பூவே: 13

136 7 45
                                    


தாரணி மருத்துவமனை.

நண்பகல் வேலையில் OP patientsஐ பார்த்துவிட்டு அமர்ந்திருந்தாள் ரதிநந்தனா. பொதுவாக, இப்படியான நேரங்களில் தனிமை கிடைத்தால் தேர்வின் உபயோகமாக பார்த்து கொண்டிருப்பாள். வேறெந்த குறிக்கோளும் கடமையும் இல்லாத பட்சத்தில் இந்த தேர்வு  அவளிடத்தில் முதன்மை பெற்றிருந்தது. ஆனால், இன்று ஏனோ மனம் அமைதியை நாடியது. நிச்சலனமாய் அவள் இருக்க, வெளியில்

"வேளா வேளைக்கு சாப்ட்டிருந்தா இந்த மயக்கம் தேவையாடி? என் உயிர வாங்கன்னே வந்து பிறந்திருக்கடி பிசாசே!" கரகரப்பான இளைஞன் ஒருவனின் குரல் தொடர்ந்து பெண் ஒருத்தியின் சோர்வான குரல்.

"ப்ளீஸ்டா தலை ஃபுல்லா வலிக்குது நீயும் இதுல திட்டாத. கொஞ்ச நேரம் உட்காந்துட்டு கிளம்பலாம்"

காற்றுக்காக திறந்து வைத்திருந்த கதவின்  இடைவெளியில் சூழ்ந்திருந்த அமைதியின் நடுவில் அவர்களது பேச்சு குரல் தெளிவாக கேட்டது. உருவம் தெரியவில்லை எனினும் அவன் அதட்டலும் அவள் கெஞ்சலும் ரதிக்கு குறுஞ்சிரிப்பை தோற்றுவித்தது.

"பின்னாடி தல சாய்ச்சு  கண்ண மூடிக்கோ" என்றான் அக்கறையாய்.

ரதியின் மனம் அடித்து சொன்னது 'அவர்கள் நண்பர்கள்தான்' என்று.

மறுநொடி மருத்துவராய் மனம் யோசிக்க, உடனே அதற்கும் பதில் கிடைத்தது.

"டாக்டர கூப்பிடவாடி"

"வேணாம்ப்பா இப்போதான பாத்தோம். நைட் சரியா தூங்கல அதுனால தல வலிக்கும். வீட்டுக்கு போய் தூங்கினா சரி ஆகிடும். கால் பண்ணியாச்சு அப்பா ஃபிப்டீன் மினிட்ஸ்ல வந்துடுவாங்க. அதுவரைக்கும் இங்கே இருக்கலாம்" என்றாள் தெளிவாக.

"ம்ம் உனக்கு பிரண்ட்டா வாச்சத்துக்கு நாம் பாவம்னா உன் அப்பா ரொம்ப பாவம்டி..." அவன் பொய்யாய் சலித்துக்கொள்ள

அவன் பிரண்ட் என சொன்னதும் ரதியின் மனதில் தன்னை நினைத்தே ஒரு மெச்சுதல்!  அவள் மனம் மேலும் சுவாரசியம் ஆனது.

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Where stories live. Discover now