நாலு நாள் கழிச்சு.
நைட்டு ரகுவும் ரஞ்சித்தும் பேசிக்குறாங்க.
ரகு மூஞ்ச சீரியஸா வச்சு எதோ யோசிச்சிட்டு இருக்கான்.
ரஞ்சித் : மச்சான் சரக்கோட வந்து இருக்கேன்.
ரகு : சரக்கு வேணாம்.
ரஞ்சித் : ஏன்,ஆளு எதோ சைக்கோ ஆகி இருக்கா மாதிரி தெரியுது.
ரகு : சேது ஊருக்கு போனவன், ஒரு கால் பண்ணல, அவன் போன் கூட சுவிட்ச் off.
ரஞ்சித் : ஊர்லயே எதோ வேலையா இருப்பான்
ரகு : லூசு மாதிரி பேசாத டா, அவன் எப்பவும் ஊருக்கு போகரத்துக்கு ஒரு வாரம் முன்னாடி நம்ம கிட்ட சொல்லுவான். இந்த வாட்டி சொல்லல, என் கிட்ட மூஞ்ச காட்டி பேசமாட்டான், ஆனா அதையும் பண்ணான், ஊருக்கு போனா ரீச் ஆகிட்டு நமக்கு கால் பண்ணுவான். அதும் இல்லாம இது வரைக்கும் அவன் போன் சுவிட்ச் off ஆனதே இல்ல, இப்போ ஆகி இருக்கு.
ரஞ்சித் : நமக்கு அவன் அட்ரஸ் கூட தெரியாது, தெரிஞ்சா போய் பாக்கலாம்.
ரகு : வேற ஏதாவது வழி இருக்காணு யோசி.
ரஞ்சித் : அவன் தங்கச்சி.
ரகு : அவ பேரு, போன் நம்பர்னு எதும் தெரியாது.
ரஞ்சித் : அவ facebook id பேரு கீர்த்தி லிட்டில் பிரின்சஸ்
ரகு : சரி நான் பேசுறன்.
ரஞ்சித் : ஏன் நாங்க பேச மாட்டோமா.
ரகு மொறைக்கிறான்.
ரஞ்சித் : நீ பேசு டா, நீ சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும்.
ரகு facebook ல மெசேஜ் பன்றான், அவ ரிப்ளை பண்ணல
ரஞ்சித்க்கு சிரிப்பு வருது.
ரஞ்சித் : அவ ரிப்ளை பண்ணலயா, என் கிட்ட கெஞ்சி கேளு நான் பேசி நம்பர் வாங்குறன்.
ரகு மொறைக்கிறான்
ரஞ்சித் : சரி அட்லீஸ்ட் கேளு.
ரகு புருவத்த தூக்கி பாக்குறான்.
ரஞ்சித் : ஐயோ சரி டா பார்வையாலனா கேளு.
ரகு தலையை குனிஜிக்கிறான்.
ரஞ்சித் : சரி இது உனக்காக இல்லனாலும் சேதுக்காக பண்றன்.
ரஞ்சித் கொஞ்சம் நேரமா கீர்த்தி கூட பேசிட்டு இருக்கான், ரகு அவன ஆச்சரியமா பாக்குறான்.
ரஞ்சித் : அவ நாளைக்கு அவ ஆபீஸ்க்கு வர சொல்லி இருக்கா.
ரகு : போன் நம்பர் கிடைக்கலையா.
ரஞ்சித் : இது தான் அவ சொன்னா, stranger க்கு போன் நம்பர் குடுத்துடுவாளா.
ரகு : ஆமா நான் பேசுனா, பேசல, உன் கிட்ட எப்புடி பேசுனா.
ரஞ்சித் : உன் கிட்ட இல்லாதது, என் கிட்ட ஒன்னு இருக்கு.
ரகு : டேய்.
ரஞ்சித் : என் கிட்ட fake id இருக்குனு சொன்னேன் டா.
ரகு : என்ன சொல்லி பேசுன
ரஞ்சித் :சேதுவோட லவ்வர்னு சொன்னேன். நாளைக்கு மீட் பண்ணும்போது தான் அவுளுக்கே தெரியும், அவளை பாக்க வந்தது அழகான பெண் இல்ல ஒரு அழகான ஆண்னு.
ரகு :ஒய்.
ரஞ்சித் : சரி ரெண்டு அழகான பசங்க, ஓகேவா
ரகு : காட்டு அந்த fake id ய.
ரகு பாக்குறான்.
ரகு : டேய் இந்த fake id வச்சி எனக்கு ஹாய்னு மெசேஜ் அனுப்பி இருக்கல, நல்ல வேல உனக்கு ரிப்ளை பண்ணல, இல்லனா அத வெச்சு என்ன கலாய்ச்சு இருப்ப.
ரஞ்சித் : ஏன் ரிப்ளை பண்ணல.
ரகு : டேய் பொண்ணுங்கள நான் மதிக்கவே மாட்டேன், மௌனம் பேசியதே சூர்யா மாதிரி.தன்னடக்கமா இருக்கறது என்னோட குணாதிசயம், இதெல்லாம் பெருமையா கூட யாரு கிட்டயும் சொன்னது இல்ல.
ரஞ்சித் : ஓ நீ ஸ்வீட்டினு ஒரு பொண்ணு கூட மெசேஜ் பண்ணுவல.
ரகு : ஆமா. ஏன் கேட்குற
ரஞ்சித் : அது நான் தான்.
ரகு : டேய் என்ன டா இப்படி பண்ணிட்ட, நான் யாடாக்கூடமா பேசி இருக்கேனே டா.
ரகு, ரஞ்சித் சட்டைய புடிச்சு, ஏன் டா இப்படி பண்ண.
ரஞ்சித் : ஒரு நாள் நீ குடிச்சிட்டு, எந்த பொன்னும் என்ன லவ் பண்ணல, இன்னும் ஒரு மாசம் பாப்பேன், இல்லனா நீ பையனா இருந்தாலும் உன்னை லவ் பண்ணிடுவேன் சொன்ன.
ரகு : ஐயோ இனி குடிக்கவே மாட்டேன்.
ரஞ்சித் : நீ அப்படி சொன்னது, எனக்கு பயம் வந்துடுச்சி, நம்ம ஒரே ரூம்ல இருக்கோம், ஒரு வேல என் கற்புக்கு எதாவது பங்கம் வந்துடுமோனு , இந்த முடிவ எடுத்தேன்.
ரகு : டேய் எல்லாம் ஓகே ஒரு அக்கௌன்ட் நம்பர்க்கு பணம் அனுப்ப சொல்லி, நான் அனுப்புனேன் டா. துரோகி.
ரஞ்சித் : 2000 ரூபா, எதோ பெருசா ஏமாத்திட்டா மாதிரி சொல்ற.நீ பதிலுக்கு என்ன போட்டோ அனுப்புனேன்னு ஞாபகம் இருக்கா.
ரகு : டேய்,அத டெலீட் பண்ணிட்டல.
ரஞ்சித் : பின்ன, screen saver ah வச்சு பாத்துட்டே இருப்பாங்களா. எனக்கு அத பாத்து ரெண்டு நாள் ஜொரம்.
ரகு பெட்ல போய் படுத்துடுறான்.
ரஞ்சித் : சரக்கு உனக்கும் சேத்து வாங்கிட்டேன் டா, வா.
ரகு : சரக்கு அடிச்சிட்டு உன்னை போய் லவ் பண்ணுவேன் சொல்லி இருக்கேன்னு, அது மட்டும் இல்ல என் ஆழ் மனசுல உன்ன லவ் பண்ணனும் தோணி இருக்குது பாரு, அத நினச்சா தாண்ட என்னால தாங்க முடில.இனி குடிக்க மாட்டேன்.
ரஞ்சித் : என்ன காப்பாதிக்க Fake id ஒன்னு உருவாக்கிட்டேன் டா.
ரகு : ஐயோ நான் போய் தூங்குறேன்.
அடுத்த நாள்.
ரகுவும், ரஞ்சித்தும், கீர்த்திய பாக்க அவ ஆபீஸ் போராங்க.
ரகு : கீர்த்தி கிட்ட நீயே போய் பேசு.
ரஞ்சித் : எனக்குலாம் அவள பாக்க interest ey இல்ல, நீ சொல்றியேனு போறன்.
ரகு : சரி நீ இரு நான் போறேன்.
ரஞ்சித் : சும்மா விளையாடுனேன் டா, நானே போறேன்.
ரஞ்சித் பைக் கண்ணாடி பாத்து தலையை சீவிட்டு போறான்.
ரகு : டேய் இங்க வா, தலைய கல.
ரஞ்சித் : கொஞ்சம் நல்லா போனும்ல.
ரகு : ஷர்ட் பட்டன போடு.
ரஞ்சித் : இப்போ போலாமா.
ரகு : உனக்கு ஒன்னு சொல்றேன், உன்னோட நண்பனோட தங்கச்சி உன் தங்கச்சி.
ரஞ்சித் : அது நம்ம நண்பனோட தங்கச்சி நம்ப தங்கச்சினு சொன்னாலும், எனக்கு ஆறுதலா இருக்கும்.
ரகு : இப்போ போய் பேசு.
ரஞ்சித் to கீர்த்தி : ஹாய்.
கீர்த்தி : யார் நீங்க.
ரஞ்சித் : நேத்து facebookல பேசினது நான்தான்.
கீர்த்தி : ஏன் டா என்னோட அண்ணன் லவ்வர்னு சொல்லி fake id ல பேசி, இங்க வந்து ஏமாத்துறிங்களா டா.
ஆபீஸ்ல ஒரு பையன், என்ன கீர்த்தி எதுனா பிரச்னையானு கேட்குறான். விடு விடு இவன நானே பாத்துக்குறன் சொல்லிட்டு ஓங்கி ஒரு அரை வைக்கிறா ரஞ்சித்துக்கு, கீர்த்தி.
ரகு இத பாத்துட்டு, பதறி போய் ஓடி வரான்.
ரகு to கீர்த்தி : ஏய் என்ன ஆச்சு.
கீர்த்தி : இவன் நீ கூட்டிட்டு வந்த ஆளா. இவனையும் ஒன்னு வச்சா சரி ஆகிடும்.
ரஞ்சித் : அவன் என்ன மாதிரி இல்லமா, அவன் ஒரே ஆள் நாலு பேர அடிப்பான்.
ரகு : ஏய் என்ன ஓவரா சீன் போடுற, உன்ன லவ் பண்ணலாம் நாங்க வரல.
கீர்த்தி : வேற என்ன.
ரகு : உன் அண்ணன் friend ங்க நாங்க, அவனோட போன் ஸ்வீட்ச் off ல இருக்கு, அவன் சேஃபா இருக்கானானு உன் கிட்ட கேட்க தான் வந்தோம்.
ரஞ்சித் : இத புரிஞ்சிக்காம ஒரு அழகான பையன அடிச்சிட்டிங்க.
கீர்த்தி : இங்க பாருங்க, சேது பத்தி லாம் என் கிட்ட கேட்காதீங்க.
சொல்லிட்டு அந்த பொண்ணு நடந்து போறா.
ரகு : ஏய் நில்லு, நாங்க எவளோ சீரியஸா பேசுறோம்னு உனக்கு புரியுதா, அவனக்கு எதோ பிரச்னைனு பதட்டமா இருக்கு.
கீர்த்தி அவங்க ரெண்டு பேரையும் பாக்குறா.
கீர்த்தி : அவன பத்தி எதும் சொல்ல முடியாது, நீங்க போலாம்.
ரகு : நான் அவன காணும்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் குடுப்பேன்.
அவ தங்கச்சி எதோ மறைக்கிறானு சொல்லுவேன்.
கீர்த்தி : முடிஞ்சத பண்ணுங்க டா, போங்க டா.
ரகு, ரஞ்சித்த பாக்குறான்.
ரஞ்சித் : இங்க பாரு, இந்த பையன் பாக்க அழகா இருக்கான்னு , கோபபட மாட்டேன்னு நினைக்காத.
கீர்த்தி ரஞ்சித்தோட மறு கண்ணுத்துல அரைஞ்சிட்டு, நடந்து போயிடுறான்.
ரஞ்சித் to ரகு : டேய் நான் கோபபடுவேன்னு சொன்னதுக்காக அரைஞ்சாலா.
ரகு : நீ உன்னை அழகான பையன் சொன்னதால அரைஞ்சா.
ரஞ்சித் : யார் கிட்டயும் சொல்ல மாட்டல இந்த விஷயத்தை.
கீர்த்தி, அவ அம்மாக்கு போன் பண்ணுறா.
கீர்த்தி : மா, சேது friend ங்க என்ன வந்து பாத்தாங்க. அவுங்க போலீஸ் கிட்ட போவேன்னு சொல்றாங்க. சேது விஷயம் வெளில வந்துட போகுது மா.
கீர்த்தி அம்மா : அவனுங்கள ஊருக்கு கூட்டிட்டு வா.
ரகுவும், ரஞ்சித்தும் வீட்டுக்கு வந்துடுறாங்க.
ரகு : டேய் என்ன டா அவளுக்கு இவளோ திமிரு.
ரஞ்சித் : ஆமா டா என்ன அறஞ்சிட்டானு சொல்லிட்டு ரஞ்சித் அழுவுறான்.
ரகு : நான் அத சொல்லல டா, கொஞ்சம் கூட என் கிட்ட மரியாதையா பேசல. சேதுக்கு எதோ பிரச்னை டா இவ மறைக்கிறா.
ரஞ்சித் போன்ல ஒரு மெசேஜ் வருது, ரஞ்சித் சிரிக்கிறான்.
ரகு : என்ன டா.
ரஞ்சித் : கீர்த்தி ஹாய்னு மெசேஜ் அனுப்பி இருக்கா.
ரகு : இப்போ தான் செவுல்லையே ரெண்டு விட்டா, உனக்கெல்லாம் எப்படி தான் சிரிப்பு வருதோ. சரி என்னனு கேளு.
ரஞ்சித் : அவ போன் நம்பர் கேட்குறா. ஐ ஜாலி.
இன்னொரு மெசேஜ் வருது பாத்துட்டு அப்செட் ஆகுறான் ரஞ்சித்.
ரகு : என்ன டா முகம் மாறுது.
ரஞ்சித் : உன் கூட ஒரு பையன் வந்தானே அவன் நம்பர் குடுனு சொல்றா.
ரகு : என் நம்பர் குடு.
ரகுக்கு போன் வருது.
கீர்த்தி : நான் தான் கீர்த்தி.
ரகு : ம்ம் சொல்லுங்க.
கீர்த்தி : சேது பாக்கணும்னு நினைச்சா, எங்க ஊருக்கு வரணும் நீங்க.
ரகு யோசிக்கிறான்
ரகு : வரோம்.
கீர்த்தி : இன்னைக்கு நான் நடந்து கிட்ட விதத்துக்கு, மன்னிப்பு கேட்டுக்குறேன்.
ரகு : பரவால.
கீர்த்தி : நான் பஸ் டிக்கெட் புக் பண்றேன், நாளைக்கு நம்ம கிளம்புறோம்.
ரஞ்சித் கிட்ட போன் கொடுக்குறான் ரகு.
ரகு : இதா டா போன்னு.
ரஞ்சித் : அவ என் கிட்ட பேசணும்னு சொன்னாலா, ஹலோ ஹலோ ஹலோ.
ரகு : அவ போன வச்சிட்டா, போன அங்க வைக்க சொல்லி குடுத்தேன்.
ரகு போன்ல மெசேஜ் பண்ணிட்டே ரஞ்சித் கிட்ட பேசிட்டு இருக்கான்.
ரகு to ரஞ்சித் : நமக்கு ஒரு குட் நியூஸ், நம்ம சேதுவ பாக்க அவன் ஊருக்கு போறோம்.
ரஞ்சித் : நீ போ எனக்கு ஆபீஸ்ல லீவு தர மாட்டாங்க.
ரகு : சேது முக்கியம் இல்லையா.
ரஞ்சித் : எனக்கு வேல தான் first.
ரகு : இப்ப என்ன, அந்த பொண்ணு உன்னை கூப்ட்டா வருவியா.
ரஞ்சித் முகத்துல ஒரு சிரிப்பு, திரும்பவும் சீரியஸா முகத்தை வச்சுக்கிறான்.
ரஞ்சித் : பாக்கலாம்.
ரஞ்சித் போன்க்கு கால் வருது.
ரகு : அவ தான் பேசு.
ரஞ்சித் : சொல்லுங்க கீர்த்தி.
கீர்த்தி : ஒரு சாதாரண பையன அடிச்சாலும் பருவா இல்ல, ஒரு அழகான பையன அடிச்சு இருக்க கூடாது.
ரஞ்சித் : நீங்க உங்க தப்ப உணர்ந்ததே எனக்கு சந்தோஷம்.
கீர்த்தி : நாளைக்கு ஊருக்கு வந்துடுங்க.
ரஞ்சித் : நீங்க வாடா நாயேனு சொல்லுங்க, நான் வந்துடுவேன்.
கீர்த்தி : சரி நாயே வந்து தொல.
போன் கட் ஆகிடுது.
ரஞ்சித் mind வாய்ஸ் : லாஸ்ட்டா வந்த தொலனு சொன்னது, அவமரியாதையா தெரிஞ்சுதே. சரி ரகு பாக்குறான், கெத்த maintain பண்ணுவோம்.
ரகு : என்ன டா சந்தோஷமா.
ரஞ்சித் : ஓகே தான்.
ரகு : இல்ல ஆளு ரொம்ப சந்தோஷமா தெரியுதே.
ரஞ்சித் : இல்ல நான் casual லா தான் இருக்கேன்.
ரகு : இல்ல லுங்கி கழுண்டது கூட தெரியாம, நிக்கிறியேனு கேட்டன்
ரஞ்சித் பதறி லுங்கிய கட்டுறான்.
ரஞ்சித் : ஆமா டா அவ எனக்கு போன் பண்ணுவானு உனக்கு எப்படி தெரியும், நீ ஒரு மேஜிக் மேன் டா.
ரகு : அதெல்லாம் இல்ல அவ என் கிட்ட வாட்சப்ல பேசிட்டு தான் இருந்தா, நான் தான் அவள உனக்கு போன் பண்ண சொன்னேன்.
ரஞ்சித் : அதுக்குள்ள மெசேஜ் பண்ணிக்க ஆரமிச்சுட்டீங்களா.
ரகு : நாங்க பேசிக்கிறோம்னு சொன்னதும் உனக்கு சந்தோசம் மூஞ்சுல தெரியுது.
ரஞ்சித் mind வாய்ஸ் : இல்லையே நம்ம வயித்தெரிச்சல் தான படுறோம். அவனுக்கு எப்படி வேற மாதிரி தெரியுது. ஒரு வேல கலாய்க்கிறனோ.
ரகு : சரி டா போய் தூங்கலாம்.
YOU ARE READING
நண்பன் ஒருவன் வந்த பிறகு
Humorமூன்று நண்பர்கள் பத்தின காமெடி கதை .சிரிச்சு முடியலனா என்ன கேட்காதீங்க .