டிங் டாங் - 7

609 33 8
                                    


நெடுஞ்சாலையை தாண்டி இரண்டு பக்கமும் மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த சாலையில் மிதமான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது அந்த சுசூகி அக்சஸ் 125. மொத்தமும் தென்னை மரங்கள், வாழை மரங்கள் மட்டுமே இருக்க அந்த கிளை சாலையில் ஆங்காங்கு ஓங்கி உயர்ந்திருந்த புளியமரங்களும் வாரி வாரி காற்றை கொடுத்தது. 

"இது தான் காலை பொழுதா? இவ்ளோ வெள்ளன நான் எந்திரிச்சு மூணு வருஷம் ஆச்சு. கொடும பண்றீங்க மை லார்ட்" மொத்தமாய் வண்டியை ஓடிக்கொண்டிருந்த வைஷ்ணவி மேல் சாய்ந்து புலம்பினாள். 

"வாழ்க்கைல முன்னேறுற எண்ணமே இல்ல, வெட்டி முண்டம் வீணா போன தெண்டமே" 

"எட்டு மணிக்கு வர சொல்லிட்டு எட்டு மணி வரைக்கும் தூங்குனவங்க எல்லாம் முன்னேற்றம் பத்தி பேசலாமா மை லார்ட்?" 

"பாவம் நைட் என்ன கழட்டுற வேலை இருந்துச்சோ விடுங்க ஷெர்லின்... சரி வண்டி ஓட்டுரியா?" - வைஷ்ணவி 

"கருமம் அதெல்லாம் எவன் பண்ணுவான்? இப்டி சொகுசா பின்னாடி ஒக்காருறோமா வேடிக்கை பாத்தோமா... கிராஸ் ஆகுற கார் குள்ள இருக்க பையன சைட் அடிக்கிறோமான்னு இருக்கனும்" - ஷெர்லின் 

"இப்டியே பேசிட்டே இரு அந்த கார்குள்ள உருட்டிவிடுறேன்... ச்ச இப்டியா போற வர்ற பசங்க எல்லாரையும் பாக்குறது... கூச்சமா இல்ல" - வைஷ்ணவி 

"அதெல்லாம் எதுக்கு அசிங்கமா வச்சிக்கிட்டு... ஏன் லார்ட் இந்த வாழை தோப்புல பாம்பு அதிகமா வரும்ல?" தாங்கள் செல்லும் பாதையில் நீண்டு கொண்டே சென்ற தோப்பை பார்த்து கேட்டாள். 

"வாழை தோப்புல பாம்பு வராம, பல்லியா வரும்" - வைஷ்ணவி "அப்றம் அத எப்படி வெரட்டுவாங்க?" - ஷெர்லின் 

"பூச்சி மருந்து இல்லனா கொசு மருந்து அடிச்சு விட்டா வராது மை லார்ட்" வண்டியை ஓடிக்கொண்டிருந்த ஸ்வாரஸ்யத்தில் என்ன பேசுகிறோம் என்பதையே தெரியாமல் வைஷ்ணவி உலர அதையும் அந்த சிறு பெண் நம்பிவிட்டாள். 

டிங் டாங் காதல்Onde histórias criam vida. Descubra agora