உயிரின் தாகம் காதல் தானே 💔 29

2.3K 45 19
                                    


இப்போது அவளிடம் சென்று காதல் என்ற வார்த்தையை கூறினால் அவனது முகத்திலேயே காரி உமிழ்ந்து விடுவாள்.. முதலில் அவனுக்கே அது காதல் என்று தெரியாது.. யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவனுக்கு மதியழகி மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.

அதனை காதல் என்றும் சொல்லி விட முடியாது ஏனெனில் அதற்கு அர்த்தம் அவனுக்கே தெரியாத போது அவன் எப்படி சொல்வான்?
அது இன்று நேற்று தோன்றியது அல்ல ...
சிறு வயது முதலே மதியழகி என்றால் அவனுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு..அன்பு.. பாசம் ...

அவனது தந்தை சேகரும் மதியழகியின் தந்தை அன்பரசனும் நண்பர்கள்.. அப்போது தான் அவனுக்கு மதியழகியை தெரியும்.. இருவரும் தொழில்முறை நண்பர்கள் என்பதால் மீனாவிற்கு அன்பரசனுடன் அதிக பழக்கம் இல்லை.. ஒரு முறை பார்த்தது உண்டு அவ்வளவே ..அதனால் அவர்களது குடும்பம் பற்றி மீனாவுக்கு எதுவுமே தெரியாது..

ஆனால் ஷியாம் சுந்தர் தந்தையுடன் ஜாக்கிங் செல்லும் போதெல்லாம் அன்பரசனுடன் வரும் குட்டி மதியழகியை காண்பது உண்டு ..
அவளைத் தூர இருந்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வான் அவன்.
அவள் முன்னால் போய் நின்றதே இல்லை.. அதனால் மதியழகிக்கு அவனை தெரியாமல் போனதுதான் விதி..

இப்படியே சில காலம் ஓடிவிட சேகர் மாரடைப்பில் இருந்து போனார் ..
காரணம் தொழிலில் ஏற்பட்ட நட்டம் என்றும் அவரது தொழில் பார்ட்னர் அன்பரசன் தான் அவரை ஏமாற்றி விட்டார் என்றும் பேசிக்கொண்டனர் தொழில் வட்டாரத்தில்.

தந்தையின் இறப்பினால் தாயும் உடைந்து போய்விட ராகவ்வின் உதவியுடன் தான் தொழிலை படிக்கும் போதே கையில் ஏற்றான் அவன்.. சிறிது சிறிதாக தொழிலில் முன்னேறினான்  அவன்.
அவர்களை பழிவாங்க வேண்டும் என அவன் நினைத்து இருக்க அன்பரசன் இறந்த செய்தி அவனது காதுகளை வந்து அடைந்தது.

' கடவுள் கொடுத்த தண்டனை' என்று நினைத்து அத்துடன் அதை விட்டுவிட்டான். இடையிடையே மதியழகியின்  நினைவு  வந்து போகும். ஆனால் அதை புறம் தள்ளிவிட்டு படிப்பிலும் வேலையிலும் கவனம் செலுத்தி முன்னேறினான்.. எத்தனையோ பெண்கள் காதலை அவனிடம் சொல்லியபோதும் டேட்டிங் என்று அவனை அழைத்த போதும் மதியழகியை மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவர்களை எல்லாம் மறுத்து விடுவான் அவன்.

உயிரின் தாகம் காதல் தானே...حيث تعيش القصص. اكتشف الآن