உயிரின் தாகம் காதல் தானே..💔20

2K 38 7
                                    

" என்ன அண்ணா இப்ப தான் வர்ற.. இவ்வளவு நேரம் எங்கே போயிருந்த?"
என்று தனது அருகே வந்து நின்ற அண்ணனை பார்த்து கேட்டாள் மதியழகி.

"ஓ அதுவா தெரிஞ்சவங்க ஒருத்தரை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்தேன்மா.. அதான் பேசிட்டு இருந்தேன் .."
என அவளிடம் பொய் கூறி சமாளித்தான் சாத்விக். அதை அவளும் நம்பி விட்டாள்.
சாமி கும்பிட்டு விட்டு இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர் .

தங்கைக்கு தெரியாமல் அவனது கண்கள் வருணிகாவை அந்த இடம் எங்கும் தேடின.
ஆனால் அவன் கண்களுக்கு அவள் தென்படுவதாக இல்லை. ஏதோ ஒரு ஏமாற்றம் உடல் முழுவதும் பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதை அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது தான் உண்மை.

மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டவன் தங்கையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
வேலைகள் அனைத்தையும் ஒழுங்கமைத்து கொடுத்தவன் மதியழகியை பொறுப்பாக இருக்கும் படி கூறி விட்டு தனது வேலையை கவனிக்க அவன் சென்ற பிறகு மதியழகி தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டாள்.

அன்றிலிருந்து மதியழகியின் நாட்கள் பெரும்பாலும் அந்த இடத்திலேயே கழிந்தன.
மீண்டும் ஷியாம் சுந்தரை சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவே இல்லை.
அதுவே அவளுக்கு நிம்மதியை கொடுத்தது எனலாம். பகல் நேரங்களில் வேலை செய்வதும் இரவானதும் தனது இரு குழந்தைகளுடனும் நேரத்தை செலவழிப்பதுமாக அவளது நாட்கள் கழிந்தன.

தினமும் அண்ணனை கஷ்டப்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் ஸ்கூட்டியில் தான் வேலைக்கு செல்கிறாள் அவள். அன்றும் வேலை முடிய சற்றே நேரமானதால் இரவு 7 மணி போல் தான் வீட்டுக்கு கிளம்பினாள். அவள் செல்லும் வழியில் பொதுவாக ஆட்கள் நடமாட்டம் பகல் வேலைகளிலும் இருப்பது இல்லை .இப்போது இரவு நேரம் என்பதால் யாருமற்ற வீதியே அவளது கண்களில் பட்டு மனதில் சிறிது பயத்தையும் தோற்றுவித்தது .

அவள் அன்னை தந்தையுடன் இருக்கும் போதும் சரி அவர்கள் இறந்த பின்பும் சரி இப்படி இரவு நேரத்தில் தனியே வெளியே சென்றது இல்லை.
சிறிது தூரம் தனியே சென்றவளுக்கு அதுவே பழகிப்போக மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த பாதையில் சென்றாள்.

உயிரின் தாகம் காதல் தானே...Où les histoires vivent. Découvrez maintenant