உயிரின் தாகம் காதல் தானே...💔04

1.9K 39 3
                                    

 

    மதி  மனதில் பயத்துடனே யோசனை செய்து கொண்டு இருந்தாள். அவளது பதிலுக்காக அவளை பார்த்தபடி இருந்தார் அன்பு செல்வன். அவர் சொல்வதை செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது ...ஏனெனில் அவளுக்கு இருக்கும் ஒரே உறவு கனகா மட்டுமே ..


'அவளது தாயை அவள் கண் முன்னே கொன்றதை போல இவரையும் ஏதாவது செய்து விட்டால்?' அந்த நினைப்பே அவளை பயமுறுத்தியது. அதற்கு மேல் சிந்திக்காமல்
" நீங்க சொல்றபடி நடந்துகிறேன்.." என்று ஒரே மூச்சாக கூறி முடித்தாள் மதியழகி. அவளது பதிலை கேட்டு வெற்றி புன்னகை ஒன்றை சிந்தியவர்
"மத்த டீடைல்ஸ் எல்லாம் அப்புறம் சொல்றேன்.. முக்கியமா நீ இதை கனகா கிட்ட சொல்லவே கூடாது.." என்று கூறிய படி அங்கிருந்து சென்று விட்டார்...


அவர் சென்றதும் அப்படியே அங்கேயே அமர்ந்து கொண்ட மதிக்கு சாத்விக்கின் நினைவு வந்து போனது ..
அவனுடன் ' அண்ணா... அண்ணா..' என்று சுற்றித் திரிந்தவள் தான். ஆனால் இப்போது அவள் அவனுடன் பேசுவது  கூட இல்லை.


இதற்கு காரணமும் இந்த வீட்டு ஆட்கள் தான் ..அவனுடன் பேசக் கூடாது என உறுதியாக கூறி விட்டனர் அவளிடம் ..
அதிலிருந்து அவனுடன் பேசுவது இல்லை அவள்.
அவனாக அழைத்தும் பேச மறுத்ததாள். கனகாவுக்கு அழைத்து மதி எப்படி இருக்கிறாள் என நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வான் அவன்..

சாத்விக் கனகாவிடம் விசாரிப்பதை அறிந்த போதும் அதை காட்டிக் கொள்ளவில்லை மதி.. இன்று இதை அவனிடம் சொன்னால் என்ன என்று அவளுக்கு தோன்றாமல் இல்லை. ஆனால்  கனகாவும் அவளுடைய தாயின் மரணமும் கண்முன்னே வர அதை தனக்குள்ளே புதைத்துக் கொண்டாள் மதியழகி....


************************


     ஊரை விட்டு சற்று தள்ளி அமைந்து இருந்த அந்த  பங்களாவையே  தனது பெரிய விழிகளால் பயத்துடன் பார்த்த படி நின்று இருந்தாள் மதி. அவள்  அருகில் அந்த வீட்டில் அதிக நாட்களாக வேலை செய்யும் சுமதி நின்று கொண்டு இருந்தார்.


உயிரின் தாகம் காதல் தானே...Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ