பூவே: 2

277 14 62
                                    


கல்லூரி முடித்து வந்த விஸ்வதி தன் அறையை விட்டு வெளி வரவே இல்லை. அவளுக்கு இன்டெர்னல்ஸ் நடந்து கொண்டிருப்பதால், அவள் பொழுது படிப்பதிலே சரியாய் கழிந்தது.

சாப்பிடும் நேரம் வர,  இரவு உணவு சமைத்த அன்பரசி கணவனிற்கும் மகனிற்கும் பரிமாறிவிட்டு அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், தனக்கும் மகளுக்கும் தட்டில் எடுத்து கொண்டு அவள் அறைக்கு சென்றார்.

அம்மாவை தொடர்ந்து  அஷ்வினும் சென்றான்.

"விஸ்வதி புத்தகத்த மூடி வை. சாப்பிட்டு படி. பசியோட படிச்சா மனசுல நிக்காது" என்றவாறே அவள் தட்டை அவளிடம் கொடுத்தார் அன்பரசி.

தாய் சொல்லை மறுக்காமல், அவளும் கை கழுவி உண்டாள்.

தாயும் மகளும் கட்டிலில் அமர்ந்திருக்க, அஸ்வின் இவர்களுக்கு எதிரில் நாற்காலி இட்டு அமர்ந்திருந்தான்.

விஸ்வதி உணவினூடே
"என்ன அண்ண அமைதியா இருக்க.... ஒருவேள அண்ணிகூட கனவுல இருக்கியோ" என  கிண்டல் செய்தாள்.

அஸ்வின் "ம்க்கும் கூட ஒன்னு பொறந்துச்சே... படிக்கிறேன்னு பேர்வழி  வெளில பாக்க முடியலன்னு தேடி வந்தேன் பாரு என்ன சொல்லணும்" என விளையாட்டாய் நொந்து கொண்டான்.

அன்பரசி "ஹேய் வாலு முதல்ல சாப்பிடு. சாப்பிட்டு பேசலாம்" என அதட்டலை மீறியும் அவரிடம் சிரிப்பு.

அடுத்து அஸ்வின் பரீட்சை பற்றி விசாரிக்க, அதற்கு பதில் தந்தவள்,

"ஹ்ம்ம் அப்பறம்... எங்க அண்ணி என்ன சொல்றாங்க"

"அவங்க நாத்தனார கையிலே பிடிக்கவே முடியலன்னு சொல்றாங்க" என்றான் அவளை போலவே.

ஆம், அபர்ணாவை பெண் பார்த்து வந்தபிறகு நல்ல தேதி ஒன்று குறித்து, நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு ஆகியிருந்தது. இன்னும் நான்கு நாட்களில், இருபக்க உறவினர்களோடு நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.

கடைசி வாய் உணவை  விழுங்கியவள் "என்ன செய்றது. நீ பொண்ணு பாக்க போன நேரம் எனக்கு எக்ஸாம் ஆரம்பிச்சிட்டு. அண்ணிய நேர்ல பாக்கவே முடில. அண்ணிகிட்ட ஃப்ரீயா பேசவும் முடியல. உன் நிச்சயம் அன்னைக்கு எனக்கு லாஸ்ட் எக்ஸாம். அதுனால அன்னைக்கும் பாக்க முடியாது. இனி கல்யாணத்துல தான் பாக்க முடியும்" என கடகடவென சொன்னவள், சாப்பிட்டு முடித்தாள்.

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Donde viven las historias. Descúbrelo ahora