டிங் டாங் - 5

686 34 12
                                    

ஒரு வாரம் சென்றிருந்தது வீட்டின் விசேஷம் முடிந்து வீட்டில் பொருட்கள் அனைத்தும் ஒருவாறு சேர்க்க வேண்டிய இடத்தில் ஒதுக்கியும் வைத்துவிட்டனர். 

செங்கோட்டை வந்த இரண்டே நாளில் கடமை அழைக்கத் தலைமை ஆசிரியராகப் பள்ளியில் சேர்ந்தவருக்கு மாலை என்ன... மரியாதை என்ன... மனிதன் மகிழ்ச்சியில் திளைத்தே வீடு வந்து சேர்ந்தார். வீட்டிற்கு வந்து மனைவி மக்களிடம் நடந்தவற்றை எல்லாம் சிறு பிள்ளை போல் பகிர்ந்துகொண்டவரைப் பார்த்து மகாலட்சுமிக்குப் பூரிப்பு தாங்க இயலவில்லை கண்ணீரைக் கூட வரவழைத்தது. 

"இந்த மரியாதை எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா மா? வெறும் வாத்தியாரா இருந்து சேவை செஞ்ச எனக்கு இவ்வளவு மரியாதை எல்லாம் கிடைக்கும்னு நினைக்கவே இல்ல..." கட்டுக்கடங்கா மகிழ்ச்சி அவரிடம். 

"உன்னோட உழைப்புக்கும் நேர்மைக்கும் கெடச்ச மரியாதை ராசா இது" சுப்பிரமணியத்தின் அன்னை மகனைப் பார்த்து பெருமிதமாகப் பாராட்டினார். 

மகாலட்சுமிக்கும் இந்த ஊர் பிடித்துப்போக இயற்கையோடு ஒன்றி இயற்கை குணம் மாறாமல் குணத்திலும் இருக்கும் உற்றார்கள் கிடைத்ததில் அவருக்கு இன்னும் மகிழ்ச்சி. மகேஸ்வரியின் அறிமுகம் கிடைக்க மகேஸ்வரி மஹாலக்ஷ்மியை அழைத்துச் சென்று அருகில் இருக்கும் சில மளிகைக் கடைகள், சந்தை, பால் வியாபாரிகள் என அவருக்குத் தெரிந்ததை அனைத்தும் காட்டி அருகில் இருக்கும் சில வீட்டினருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். 

இதை விட இல்லத்தரசிகளுக்கு என்ன வேன்டும்? மனதில் இருக்கும் பாரத்தை உடன் பிறவா சகோதரியாய் நினைத்துப் பேசப் பெண்கள், குப்பையைக் கொட்ட வரும் சமயங்களில் சில கிசுகிசுப்புகள் என மகாலட்சுமிக்கு இந்த கிராமத்து வாழ்க்கை சீக்கிரமே தொற்றிக்கொண்டது. 

"ரொம்ப தேங்க்ஸ் வைஷ்ணவி மா" என்றார் மஹேஸ்வரியிடம். 

"இருக்கட்டும் சஹானா மா... இதுக்கும் மேல உங்களுக்கு ஏதாவது வேணும்னா வைஷ்ணவி கிட்ட கேளுங்க... என்ன விட, இவங்க அப்பாவை விட அவளுக்குத் தான் இந்த ஊர் அத்துப்படி" புகழ்ச்சியிலும் மகளைக் கிண்டல் தான் செய்தார் அவர். 

டிங் டாங் காதல்Wo Geschichten leben. Entdecke jetzt