டிங் டாங் - 10

508 30 4
                                    


மாலை சுந்தரிடம் தான் செய்த வேலையை வைஷ்ணவி காட்டிவிட்டு கிளம்ப தனக்கு முன்னால் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டும் முயற்சியில் இருந்தான். வேகத்தை கூடி ஓடியவள் அவன் அருகே சென்றதும் வேகத்தை குறைத்து சாதாரணமாக நின்றாள். 

சிகையை சரி செய்து அவன் வாகனத்தை உயிர்ப்பிக்கும் முன்னர், "ஹாய்..." அழைத்தாள் அவனை. 

திரும்பி பார்த்தவன், "ஹாய்" என்றான். 

"வீட்டுக்கா போறீங்க?" - வைஷ்ணவி 

"ஆமாங்க" - கார்த்தி 

தயக்கமாய் நிற்பது போல் தயங்கி நின்று நடித்தவள் நடிப்பை நம்பியவன், "எதாவது வேணுமா?" பணம் கொண்டு வரவில்லையோ என்று கேட்டான் அவன். 

"இல்ல... இன்னைக்கு நான் விரதம். ஏதாவது சிவன் கோவிலுக்கு போய் தான் விரதத்தை முடிக்கணும். அம்மா குற்றால நாதன பாத்து விரதத்தை முடிச்சிட்டு வர சொன்னாங்க" 

"நான் வழி சொல்றேன் வாங்க" பைக்கை விட்டு இறங்கியவன் ஹெல்மெட்டை அவிழ்க்கும் முயற்சியில் இருக்க, பின்னால் இருந்து அந்த ஹெல்மெட்டில் அடிக்க கை ஓங்கியவள், 

'மவனே நீ கன்னி கழியாம தான்டா சாக போற' காற்றிலே அவன் தலைக்கு இரண்டு அடி வைத்து வயிற்றில் ஒன்றையும் மறக்காமல் வைத்து அவனை வளைத்து சென்று கண் முன்னே வந்து நின்றாள். 

"இல்ல இல்ல வழி தெரியும். ஆனா காலைல இருந்து சாப்புடாம இருந்ததுனால கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரி தலை சுத்துது"

அவள் எதை கேட்க வருகிறாள் என்று புரிந்தது ஆனால் உடன் அழைத்து செல்ல தயக்கம் அவனுக்கு. பெண்களோடு அதிகம் பழகியிராதவன் இல்லை, ஆனால் தன்னுடன் வாகனத்தில் ஏற்றி எங்கும் சென்றதில்லை இதுவரை. 

"ஒரு ஆட்டோ புடிச்சு தரீங்களா?" நல்ல பிள்ளையாக நாடகம் ஆடியவளை புரிந்துகொள்ளவில்லை அவன் புத்தி. 

"எப்படிங்க தனியா போவீங்க... வண்டில ஏறுங்க" தன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தவன் அவளை பார்க்க அவளோ தயக்கமாய் அவனை பார்த்தாள். 

டிங் டாங் காதல்Donde viven las historias. Descúbrelo ahora