உயிரின் தாகம் காதல் தானே..💔05

1.8K 40 6
                                    

    தோட்டத்தில் அமர்ந்து இருந்தவள் சூரியன் மறைந்து இருள் பரவும் நேரம் தான் வீட்டுக்குள் சென்றாள். அந்த வீட்டில் இருந்த மற்றைய வேலையாட்கள் ஒவ்வொருவராக தங்களது வீட்டுக்கு செல்ல தொடங்கி இருந்தனர். இதற்கு மேல் அவள் இந்த பெரிய பங்களாவில் தனியாகத் தான் இருக்க வேண்டும்..

அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே வழுக்கிக் கொண்டு வந்து நின்றது ஷியாம் சுந்தரின் கார் ..
அதிலிருந்து வேக நடையோடு இறங்கி வந்தவன் அங்கு நின்று கொண்டு இருந்த மதியை ஒரு நொடி அழுத்தமாக பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு அதே வேகத்துடன் நகர்ந்து சென்றான்.

அவனைக் கண்டாலே தானாக பயம் வந்து ஒட்டிக் கொள்ளும் மதியழகிக்கு.
இப்போதும் நெஞ்சம் படபடக்க நின்று கொண்டு இருந்தாள் அவள். அந்த நேரம் அவர் இடுப்பில் சொருகி வைத்திருந்த ஃபோன் அலறியது.. அவள் பொதுவாக சுடிதார் தான் வீட்டில் இருக்கும் போது அணிவது ..ஆனால் இங்கே வருவதற்காக என்று ஒரு பாவாடை தாவணி செட்டும் எடுத்துக் கொண்டு வந்து இருந்தாள். ‌
மொத்தமே அவளிடம் மூன்று செட்  துணி தான் இருக்கும். அவைகளும் சாயம் போன பழைய உடைகளே. நல்ல உடைகளை தான் அந்த வீட்டில் இருப்பவர்கள் அணிய விடுவது இல்லையே.


அன்பு செல்வன் கொடுத்த ஃபோனையும் இடையில் சொருகிக் கொண்டு தான் அவள் வேலை செய்வது.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே தனக்கு கொடுக்கப் பட்டு இருந்த அறைக்குள் சென்று மறைந்தாள். வெளியே சத்தம் கேட்டு விடாமல் மெல்லிய குரலில்
"ஹலோ.." என்று மதி கூற அந்தப் பக்கம் இருந்த அன்பு செல்வன் கட்டளைகளை பிறப்பிக்க ஆரம்பித்து விட்டார்.



"ஏய் இங்க பாரு.. நான் சொல்றதை தெளிவா கேளு.. ஏதாவது சொதப்பின அப்புறம் இருக்கு உனக்கு.." என்று அவளிடம் முதலில் கூறி விட்டு இடையில் நிறுத்தினார்...
"ம்.." என மட்டுமே மதியால் கூற முடிந்தது.. அதையெல்லாம் கண்டு கொள்ளாத அன்பு செல்வன் மேலும் பேசலானார்..

உயிரின் தாகம் காதல் தானே...Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ