உயிரின் தாகம் காதல் தானே..💔10

1.9K 37 2
                                    

   கையில் கத்தியை வைத்தபடி நின்று இருந்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டு கழுத்தை நோக்கி அதனை உயர்த்தினாள் ‌. மூடி இருந்த கண்களுக்குள் அவளது தாய் தந்தையின் முகம் வந்து போனது அந்த நொடிப் பொழுது .

    "மதிம்மா வாழ்க்கை என்பது நீ நினைக்கிற மாதிரி ஈசி இல்லை. வாழ்க்கையில நிறைய போராடனும். கஷ்டத்துக்கு மத்தியில் தான் வாழ்ந்தாகணும். போராடி ஜெயிக்கும் போது தான் வாழ்க்கை அழகா மாறும்.
என்ன கஷ்டம் வந்தாலும் உன்னோட தைரியத்தை நீ இழக்கவே கூடாது. தைரியமா இந்த உலகத்துல வாழனும்."
என்று அவனது அன்னை அவளிடம் கூறியது நினைவில் வந்து செல்ல கையை கீழே இறக்கி விட்டாள்.


எந்த பிரச்சினை வந்தாலும் தற்கொலை அதற்கு தீர்வாகாது என்றும் தற்கொலை செய்து கொள்பவன் கோழை என்றும் தோன்ற அந்த நொடியே தற்கொலை செய்யும் தனது முடிவை கை விட்டு விட்டாள் அவள்.


தனது விருப்பம் இல்லாமல் தானே அவன் தன்னை எடுத்துக் கொண்டான்.
அப்படி இருக்கையில் தான் தப்பானவள்  இல்லை என மனதில் ஒருவாறு உறுதியான முடிவை எடுத்தவள் மனதை கல்லாக்கி கொண்டு அன்றைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டாள்.

**********************

"பாட்டி இந்த மதி எங்கே போனா?
என்னோட வர்க் எல்லாம் அப்படியே இருக்கு.
அது மட்டுமா அவளை வேலை வாங்காம எனக்கு போர் அடிக்குது பாட்டி .."
என்று கூறிய படியே  சோபாவில் அமைந்திருந்த பாட்டியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் மயூரி.


பாசமாக அவளது தலையை தடவி விட்ட வடிவுக்கரசி
"உன் அப்பன் தான் ஏதோ வேலையா அனுப்பி இருக்கான் போல .
சனியன் தொலைஞ்சதுன்னு விடாம நீ ஏன் அவளை தேடுற...'
என்று கூறவே


"அதுவும் சரி தான்
பாட்டி. அவ  இருந்தா அவளை திட்டி வேலை வாங்கலாம். இப்போ ஒரு என்டர்டெயின்மென்ட் மிஸ் ஆச்சு.."
என்று சோகமாகவே சோகமே உருவாகக் கூறினாள்  வடிவுக்கரசியின் அன்பு பேத்தி மயூரி .

உயிரின் தாகம் காதல் தானே...Où les histoires vivent. Découvrez maintenant