ஞாயிற்று கிழமை மதிய உணவை முடித்து உறங்க சென்ற பெற்றோரையும் பாட்டியையும் பிடித்து அமர வைத்து தன்னுடைய அறைக்குள் மகன் சென்று கால் மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. சேர்மதாய்க்கு உறக்கம் கண்ணை திறக்க விடாமல் வைத்தது வயோதிகத்தை காரணத்தால்.
"என்ன மகா எதுக்கு நம்மள இங்க இருக்க சொல்லிட்டு எங்கனயோ அவன் போய்ட்டான்" சுப்பிரமணி புரியாமல் மனைவியிடம் கேள்வி எழுப்பினார்.
"தெரியலைங்க... நீங்க இருங்க அவன் வர்றதுக்குள்ள நான் ரெண்டு பாத்திரத்தை கழுவி வச்சிட்டு வர்றேன்" இல்லத்தரசி கடமையை செவ்வனே செய்ய துவங்கினார்.
"ஆமா உன்ர பொண்டாட்டிக்கு சாமான் செட்டு, பாத்திரம் தொலக்குறது தான் எந்நேரமும் வேலை... இவளுக்கு உன்ன கட்டி வைக்காம சமையல்கட்ட கட்டி வச்சுபுற்றுக்கணும் சுப்பிரமணி... சொன்னாலும் கேட்கவும் மாட்டா... ஏத்தா மடார்ன்னு முடிச்சிட்டு வா... பேரபுள்ள வரமுன்ன"
எப்பொழுது பார்த்தாலும் சமையலறை தான் மஹாலக்ஷ்மியின் வாசம். மூன்று வேளை வித விதமான உணவு, இடையில் மாலை ஆறு மணி போல் சிற்றுண்டி வேறு குடும்பத்தினரின் விருப்பத்தை பார்த்து செய்வார். அதனாலே தான் பொறுக்காமல் மாமியார் மருமகளை அழைத்தது.
"சரிங்க அத்தை" உள்ளிருந்து வந்தது பதில். சோபாவிற்கு நேர் எதிரில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் கைபேசியை பார்த்துக்கொண்டிருந்த மக்களிடம், "சுபத்ரா உனக்கு என்னனு தெரியுமா?" மகளையும் விடாமல் ஆர்வமாய் கேட்டார் சுப்பிரமணி.
கைபேசியிலிருந்து கண்ணை எடுத்து தந்தையை பார்த்தவள், "அப்பா எனக்கு அநேகமா அண்ணா பொய் சொல்றான்னு நெனக்கிறேன். மல்லாக்க படுத்து தூங்கிட்டு இருப்பான். மேல பாத்துட்டு வரட்டுமா?"
உறுதியாய் இல்லை என்று தலையை அசைத்தார் சுப்பிரமணி, மகனை பற்றி நன்கு தெரியும் அவருக்கு, பொறுப்புணர்வு, நிதானம், எதையும் யோசித்து செய்யும் குணம் அதிகம் உடையவன்... இது போன்ற சிறு பிள்ளை போல் எல்லாம் விளையாட மாட்டான்.
YOU ARE READING
டிங் டாங் காதல்
Romance"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு...