ஹரீஷ் இவர்களை பார்த்து விட்டுச் சென்று ஏற்கனவே இரண்டு மணி நேரம் கடந்திருக்க அபிமன்யு மற்றும் ஸ்டீஃபன் இப்போது சீசீடீவி ஃபூட்டேஜ்களை வாங்குவதற்காய் கன்ட்ரோல் ரூமிற்கு சென்றிருந்தனர்.
அங்கு நம் நாயகனுக்கு தெரிந்த அந்த மேலதிகாரி அவன் கேட்ட ஃபூட்டேஜை கொடுத்ததும் " அண்ணா ஜூன் 8 நைட் ஒரு 12 : 20 போல தேனாம்பாக்கம் ரோடோட ஃபூட்டேஜ் காமிங்க. அன்னைக்கு கல்யாணி 12:15 க்கு அந்த ஹைவேஸ்ல போய் 1:20 மணிக்கு திரும்ப வந்துருக்காங்க. நடுவுல அந்த பொண்ணு எங்க போச்சுன்னு பாக்கனும் " என அபிமன்யு விளக்கிக் கூறியதும் அவரும் " தோ பாத்துடலாம் தம்பி கொஞ்சம் உக்காருங்க " என அவர்களை ஓரிடத்தில் அமர வைத்தார்.
அரை மணி நேரம் இருவருமாய் அந்த ஃபூட்டேஜை கண்ணிமைக்காமல் பார்த்தாலும் அந்த ஒரு மணி நேரத்தில் கல்யாணியின் வண்டி தேனாம்பாக்கத்தின் நெடுஞ்சாலையின் மறுபுறத்தை தாண்டவே இல்லை.
" நீங்க சொல்ற பொண்ணு இந்த பக்கம் தாண்டுன மாரியே தெரியல தம்பி. " என அவர் கூறவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட அபிமன்யுவும் ஸ்டீஃபனும் ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கிருந்து கிளம்பினர்.
" அபி ஸர் சொல்ல மறந்துட்டேன். நேத்து என் வீட்டுல யாரோ என்ன அட்டக் பண்ணாங்க " என ஸ்டீஃபன் வெகு சாதாரணமாய் கூறவும் அவனை நம்ப இயலாமல் பார்த்த அபிமன்யு அவன் பொய் கூறவில்லை என்பதை அறிந்ததும் " என்ன சொல்றீங்க ஸ்டீஃபன்?? " என அதிர்ச்சியாய் கேட்டான்.
" ஹ்ம்ம் நைட்டு நா தூங்கல. ஏதோ ஒரு நியாபகத்துல கொள்ளை கதவ மூட மறந்துட்டேன். யாரோ வந்த மாரி இருக்கேன்னு பாக்க போனேன். அப்போ தான் யாரோ பின்னாடிலேந்து அடிச்சாங்க. அப்பரம் அவனே விட்டுட்டு போயிட்டான் " என ஸ்டீஃபன் மெதுவாய் அனைத்தையும் அசை போட்டபடியே விளக்கினான்.
அபிமன்யு : இத இவ்ளோ லேட்டா சொல்றீங்களே ஸ்டீஃபன். சீசீடீவி செக் பண்ணீங்களா?? என்றதற்கு அவன் இல்லையென தலையசைத்தான்.
YOU ARE READING
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️
Mystery / Thrillerஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன்...