ஈரம் - 7

184 17 1
                                    

நட்டநடு ராத்திரியில் அந்த அறையில் அமர்ந்து அங்குமிங்கும் நடந்தபடி பல செய்தி தாள்களில் எதை எதையோ சிகப்பு பேனாவால் குறித்து கொண்டிருந்தான் ஸ்டீஃபன். அவன் உறங்கியிருப்பானென அபிமன்யு நினைத்திருக்க இவனிங்கு சொட்டுத் தூக்கமில்லாமல் பேய் போல் அலைந்து கொண்டிருந்தான்.

விதவிதமான செய்திகளை குறித்து கொண்டிருந்தவன் தீவிரமாய் கல்யாணியை பற்றிய செய்தியை அந்த சிகப்புப் பேனாவால் அழுத்தி ஏதோ கிருக்கிக் கொண்டிருக்க சட்டென அவனின் பின் ஏதோ ஒரு சத்தம் கேட்டது.

மின்னலென தலையை அந்த புறமாக திருப்பிய ஸ்டீஃபன், பேனா பிடித்திருந்த கையை கீழிறக்கி விட்டு மெதுவாய் அந்த அறையின் வாசலுக்குச் சென்றான். ஒரு மையான அமைதி நிலவிய அவன் வீட்டில் வேகமாய் சுற்றும் மின்விசிறியயின் ஓசை மட்டுமே கேட்க அதற்கிடையே ஏதோ ஒன்று அவனது செவியை எட்டியது.

அந்த அறையின் அருகிலிருக்கும் அறையின் கதவு பாதி திறந்திருப்பதை கண்டதும் முழுதாய் திறந்து கொண்டு அதற்குள் சென்றான்.

அங்கு வாயை மூடி மூடித் திறந்தபடி பஞ்சு போலிருந்த ஒரு தலையணையை பிடிக்கத் தெரியாமல் பிடித்து கொண்டு உலகே அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தாள் எயினி. அவளின் நெற்றியை வருடியவன் பின் சத்தமெழுப்பாமல் அந்த அறையை விட்டு வெளியேறி கதவை அகல திறந்து வைத்து விட்டு மீண்டும் அவனிருந்த அறைக்குள்ளே செல்லத் திரும்பினான்.

ஆனால் மீண்டும் அவன் அதே இடத்தில் நிற்க, அவனின் கழுத்தில் எங்கிருந்தோ காற்றுத் தீண்டுவதை உணர்ந்து மெதுவாய் திரும்பி நோக்கினான். அவன் வீட்டின் பின் கதவு மட்டும் திறந்திருந்து வைக்கப்பட்டிருந்தது.

அதை கண்டு கண்களை அகல விரித்த ஸ்டீஃபன் வேகமாய் அவன் செல்லவிருந்த அறை கதவை பூட்டி விட்டு பின் வாசலை நோக்கி ஓடினான்.

ஸ்டீஃபன் வெளியே வந்த நேரம் அவன் பின்னிருந்து யாரோ அவனை பிடித்து சுவற்றில் இடிக்க தடுமாறி ஒரு கையை சுவற்றில் ஊன்றிய ஸ்டீஃபனின் வலது கையை நகர விடாமல் திருப்பி அவனின் முதுகில் முறுக்கினான் பின்னிருந்த ஒருவன்.

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️Where stories live. Discover now