உயிரின் தாகம் காதல் தானே..

4.6K 35 3
                                    




டீசர்...

"ஏய் நான் எழுந்தது கூட தெரியாம என்னடி பண்ணிட்டு இருந்த? போ போய் எனக்கு காபி கொண்டு வா..."

என்று மேலும் சத்தம் போட அதே அமைதியுடன் சமையலறைக்குள் சென்று அவருக்காக காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் நீட்டினாள்..


அதை வாங்கி ஒரு வாய் குடித்தவர் அப்படியே அதை தரையில் விசிறி அடித்தார்..

அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள் மதியழகி..


" என்னடி இது மனுஷன் குடிப்பானா இதை.. தண்டம்.. தண்டம் .. இவ ஆத்தக்காரி என்னத்தை சொல்லிக் கொடுத்தாளோ.. ஒரு காபி கூட போட தெரியல.."

என அவளை மட்டுமல்லாது இன்று உயிருடன் இல்லாத அவளது அன்னையையும் சேர்த்து திட்டினார் வடிவுக்கரசி..


*************

கனகாவிற்கு அழைத்து அவரை பேசவிடாமல் கண்ணீருடன் பேசிக்கொண்டு இருந்தவளின் கையில் இருந்த போன் திடீரென பறிக்கப்பட திடுகெட்டு திரும்பிப் பார்த்தாள் மதி..

அங்கு அவளிடம் இருந்து போனை பறித்து அதனை ஆராய்ந்த

ஷியாம் சுந்தர் மீண்டும் தனது காதில் வைக்க

"ஹலோ... ஹலோ.. மதிமா உனக்கு என்ன ஆச்சு.?" என்ற கனகாவின் குரலே கேட்டது.. அடுத்த கனமே போனை தூக்கி தரையில் அடிக்க அது சுக்கு நூறாக உடைந்து போனது..


**************

அவளது தலையாட்டலை கண்டவனும் "ச்சூ...ச்சூ இதை நீ முன்னாடியே யோசிச்சு இருக்கணும் மதியழகி.. டூ லேட்...." என்று அவளுக்காக பாவப் படுவது போல கூறினான்.

அதில் சட்டென நிமிர்ந்து மதி அவன் முகம் நோக்கினாள்.

அவன் இதழ்கள் சிரிப்பில் விரிந்து இருந்தாலும் கண்கள் கோவத்தில் பளபளத்தன. அந்த கண்களை பார்க்கையில் இறையை வேட்டையாட காத்திருக்கும் சிங்கத்தின் நினைவே வந்து போனது பெண் அவளுக்கு..


"அந்த வீணாப்போன அன்பு செல்வன் பேச்சை கேட்டு என்னோட கோட்டைக்குள்ள வந்து சிக்கிக்கிட்ட.. இங்க இருந்து நீ நினைக்கிற அளவு ஈசியா எல்லாம் தப்பிச்சிட முடியாது ...எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு மதியழகி.."


என கூறியவன் எழுந்து அவளை நோக்கி வந்து அவளது முகத்தை தன் கை கொண்டு நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தான்.

*************

மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல பயத்தில் நடுங்கினாள் மதியழகி.. அவனோ அவளது காதுக்கருகில் இதழ்களை கொண்டு சென்றவன்

"வெல்கம் டு த லயன் கேவ் பேபி..." என மெல்லிய குரலில் கூறிவிட்டு நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்..

அதில் 'என்னை விட்டு விடேன்'என்ற கெஞ்சல் நிறைந்திருந்தது.. அவன் ஒன்றும் சராசரி மனிதன் இல்லையே தப்பு செய்தவரை போகட்டும் என்று மன்னித்து விட.. அவனுக்கு தப்பு செய்தால் பெண்ணும் ஒன்றுதான் ஆணும் ஒன்றுதான்..

உயிரின் தாகம் காதல் தானே...Donde viven las historias. Descúbrelo ahora