பூவே: 6

167 9 28
                                    


நொடி! நொடி என சொல்வதற்குள் ஓடிவிடுகிறது ஒரு நொடி. ஆகப்பெரிய மாற்றத்தின் சிறிய வித்து ஒரு நொடி. ஆரம்ப புள்ளியும் ஒரு நொடி. முற்று பெறுவதும் ஒரு நொடி. வாழ்வை புரட்டி போடும் அவகாசமாய் ஒரு நொடி. ஆழ நோக்கினால் அனைத்திற்கும் அடித்தளம் ஒரு நொடி!

இதில் எங்கோ நடக்கும் ஒரு செயல், தொடர்பு அல்லாதவரையும் தொடர்பு கொண்டு பாதிப்பதற்கு என்ன சொல்ல? தொடர் சங்கிலியால் பிணையப்பட்ட சமூகம் நாம். அந்த சங்கிலியின் பெயர் உணர்வு என கூறினாலும் மிகை அல்ல.

தொலைக்காட்சியின் திரையில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

"இன்றைய முக்கிய செய்திகள்!சென்னை நகரில் இயங்கி வரும் ***** தனியார் மென்பொருள் நிறுவனம் தொடர் சரிவினை சந்தித்ததின் காரணமாக மூடப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் ஆரம்பித்து வளர்த்து வந்த இந்நிறுவனம் தொடர் நஷ்டத்தால் இயங்க முடியாத நிலையில் நின்றுவிட்டது. பல்லாயிர கணக்கான படித்த இளைஞர்களின் வேலையும் எதிர்கால வாழ்க்கையும்   கேள்வி குறியானது" நடுத்தர  வயது பெண்மணி தன் கணீர் குரலில் செய்திகளை வாசித்து கொண்டிருந்தார்.

அதற்கு மேல் விஸ்வதி செய்திகளை கேட்கவில்லை. இந்த நிறுவனத்தில் கவிதீனாவும் அஜயும் பணிபுரிகின்றனர். இல்லை இனி அவ்வாறு கூற முடியாது.

செய்தி கேட்டு அவர்களது நிலை படுமோசம் என பார்க்காமலே விஸ்வதி கூறுவாள். அஜயின் சம்பளத்தில் குடும்பம் ஓடுகிறது. படிப்பு, நண்பர்கள், வேலை என இருந்த கவிதீனாவிற்கு ஒரே பிடிமானமான வேலை கைவிட்டு போனது.

பொதுவாகவே, ஆண்கள் தன் வாழ்வில் நிமிர்ந்து நிற்பதில் பெரும் பங்கு வகிப்பது அவன் பார்க்கும் வேலை. பணியில்லா ஆண்கள் எலும்பில்லா ஆன்மா உடையவர் எனும் கூற்று ஆண்களுக்கு ஒரு வயதிற்கு மேல் வேலை எத்தனை அவசியம் என வலியுறுத்துகிறது. ஏனனில் அது தருவது சன்மானம் மட்டுமின்றி சமூகத்தில் தகுந்த மரியாதையும் சேர்த்து. கவிதீனாவை குறித்தே அதிக கவலை விஸ்வதிக்கு. விக்னேஷிற்கு அழைத்தாள்.

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Where stories live. Discover now