக் கடினப்படும் தண்ணீர் நிறம்பிய குவளையை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவருக்கு நன்றி கலந்த பார்வையை பதிலாய் தந்து விட்டு மிடரு மிடராய் நீரை பருகியவனுக்கு, தான் கடைசியாக நேற்று மதியம் தான் உணவுண்டோம் என்னும் நினைவு மீண்டும் வந்து அடங்கியிருந்த பசியை தலை தூக்க வைத்தது.
" இப்போ என்னால கனவு தானண்ணா காண முடியும் " என்றவாறே ஸ்டீஃபன் அக்காடாவென மேலே பார்த்து கொண்டே சுவற்றில் சாய்ந்து கொள்ள " தம்பி நான் போய் சாப்பாடு வாங்கீட்டு வரேன். என்ன சாப்புடுவன்னு சொல்லுப்பா " என அவர் அன்பாய் கேட்ட போது அந்த நிலையிலும் தன்னை இன்னும் சந்தேகிக்காமல் தன் நலனை எதிர்நோக்குபவர்களை கண்டால் தான் அவன் எந்தளவிற்கு அவர்களிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறானென அவனுக்கேத் தெரிந்தது.
இப்படி என்றாவது ஒரு நாள் தன்னை பார்க்கும் அவரே தன் மீது இன்னும் அக்கரை வைத்துள்ள போது இன்னமும் அபிமன்யு தன் மீது நம்பிக்கை வைத்திருப்பானா அல்ல தான் அவனை ஏமாற்றியதற்காய் கோவமாய் இருப்பானா என தனக்குத் தானே கேட்டபடி வேறொரு சிந்தனையில் உளன்றவனின் தோளை பற்றி உலகிற்கு கொண்டு வந்தார் அந்த கான்ஸ்ட்டபில்.
" தம்பி என்னன்னு சொல்லுப்பா " என அவர் மீண்டும் கேட்க ஏதோ ஸ்டீஃபன் கூற வரும் முன் " எதாவது வாயத் திறந்தானா இல்லையா?? " என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் ஹரீஷ்.
அவன் அப்பட்டமாய் ஏதோ ஒரு ஆத்திரத்தில் இருப்பதை கண்டதும் ஸ்டீஃபன் எச்சிலை கூட்டி விழுங்க அந்த கான்ஸ்ட்டபில் அவன் மீண்டும் ஸ்டீஃபனை அடிக்கத் தான் போகிறானென்பதை அறிந்து எதுவும் செய்ய இயலா நிலையில் அவனிடம் தலையை மறுப்பாய் ஆட்டினார்.
YOU ARE READING
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️
Mystery / Thrillerஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன்...