பூவே: 27

113 11 13
                                    


காலையில் அஜய் வீட்டிற்கு கிளம்ப, விக்கி தாமதமாக எழுந்தான்.

கவிதீனா அன்றைய பாடத்திற்கு தேவையான நோட்ஸ் எடுத்து கொண்டிருந்தான்.

கவி "என்ன மால் ஓனர்? அதிசயமா ரொம்ப நேரம் தூங்கிருக்க?"

விக்கி "ஏன் தூங்க கூடாதா?" என முகத்தை கழுவி, போனை எடுத்து பார்த்தான்.

அப்போதுதான் கவிக்கு,
தன் நண்பனின் வழக்கத்திற்கு மாறான அமைதி உறுத்தியது. ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காத வாய், இன்று முழு ஓய்விலே இருந்தது. நேற்றிலிருந்து விக்கியின் நடவடிக்கையை யோசித்து  'இவனுக்கு என்ன ஆயிற்று?' என அவனையே பார்த்திருந்தான்.

விக்கி "டேய் **று என் போன் நோண்டுற பழக்கத்தை இன்னும் விடலையா நீ?"

கவி "ஹீஹீ என்ன சொல்லு?  உனக்கு தெரியாம உன் போன் பாக்குற சுகம் இருக்கே.. அது வேற எதுலயுமே கிடைக்காது"

விக்கி "ச்சீ த்தூ..."

அதே வேளையில், வெளியில் விஸ்வதியின் குரல் கேட்டது.

"கவி அண்ண!"

"உள்ள வா விஸ்வதி" என கவி அழைக்க,

அங்கு வாசலில் விக்கியின் செருப்பை பார்த்துவிட்டு, உள்ளே வராமல் "அண்ண...
நா.. நான் இன்னும் காலேஜ் கிளம்பல. கிளம்பிட்டு வரேன்" என சமாளித்து உள்ளே வராமல் கீழே சென்றுவிட்டாள்.

"இவ என்ன வந்துட்டு உள்ள வராம ஓடுறா" என கவிக்கு ஒன்றும் புரியவில்லை.

"வாசல்ல என் செருப்ப பாத்திருப்பா. நான் இருக்கேனு இங்க வராம கீழ போயிருப்பா" என்றான் விக்கி சரியாய் கணித்து.

கவி "உன்ன பாத்து அவ ஏன்டா ஓடணும்? சரி நீ ஏன் ரொம்ப அமைதியா இருக்க?
வந்ததுல இருந்து விஸ்வதி வீட்டுக்கும் போகல. உன்ன வம்பிழுக்கும் விஸ்வதி கண்டுக்காம போறா? ஏதும் பிரச்சனையா?"

விக்கி "இல்லடா"

கவி "வேற என்ன?...." என யோசித்தவன் "பொண்ணு கேட்டு கொடுக்க முடியாதுனு  பிரச்சனையா?"

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Where stories live. Discover now