ஈரம் - 19

145 15 0
                                    

அபிமன்யுவும் ஸ்டீஃபனும் ஒரு அறையில் அமர்ந்து பலவாறாக கலந்துரையாடிக் கொண்டிருந்த நேரம் லினா எதையாவது சமைக்களாம் என ப்ரின்சியை இழுத்து வைத்து கொண்டு ஸ்டீஃபனின் வீட்டிலிருந்த சில பொருட்களை வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

எயினி அங்குமிங்கும் ஓடி விளையாடி கொண்டிருப்பதை புன்னகையோடு பார்த்தபடி ஆதியின் பழைய ரிப்போர்டை வைத்து ஏதேனும் கண்டுப்பிடிக்க முடியுமா என பார்த்துக் கொண்டிருந்தாள் விபுன்யா.

" எயி பாப்பா, அங்க இங்கையும் ஓடாத. கீழ விழுந்துடுவடா பாப்பா. அம்மா வந்தா அடிப்பேன் " என லினா சமையலறையிலிருந்து குரலெழுப்பிக் கொண்டிருந்தாள். எயினி அதை கேட்டால் தானே.

அப்போதும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த எயினி திடீரென லினா கூறியதை போலவே கால் தடுக்கி கீழே விழுந்தாள். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை, எயினியின் கத்தல் அவ்விடமெங்கிலும் பரவ மற்றவர்கள் அங்கு ஓடி வரும் முன் விபுன்யா அவளை தூக்கியிருந்தாள்.

" அச்சச்சோ குட்டி பாப்பா, என்ன மா ஆச்சு??? இங்க பாருங்க அன்ட்டிய பாருங்க. எயினி பாப்பா அழக்கூடாது டா இங்க பாருங்க. பாப்பாக்கு அடியே படலையே " என அவள் முட்டியை மென்மையாய் தட்டி விட்டு விட்டு அவளை பார்த்து புன்னகைத்தாள். எயினி அவளை பார்த்து பார்த்து இன்னும் அழுக " செல்லம், உனக்குத் தெரியுமா உன் அம்மாக்கு அழனும்னா ரொம்ப புடிக்கும். ஆனா அவங்க கண்ணீர பத்தி நிறைய சொல்லுவாங்க. நாம வீணடிக்கக் கூடாத ஒரு பொக்கிஷம் தான் கண்ணீராம். நீயே இப்படி இந்த ட்ரெஷர வேஸ்ட் பண்ணலாமா சொல்லு. பாப்பா நல்ல பாப்பா தானே??? வேணா ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடுவோமா??? " என எயினியை மெதுவாய் சமாதானம் செய்திருந்தாள்..

எயினி இப்போது விசும்பிக் கொண்டே லினாவின் கால்களை போய் கட்டிக் கொள்ள விபுன்யாவை குழப்பமாய் பார்த்தான் அபிமன்யு.

" ஆதி சொன்னதா சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம் விபுன்யா?? " என அவன் கேட்டதும் " அதுக்கு அர்த்தம் இல்லையே. அழுதா அவ கண்ணீர வீணடிக்கக் கூடாதுன்னு சொல்லுவா அபி ஸர் " என்றாள் விபுன்யா.

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️Where stories live. Discover now