ரஞ்சித், ரகு, சேது, இவங்க மூணு பேரும் ரூம் மெட்ஸ். ரொம்ப வருஷமா நண்பர்கள். சென்னை ல மூணு பேரும் வேற வேற கம்பெனி ல வேல பாக்குறாங்க. மூணு பேருக்கும் 27 வயசு.
ரஞ்சித் to ரகு : எங்க டா போய்ட்டு வரீங்க ரெண்டு பேரும்.
ரகு : சும்மா பக்கத்துல
ரஞ்சித் : ஏன் உன் சட்டை கிழிஞ்சு இருக்கு.
ரகு : குடிச்சிட்டு சேது கூட வேல செய்யுறவங்க அவன ரொம்ப கலாட்டா பண்ணி இருக்காங்க. அதான் போட்டு பொளந்துட்டு வந்தேன்.
ரஞ்சித் to சேது : டேய் சேது உனக்கு ஒரு பிரச்னை னா என் கிட்ட சொல்ல சொல்லி இருக்கேன்ல.
சேது : இல்ல டா.
ரஞ்சித் : என்ன இல்ல.
சேது : உன் கிட்ட சொன்னா.
ரஞ்சித் : என் கிட்ட சொன்னா என்ன ரொம்ப கோவாபட்டுடுவேனா.
சேது : இல்ல சண்டை போடுறேன்னு போய் அடி வாங்கினு வருவ.
ரகுக்கு சிரிப்பு வருது, வாய மூடிக்கிறான்.
ரஞ்சித் : டேய் ரகு சிரிக்கிற வேல லாம் வேணா.
ரகு சத்தமா சிரிக்கிறான். கூட சேது சிரிக்கிறான்.
ரகு : டேய் மொறைக்காத. சிரிப்பு தானா வந்துடிச்சி.
ரஞ்சித் : டேய் ரெண்டு பேரும் ஒரு விஷயத்தை மறக்காதீங்க. நம்மளோட போன வீட்டு ஹவுஸ் owner பாத்து நீங்க ரெண்டு பேரும் பயப்புடுவீங்க. நான் தான் அந்த ஆள அடிச்சேன்.
ரகு : ஏன்டா சேது, அந்த ஹவுஸ் owner க்கு ஒரு 67 வயசு இருக்குமா.
சேது : டேய் கண்டிப்பா 70 இருக்கும்.
ரஞ்சித் : டேய் அவர் வயசு ஆணவறா இருந்தாலும், body strong.
சேது : வெயிட் ஒரு 45 கிலோ இருப்பாருல.
ரஞ்சித் : அவருக்கு bone வெயிட் டா. அவரையே அடிச்சேன்.
ரகு : அவர அடிச்சதுக்கு தான் ஹவுஸ் owner பொண்டாட்டி ரஞ்சித்த அடி பிச்சுடுச்சுல.
சேது : டேய் ஒரு மணி நேரம் வெச்சு வெளுத்துதுல.
ரகு : அவ ரஞ்சித்தோட வலது காதுல கடிச்சு இன்னும் அந்த தழும்பு இருக்குல.
ரஞ்சித் : டேய் டேய் நெக்கல் பண்ணாதீங்க, நான் அர்ஜுன் ரெட்டி போல ஒரு கோபக்கார இளைஞன் ன்றதனால அந்த பெரியவர அடிச்சுட்டேன். அப்போ கூட என் தப்ப உணர்ந்து அவர் பொண்டாட்டி கால்ல விழுந்தேன் டா.
ரகு : இல்லையே அவ போலீஸ் போன் பண்றேன்னு சொன்னதால தான கால்ல விழுந்த
ரஞ்சித் : டேய் ரொம்ப ஒன்னும் கலாய்க்காதீங்க, எனக்குள்ள இருக்க அர்ஜுன் ரெட்டி ஒரு நாள் வெளிய வருவான்.
சேது : சரி டா போய் நம்ம மூணு பேருக்கும் சரக்கு வாங்கிட்டு வா.
ரஞ்சித் : ஏன் எப்பவுமே நான் தான் போணுமா நீங்க ரெண்டு பேரும் போக மாட்டிங்களா.
சேது : டேய் சரிகா ஆண்ட்டி உன்னை கேட்டுச்சு போற வழில பாத்துட்டு, அப்டியே சரக்கு வாங்கிட்டு வந்துடு.
ரஞ்சித் : சரி நீங்க இவளோ கேட்டதால போறேன்.
ரஞ்சித் போய்ட்டான்.
ரகு : டேய் அவன் சரிகா ஆண்ட்டிய பாக்க போறான், இப்போ அவ புருஷன் வீட்ல இருக்க டைம். அவன் ஒரு கோபக்காரனு சொல்ராங்க.
சேது : போயிருக்க நம்ம ஆளு மட்டும் என்ன. அவனும் ஒரு கோபக்கார இளைஞன்.
ரகு : அப்போ கோபக்கார இளைஞன்னுக்கும், கோபக்காரா அங்கிள்க்கும் சண்டை. யாரு ஜெயிப்பா
சேது : அங்கிள் தான்.
ரகு : ஏன் அவரு அவளோ மொரட்டு பீஸ்ஸா.
சேது : இல்ல இல்ல நம்மாளு டம்மி பீஸ்.
ரகு : ஹா ஹா ஹா.
ரஞ்சித் சரக்கு வாங்கிட்டு வந்துட்டான்.
ரகு to ரஞ்சித் : என்ன டா ஆண்ட்டிய பாத்தியா.
ரஞ்சித் : இல்ல டா சரக்கு மட்டும் தான் வாங்கிட்டு வந்தேன்.
ரகு : என்ன மூஞ்சு டல் அடிக்குது.
ரஞ்சித் : தங்கச்சி போன் பண்ணா, அவ யாரையோ லவ் பன்றாளாம், அவங்க ஃபேமிலி ரெண்டு நாள்ல எங்க வீட்டுக்கு வராங்காலம் பாக்க
ரகு : உன் தங்கச்சி லவ் பண்ணிட்டானு மூஞ்ச அப்படி வச்சு இருக்கியா, நம்ம பசங்க எல்லா சேட்டையும் வாழ்க்கைல பண்ணிடுறாங்க, தங்கச்சியோ, அக்காவோ அத பண்ணிட்டா தாங்கிக்க மாட்டாங்க.
ரஞ்சித் : ஏன் டா அவ லவ் பண்ணது என் பிரச்னைனு சொன்னனா.
ரகு : அப்பறம்.
ரஞ்சித் : கல்யாணத்துக்கு காசு வேணாமா.
ரகு : ஓ அது ஒரு மேட்டர் இருக்கா.
சேது : நான் ஒரு 5 லட்சம் தரேன் டா. சேவிங்ஸ்ல இருக்கு.
ரகு : டேய் மனசுல கர்ணன்னு நினைப்பா, உன் காச அவன் கிட்ட கொடுத்துட்டா, நீ என்ன பண்ணுவ.
ரஞ்சித் : டேய் எனக்கும் இது தப்பா தெரியுது. வேணாம் வச்சிக்கோ.
சேது : டேய் அது என் ரெண்டு மாசம் சம்பளம் தான்.
ரகு ஷாக் ஆகி பாக்குறான்.
ரகு : டேய் மாசம் ரெண்டர லட்சம் செலரியா.
சேது : ஆமா.
ரகு : இவளோ நாளா சொல்லல. டேய் நான் லாம் 25,000 தாண்டா சம்பாரிக்கிறேன்.
ரஞ்சித் : நானும் கம்மியா தான் சம்பாரிக்கிறேன் , உன் காச என்னால திருப்பி குடுக்க வருஷ கனுக்குல ஆகும்.
சேது : உன்னால எப்போ குடுக்க முடியுமோ குடு.அப்பறம் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.
ரகு : என்ன டா.
சேது : நான் இன்னும் ஒரு வர்ஷம் தான் சென்னைல இருப்பேன், அப்பறம் என் கிராமத்துக்கு போய்டுவேன்.
ரகு மூஞ்சு மாறுது.
ரகு : வேலை என்ன பண்ணுவ.
சேது : ஊர்ல பெரிய பணக்காரன் குடும்பம் டா நாங்க, வேலைக்கு போக அவசியம் இல்ல, விவசாயம் நிலம் இருக்கு.
ரகு : அப்பறம் நம்ப ரெண்டு பேரும் பாத்துக்க முடியாதா.
ரகு சோகமா ஆகுறான்.
ரஞ்சித் : டேய் சேது அவனுக்கு நீ எவளோ முக்கியம்னு தெரியும்ல, அவனால இத எடுத்துக்க முடியாது.
சேது : டேய் நான் என்ன லண்டன்கா போறேன் பஸ் ஏறுனா என் ஊரு வர போகுது.
ரகு யாரு மூஞ்சயும் பாக்கல.
ரஞ்சித் : சரி டா சரக்கு வாங்கி ரொம்ப நேரம் ஆகுது, ஆறிடும்.
சேது : ஆறிடுமா, சரக்கு வாங்கிட்டு வந்தியா, நாயர் கடைல டீ வாங்கிட்டு வந்தியா.
ரஞ்சித் : நீ இவளோ சிறந்த காமெடி பண்ணி, ரகு சிரிக்கலனா, ரொம்ப சோகமா இருக்காணு அர்த்தம்.
ரகு ரெண்டு பேரையும் பாத்து சிரிக்கிறான்.
ரஞ்சித் : அப்பா சிரிச்சிட்டான், சரக்க ஊத்து.
எல்லாம் போதை ஆகி இருக்காங்க. இன்னும் குடிச்சிட்டு தான் இருக்காங்க.
ரஞ்சித் : டேய் என்ன தான் நம்ம மூணு பேரு ஒண்ணா இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்ல.
சேது : டேய் ஏன் அப்படி பேசுற. உன்னையும் இவனையும் ஒரே மாதிரி தான் பாக்குறேன்.
ரஞ்சித் :எப்படி இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ஹீரோ, நான் காமெடியன் தான.
ரகு : டேய் குடிச்சு இருக்கியா, என்னமோ உன்னை காமெடியன்னு சொல்ற. காமெடியனா அவளோ ஈசியா, ஒரு ஜோக் சொல்லு டா பார்ப்போம்.
சேது : டேய் ரகு, என்ன டா நீ குடிச்சா பைத்தியம் ஆகிடுற, அவன் சீரியஸா பேசுறான்.
ரகு : காமெடியன் காமெடி ah தான பேசணும் ஏன் சீரியஸா பேசுறான், நம்மள ஏமாத்துறானா அவன்.
சேது : கண்டிப்பா நீ ஓத வாங்குவ, படுத்து தூங்கு.
ரகு : தூங்குறேன், கனவுல வந்து அவன் காமெடி பண்ணுவானா.
சேது அவன இழுத்துட்டு போய் படுக்க வச்சுடுறான்.
சேது to ரஞ்சித் : டேய் நாங்க உன்னையும் நல்ல நண்பனா தான் பாக்குறோம். உனக்கு அந்த நினைப்புலாம் வேணாம்.
ரஞ்சித் : சரி விடு.
சேது : உனக்கு புரியுற மாதிரி சொல்றேன், சரிகா ஆன்ட்டிக்கு எங்கள புடிக்குமா, உன்ன புடிக்குமா.
ரஞ்சித் : என்ன தான்.
சேது : இப்போ சொல்லு நாங்க ஹீரோவா, நீ ஹீரோவா.
ரஞ்சித் : ஏன் டா ஒரு 45 வயசு ஆன்ட்டிக்கு புடிச்சதுனால, நான் ஹீரோ ஆகிடுவேனா.
சேது : சாதாரண ஹீரோ இல்ல டா ஆண்ட்டி ஹீரோ.
ரஞ்சித் : இப்போ தான் confirm பண்றேன், நான் காமெடியன்னு.
சேது சிரிக்கிறான்.
சேது : டேய் சத்தமா சொல்லாத தூங்கிட்டு இருக்கவன், எழுந்து வந்து நீ காமெடியன் தான ஒரு காமெடி சொல்லுனு உயிர எடுப்பான்.
காலைல ஆகுது.
சேதுவும் ரஞ்சித்தும் பால்கனில நின்னு பேசிட்டு இருக்காங்க.
ரகு எழுந்திரிச்சு கோபமா போய் பேசுறான்.
ரகு : டேய் அந்த ரஞ்சித் நைட் தூங்கும் போது பெட்லயே ஒண்ணுக்கு போய் இருக்கான்.
ரஞ்சித்தும் சேதுவும் ஒருத்துற ஒருத்தர் பாத்து சிரிச்சுகிறாங்க.
ரகு : டேய் ரஞ்சித் ஒழுங்கா வந்து bed ah கிளீன் பண்ணு.
சேது : எப்படி அவன்தான் போனானு கண்டுபுடிச்ச.
ரகு : ஒருத்தரோட யூரின் ஸ்மெல் வச்சே கண்டுபுடிச்சிடுவேன் டா.
வீட்டு owner அம்மா வராங்க.
வீட்டு owner : என்ன பா சேது நைட் full ah பால்கனில பேச்சு சத்தம்.
சேது : ஒன்னும் இல்ல மா. சும்மா பேசிட்டு இருந்தோம்.
வீட்டு owner : சரி பா. நான் மேல போய் காயுற துணிய எடுத்துட்டு வரேன்.
ரகு : நைட் full ah நீங்க ரெண்டு பேரும் தூங்கவே இல்லையா.
சேது : ஆமா.
ரகு : அப்போ அது என் ஒண்ணுக்கு தானா.
ரஞ்சித் : நீ தான் ஸ்மெல் வச்சே கண்டுபுடிச்சிடுவியே, மோந்து பாரு.
ரஞ்சித்தும் சேதுவும் ரகுவ பாத்து சத்தமா சிரிக்கிறாங்க.
ரகு : டேய் சேது நீ இன்னும் ஒரு வர்ஷம் தான் என் கூட இருப்பியா.
சேது : கண்ணா நீ கேக்குறது எனக்கு தப்பா புரியுது, நான் என்னமோ ஒரு வர்ஷம் கழிச்சு,பரலோகம் போற மாதிரி.
ரகு : டேய் விளையாடாத.
சேது : இங்க பாரு இன்னும் ஒரு வர்ஷம் உன் கூட தான் இருக்க போறேன், ஏன் நீ ஒண்ணுக்கு போனாலும் உன் கூடவே படுத்துகிறேன்.
ரஞ்சித் : அவன் கூட படுக்காத, அவன் ஒண்ணுக்கு போய்ட்டு, நம்ம மேல பழி போடுவான்.
ரகு : டேய் நான் இப்போ திருந்திட்டேன், நான் தான் போனேனு சொல்லுவான் இனிமே.
ரஞ்சித் : அப்போ கூட எரும,இனி ஒண்ணுக்கு போகமாட்டேன்னு சொல்லுதான்னு பாரு.
வீட்டு owner துணியோட கீழ வராங்க.
வீட்டு owner to சேது : என்ன பா ஒரு மாதிரி வாசனை வருது.
ரஞ்சித் : அது ஒன்னும் இல்ல மா, எல்லாம் குழந்தைங்க பண்ணுற சமாச்சாரம் தான்.
வீட்டு owner : அது என்ன சமாச்சாரம்.
ரஞ்சித் : ரகு bed ல ஒண்ணுக்கு போய்ட்டான்.
வீட்டு owner : த்து, இது தான் குழந்தையா, ரோடு ல சண்டைனு வந்தா ஆளுங்கள போட்டு அடிக்குறது, அப்பறமா பெட்ல ஒண்ணுக்கு அடிக்குறது.
வீட்டு owner போய்ட்டாங்க.
ரகு : டேய் ரஞ்சித் எத்தனை நாள் காண்டு டா என் மேல, இந்த கிழவி ஒரு விஷயத்தை ஊரு full ah சொல்லுமே.
ESTÁS LEYENDO
நண்பன் ஒருவன் வந்த பிறகு
Humorமூன்று நண்பர்கள் பத்தின காமெடி கதை .சிரிச்சு முடியலனா என்ன கேட்காதீங்க .