உணவை முடித்து மொட்டை மாடியில் தன்னுடைய அறைக்கு அருகில் இருந்த துணியை காய வைக்க வேண்டி வைஷ்ணவியின் அன்னையின் வேண்டுதலின் பெயரில் போடப்பட்டிருந்த ஷெட்டில் அடம் பிடித்து ஒரு மூங்கில் நாற்காலியில் அமர்ந்து தீவிரமான யோசனையில் இருந்தாள்.
கூடவே இரண்டு முறை கீழே சென்று இரவு உணவை முடித்து கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்த கார்த்தி வேறு அவளது யோசனையை பலப்படுத்திவிட்டிருந்தான். கைபேசியில் மணியை பார்த்தாள்... இரவு பத்து முப்பதை தாண்டி இருந்தது.
"தூங்கிருப்பாளோ" யோசித்தவள் உதட்டை சுளித்து, "எந்திரிக்கட்டும்" அழைத்துவிட்டாள் ஷெர்லின் எண்ணிற்கு.
இரண்டு ரிங்கிலே அழைப்பை ஷெர்லின் ஏற்ற உடன், "உள்ளம் மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்"
வைஷ்ணவி ராகம் இழுக்க அந்த பக்கம், "என் நண்பன் போட்ட சோறு உப்பு கரிக்கும் பாரு... நட்பை கூட தேர்வு செய்வதில் தவறினேன்..."
பல்லை கடித்து எச பட்டு பாடிய ஷெர்லின் எரிச்சல் இங்கு வைஷ்ணவிக்கு தெரிந்தாலும் காரியமே கண்ணாய் , "ஏன் ஏகாம்பரம் இந்த எதுத்த வீட்டு கார்த்திக் பத்தி நீ என்ன நினைக்கிற?"
"இப்ப தானே தெரியுது மாட்டுக்காரன் பட்டு பாடுறது மாட்ட சிரிக்க வைக்க இல்ல, மாட்டோட பால கறக்க-னு"
"ஆம்பள மாட்டுக்கு பால் கறக்க மாட்டாங்களே ஏகாம்பரம்" - வைஷ்ணவி
"அதுக்கு காளை மாடுன்னு பேர் இருக்கு இன்சு. இது கூட தெரியாம சில ஜீவன்கள் பி.ஈ டிகிரி வாங்கி கட்டடம் கட்ட போய்டுச்சுக" - ஷெர்லின்
"மனுசங்க மனச படிக்க தெரிஞ்சவங்க, உலகத்தை படிக்க மறந்துர்ரது தப்பா தான் இருக்கு பாரேன்... சரி ஆம்பள மாடு மேட்டர்க்கு வா நீ" பொறுமை இல்லை வைஷ்ணவிக்கு.
"ம்ம்ம் உனக்கு கொஞ்சம் கூட செட் ஆகாத அப்பாவி பையன்"
நெஞ்சை பிடித்து, "யோவ் ஏட்டு மனச செதச்சிடயா மனச செதச்சிட்ட" போலியாக நடித்தாள்.
ESTÁS LEYENDO
டிங் டாங் காதல்
Romance"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...