உயிரின் தாகம் காதல் தானே..💔14

1.8K 37 7
                                    


தோளில் கிடந்தவளை சமையலறைக்கு தூக்கிக் கொண்டு வந்தவன் தொப்பென்று கீழே போட்டு விட்டான் . அவன் போட்ட வேகத்தில் தரையில் வந்து விழுந்தவளுக்கு வலி உயிர் போனது.
" அம்மா.."
என்று வாய் விட்டே சத்தம் போட்டாள் பெண்ணவள்.

அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்  அங்கே இருந்த கேஸ் அடுப்பை பற்ற வைத்தவன் அருகில் இருந்த ஒரு கத்தியை கையில் எடுத்து நெருப்பில் பிடித்து சூடு படுத்தினான்.
அதனை கண்டவளுக்கு எழுந்து ஓடவும் முடியாமல் அவன் கீழே போட்டதில் உடல் வலித்தது.

நன்றாக அந்த கத்தியை சூடு படுத்தியவன்  அதனை எடுத்துக் கொண்டு வந்து அவள் முன்னே குனிந்து அவளது காலை பற்றினான். அவள் கால்களை  இழுத்துக் கொள்ள போராட அதையெல்லாம் புறம் தள்ளியவன் அவளது காலை இருக்க பிடித்து "இந்த கால் தானே தப்பிச்சு போக பார்த்தது.."
என்று கூறிய படியே சூடாக்கிய கத்தியை அவளது இரண்டு உள்ளங்கால்களிலும் வைத்து இழுத்தான்.

"ஐயோ அம்மா.." என்று அவள் கத்தியது வெளியே நின்று இருந்த  வாட்ச்மேனுக்கும் கேட்டு இருக்கும். அவன் கத்தியை இழுத்த வேகத்தில் அதன் வெட்டு முனையினால் கால் வெட்டுப் பட்டு இரத்தமும் கசிந்தது.
ஒரு பக்கம் சூட்டு புண் மற்றைய பக்கம் வெட்டு காயம் என்று அந்த வலியை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

" இனிமே இப்படி தப்பிச்சு போக எந்த பிளானும் போடக் கூடாது ரைட்.."
என்று அவளது கன்னத்தை தட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டான் அவன்.
உயிர் போகும் வலியை உணர்ந்த போதும் சொல்லி அழக்கூட  யாரும் இல்லாத நிலை தான் அவளுக்கு.


அழுதழுது தூங்கி விட்டு இருந்தாள் தன்னையும் அறியாமல். விடிந்த பின்னும் அவளால் எழ முடியாமல் போகவே அப்படியே தரையிலேயே படுத்துக் கொண்டாள். காலை கீழே வைக்கவே முடியாதவாறு காயம் இருந்தது .
அன்று உணவு சமைக்கவும் இல்லை அவள்.. வீட்டு வேலை செய்யவும் இல்லை..

நேரம் கடந்த போதும் அவனது சத்தம் அன்று அவளது காதில் கேட்கவே இல்லை .
காலில் உள்ள காயத்துக்கு ஏதாவது முதல் உதவி செய்ய வேண்டும் ..
இல்லை என்றால் அது இன்னுமே ஆபத்தாக மாறிவிடும் என்பதால் கையை பூமியில் ஊன்றி மெதுவாக எழுந்து நிற்க  அது முடியாமல் போகவே சட்டென்று சமையல் கட்டை பிடித்துக் கொண்டாள்.

உயிரின் தாகம் காதல் தானே...Donde viven las historias. Descúbrelo ahora