உயிரின் தாகம் காதல் தானே 💔 25

2.2K 40 2
                                    


உடல் அசதியால் தன்னை மறந்து நீண்ட நேரம் தூங்கியவள் கண் விழித்து பார்க்க குழந்தைகள் இருவரும் இன்னுமே எழுந்து கொள்ளவில்லை .
அவள் எழுந்ததை அறிந்து கொண்டவன் போல் எங்கிருந்தோ வந்தான் ஷியாம் சுந்தர்.

அவளோ அவனை கேள்வியாக பார்க்க
"இனிமேல் இங்கே கீழே தூங்குற வேலை எல்லாம் வச்சுக்காத.. பசங்க பாத்தாங்கன்னா ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பாங்க.. இவ்வளவு பெரிய கட்டில் இருக்கு தானே அதிலேயே தூங்கு.."
என்றான் குழந்தைகளுக்கு கேட்டு விடாத மெல்லிய குரலில்.

அவளும் அதே மெல்லிய குரலில் "என்னால் இந்த கட்டிலில் படுக்க முடியாது.
இந்த ரூமே எனக்கு புடிக்கல..." என்று கண்களில் நீர் தேங்கி நிற்க கூறி முடித்தாள்.
" அப்படின்னா பசங்களுக்கு ஒரு ரூம் ரெடி பண்ணி இருக்கேன். அதுலையே தூங்கிக்க.." என்று கூறி விட்டு மீண்டும் எங்கோ சென்று விட்டான்.

'இவன் நல்லவனா கெட்டவனா?' என்ற கேள்விதான் தோன்றியது அவள் மனதில். அன்று மாலை குழந்தைகளுக்கு என்று ஒரு அறையை தயார் செய்து அதற்குள் மூவரையும் விட்டுவிட்டு வந்தான். தான்வி அவனுடன் வாய் ஓயாமல் பேச அன்னை மகன் இருவரும் முகத்தை உம்மென்று வைத்தபடி இருந்தனர் .

அதனை பார்த்து தனக்குள்ளேயே பெருமூச்சு விட்டுக் கொண்டவன் ஆருத்தின் கன்னத்தை தட்டி விட்டு வெளியே சென்றான்.

இப்படியே அவர்களது நாட்கள் கழிந்தன ..
தான்வி மட்டுமே ஷியாம் சுந்தருடன் பேசுவாள்.
இருவரும் அவனுடன் பேசுவது இல்லை .
அவனும் காலப்போக்கில் மகன் தன்னுடன் பேசுவான் என்று நம்பிக் கொண்டு இருந்தான்.

மீனா மட்டும் மதி அழகியுடன் நன்கு பழகினார். வருணிக்கா மட்டும் பேசுவதே இல்லை. ஒரு புன் சிரிப்புடன் கடந்து விடுவாள் அவள். மதியழகியும் இதனை எல்லாம் கண்டு கொண்ட போதும் அதனை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வருணிகாவிற்கு அவளை தப்பாக நினைத்து பேசியதினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி. அதனால் தான் மதியுடன் எப்படி பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்து விட்டாள்.

உயிரின் தாகம் காதல் தானே...Dove le storie prendono vita. Scoprilo ora