பூவே: 8

139 10 16
                                    


காலம் சிலருக்கு வசந்தத்தை  வசப்படுத்தும். சிலருக்கு வசந்த வாழ்வின் வாசனையை கூட பரிசீலிக்காது. சிலர் துயரம் பலகடந்தே வளமான வழியை பெற்றிருப்பர். சிலர் வளமான பாதையில் பயணித்து தீடிரென அப்பாதை பறிக்கப்பட்டு பயணம் தொடரும்.
    
விதி விளையாட கூடியதானால்,
காலம் காக்கவல்லது.
விதி விசித்திரமுடையது என்றால்,
காலம் கட்சி மாறவல்லது.
விதியின் செய்கை
காலமா?
காலத்தின் பிடியில்
விதியா?
படைத்தவனுக்கு மட்டும் புலப்படும் செய்தி இது.

கையில் அகப்பட்ட காலம் சொற்ப காலத்திலேயே கரைந்து போன்றதோர் வாழ்வு கண்டான், குமார். கவிதீனாவின் கல்லூரியில்  கடைசி இருக்கை நண்பன்.

குமாரின் வீட்டில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

"என்னடா பாக்க வந்துருக்க அதுவும் அதிசயமா வீட்டுக்கு" என கேட்டான் குமார், வந்த நண்பனிடம் வரவழைத்த குரலில்.

கவிதீனா "நான்தான்  வேலை போச்சுன்னு சுத்திட்டு இருக்கேன். உனக்கென்ன கேடு வந்தது அந்த பெரிய மனுஷன் நிழலுல கையாளா நிக்கிற ஆனா முகத்துல தெளிவு இல்லை. ஏன் என்னவோ போல இருக்க" கேட்டான் குத்தல் குரலிற்கு உண்டான ஏற்ற இறக்கத்தோடு. ஒரு விடயத்தில் தீரா கோபம் குமார்மீது.

குமார் "ப்ச் வருஷம் ஓடி போச்சு எத்தனை நாள் அதையே சொல்லுவ?... அஜய் ஆபீஸ் போறான் போல? உன்ன தனியா விடமாட்டானே"

கவிதீனா கண்டுபிடித்துவிட்டான் என தெரிந்ததும் பேச்சை மாற்ற முயன்றவன் முகபாவத்தை  மாற்ற முயலவில்லை. ஏனோ சிலரிடம் மட்டும் நம் இயல்பிற்கு முகமூடி போடமுடியாது.

"அவன் ஒர்க் பண்ற ஆபீஸ்ல வேக்கன்சி இல்ல. அதுக்காக அவன் விடல. எனக்கும் ஜாப் தேடுறான்" என மறைமுகமாக குமார் 'வேலை பற்றி கேட்கவில்லை' என குற்றம் சாற்றியவன் அடுத்த தொடரில் நேரிடையாகவே கேட்டு விட்டான் வேறுவிதமாக.

கவிதீனா "எனக்கு வேலை போயி பதினஞ்சு நாள் ஆகுது. ஆனா நீ என்ன ஏதுனு போன்ல கூட கேக்கல. நான் போன் பண்ணாலும் எடுக்கல. என்னைவிட நீ எதுலயோ மாட்டிகிட்டு வெளில சொல்லாம கஷ்டப்படுறனு தோணுச்சு. அதான் உன்ன பாக்க  வீட்டுக்கே வந்துட்டேன்"

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Où les histoires vivent. Découvrez maintenant