ஈரம் 10

180 21 0
                                    

க்ரிஸ்டோஃபரின் வீட்டில் அவரை பார்த்தபடி அமர்ந்திருந்த ஹரீஷ் பொருமையாய் பேச்சை தொடங்கினான்.

ஹரீஷ் : ஸர் நான் சும்மா தான் உங்கள பார்க்க வந்தேன். நீங்க பயப்புட வேண்டிய அவசியமில்ல. என கூறவும் சற்று பதட்டத்துடன் இருந்த க்ரிஸ்டோஃபர் வெளிப்படையாகவே பெருமூச்சு விட்டார்.

" இன்னைக்கு கிடைச்ச கல்யாணோட பாடிய நீங்க தான் முதல்ல பாத்ததா கேள்வி பட்டேன். அதான் உங்க கிட்ட பேசலாமேன்னு இந்த பக்கமா வந்தேன் " என கூறியபடியே மெல்ல தன் பார்வையை சுழல விட்டவன் தான் தேடிய ஒரு முறைக்கும் விழிகளை கண்டுப்பிடித்ததும் மீண்டும் க்ரிஸ்டோஃபரிடமே தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

" எனக்கு அந்த பையன் யாருன்னு கூடத் தெரியாது தம்பி. திடீருனு எல்லாம் நடந்துடுச்சு. இன்னும் அங்க நடந்ததையே என்னால மறக்க முடியல. யாரு அந்த பையன கொலப் பண்ணாங்களோ எனக்கு தெரியாது ஆனா கொலப் பண்ணவன் ரொம்ப ஆபத்தானவன் " என வெளிரிய முகத்தோடு பயத்திலே கூறிய க்ரிஸ்டோஃபருக்கு அமோதித்து ஹரீஷ் தலையாட்டிக் கொண்டே தன் இடது கழுத்தை மெதுவாய் தேய்க்கவும் சரியாக ப்ரின்சி அவ்விருவருக்கும் குடிக்க தேனீர் எடுத்துச் சென்றாள்.

அதை ஒரு சிறிய தலையசைப்புடன் பெற்றுக் கொண்ட ஹரீஷ், எதற்சையாய் எழுந்து அமரும் போது அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து வெளியேறிய ஒரு குட்டி உருண்டையான ஏதோ ஒன்று அவர்களினிடையே இருந்த மேஜையின் கீழ் உருண்டோடியது.

அதை கவனிக்காத அம்மூவருமே சாதாரணமாய் இருக்க தேனீரை மௌனத்திலே அருந்திய ஆண்கள் இருவரும் பார்வை பரிமாற்றம் செய்யாது அமைதியை கடைப்பிடித்தனர்.

" சரிங்க ஸர்,  கிட்டத்தட்ட நாளைல இருந்து நானும் அபிமன்யுவும் ஒன்னா தான் வேலை செய்யப் போறோம். நாங்க எப்போ வேணா உங்களுக்கு ஃபோன் செய்ய வாய்ப்பு இருக்கு. நீங்க ஜாக்கிரதையா இருங்க " என்று விட்டு எழுந்த ஹரீஷ் ஒரு தலையசைப்புடன் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️Where stories live. Discover now