பூவே 19

128 10 21
                                    

பூவே: 19

அன்று கவிதீனா வீட்டில்!

கவிதீனாவை பார்த்துவிட்டு ரதியும் அஜய்யும் வெளியே வந்த பின்...

ரதி "அண்ணா கவிதீனாக்கு சொந்த ஊர் சென்னையா?"

'இவனை பற்றி ஏன் கேட்கிறாள்? அதுவும் இத்தனை உரிமையாய்!'

அஜய் "கிட்டதட்ட"

ரதி "அண்ணா ப்ளீஸ். என்னோட கேள்விகளுக்கு  தெளிவான பதில் வேணும்"

அவனுக்கு தெரிந்த வகையில் ரதிநந்தனா எதையும் காரணமின்றி கேட்பவள் அல்ல. அதனால் அஜய் ஒரு முடிவாக பேசலானான் "அவனுக்கு சென்னை சொந்த ஊரு இல்லமா. காலேஜ்காக இங்க வந்தவன் சென்னை பழகி இங்கே இருந்துட்டான்"

"ஹ்ம்ம்!" என இழுத்தவளின் முகத்தில் அடுத்த கேள்வியை கேட்பதற்கான ஆயத்தம் நடந்தது. இன்று கிடைத்த வாய்ப்பு போல்
இனி கிடைக்காது.
ஆதலால், வாய்ப்பை பயன்படுத்திகொள்ள நினைத்தாள். இதனால், தான் என்னென்ன கேள்விகளுக்கு ஆட்படுவோம் என
அறிந்து அதற்கும்
பதிலை ஆயத்தம் படுத்திக்கொண்டாள்.

"அண்ணா... எனக்கு உங்க பிரண்ட் கவிதீனா மேல நன்றிக்கடன் அளவிலான அக்கறை இருக்கு. கவிதீனா நல்ல லைப் லீட் பண்ண என்னால உதவி பண்ண முடியும்னா நான் யோசிக்காம செய்வேன். இப்போ நேரா கேள்விக்கு வரேன்"

"உங்க காலேஜ் செகண்ட் இயர் டைம்ல நானும் கவியும் தற்செயலா மீட் பண்ணிருக்கோம். நாலு மணி நேரம் ட்ராவல் பண்ண வேண்டிய சூழ்நிலை.
அதுனால கவிதீனா பத்தி ஃபுல்லா தெரியுமான்னு கேக்காதீங்க. Changes கண்டுபிடிக்கிற அளவுக்கு கவிதீனா பத்தி தெரியும்னு எனக்கு தோன்றின கேள்விகள் மூலமாத்தான் நானே தெரிஞ்சிகிட்டேன்.

வயசு ஏற ஏற நம்மகிட்ட மாற்றங்கள் வரது பொதுவானது.
அதுவே அவங்க
கேரக்டர் மாறுதுன்னா
கடந்த காலம் கசப்பான அனுபவங்கள் காரணமா இருக்கலாம்.
பழச விடவும் முடியாம
புதுச ஏற்கவும் முடியாமதான் இங்க பெரும்பாலும்
நம்ம வாழ்ந்திட்டு இருக்கோம். கவி ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்காங்க. அதனுடைய வெளிப்பாடுதான் இப்படி ட்ரிங்க்ஸ் பழக்கம்னு எனக்கு தோணுது. நான் இப்போ டாக்டரா கேக்கல. உங்கள மாதிரி கவியோட நலம்விரும்பியா கேக்குறேன்.

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Donde viven las historias. Descúbrelo ahora