அத்தியாயம் 2

12 0 0
                                    


அடுத்த நாள்

ரகு,owner அம்மா வீட்டு வெளிய உரல்ல மாவு ஆட்டிட்டு இருக்கான் . ரஞ்சித் ரகுவ பாத்துடுறான்.

ரஞ்சித் : டேய் என்ன இவங்க வீட்ல மாவாட்டிட்டு இருக்க.

ரகு : கரண்ட் இல்ல, owner அம்மா கஷ்ட்ட பட்டுட்டு இருந்துது, அவங்களுக்கு மாவு பிஸ்னஸ் கெட்டு போக கூடாதுனு,நமக்கு மனசு கேட்கல, அது தான் ஆட்டி குடுத்துட்டு இருக்கேன்.

ரஞ்சித் : யாராவது வீட்டுக்கு வந்து பாத்துட்டு, ஒரு மாதிரியா போனாங்களா.

ரகு : எப்படி டா கரெக்ட்டா கேக்குற, இப்ப தான் கோமதி அக்கா வந்துது owner அம்மாவ பாக்க, ஆனா பாக்கவே இல்ல, என்ன பாத்ததும் ச்சீ இவன பாருனு ஓடிடுச்சு. ஒரு வயசானவங்களுக்கு உதவி பண்றது ஒரு குத்தமா. அப்படி அது குத்தம்னா அத திருப்பி திருப்பி பண்ணுவேன் டா.

ரஞ்சித் : பண்ணு பண்ணு கால ஒழுங்கா மடக்கி வச்சு பண்ணு.

ரகு : கால் தெரிஞ்சா என்ன டா, ஆம்பளைங்களுக்கு ஆடை சுதந்திரம் இல்லயா டா, நான் இப்படி தான் உட்காருவேன்.

ரஞ்சித் : சரி நான் ஒரு போட்டோ எடுத்துக்கவா,

ரகு : எடு.

போட்டோ எடுத்துட்டான்.

ரகு : போட்டோவ காட்டு.

owner ஐயா வராரு.

owner ஐயா : டேய் போட்டோவா காட்டு.

ரஞ்சித் : இல்ல காட்டமாட்டேன்.

owner ஐயா : நமக்குள்ள என்ன டா காட்டுனு புடிங்கி பாக்குறாரு.

owner ஐயா போட்டோவ பாக்குறாரு, ரகுவ பாக்குறாரு.

owner ஐயா to ரகு : இப்படியே எவளோ நேரம் உட்கார்ந்துட்டு இருக்க.

ரகு : ரொம்ப நேரமா. ஏன் கால் தெரியுறது ஒரு குத்தமா.

owner ஐயா : அவன் எடுத்த போட்டோவ பாரு.

ரகு பாக்குறான், ஷாக் ஆகுறான்.

ரகு சைலன்ட்டா எழுந்து மேல அவன் வீட்டுக்கு, ரஞ்சித் கூட போறான்.

ரகு : மச்சான் போட்டோ எடுத்ததுக்கு பதிலா சொல்லி இருக்கலாம்ல.

ரஞ்சித் : ஆம்பளைக்கும் ஆடை சுதந்திரம் இருக்கு டா.

ரகு : இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் டா சேதுக்கு தெரிய வேணாம் . போட்டோவ டெலீட் பண்ணிடு.

ரஞ்சித் : இனி சரக்கு வாங்க.

ரகு : நான் போறேன்.

ரஞ்சித் : நான் எதுனா பண்ணா, என்ன தூக்கி போட்டு மிதிப்பியே.

ரகு அழுவுறான், தப்பு தான் எஜமான், தப்பு தான்னு சொல்லுறான்

ரகு ஒரு மாதிரியா ரூம் ல உட்கார்ந்துட்டு இருக்கான்.

ரஞ்சித் : டேய் எரும அந்த போட்டோ டெலீட் பண்ணிட்டேன் normal ah மூஞ்ச வச்சிக்க.

சேது வீட்டுக்கு வரான்.

ரகு to சேது : என்ன டா வேலைல இருந்து சீக்கிரம் வந்துட்ட,CSK மேட்ச்னு சீக்கிரம் பாக்க வந்துட்டியா.

சேது சீரியஸ் ah இருக்கான். சேது டிரஸ் லாம் எடுத்து bag ல வைக்கிறான்.

ரகு : டேய் என்ன ஊருக்கு கிளம்பிட்டியா, என்ன திடிர்னு.

சேது : எங்க போனாலும் உன் கிட்ட சொல்லனுமா, வேலைய பாரு டா.

ரகு முகம் சோகம் ஆகுது.

ரஞ்சித் : டேய் சேது, இப்போ எதுக்கு அவன் கிட்ட கோபமா பேசுற.

சேது யாரையும் பாக்கல, வீட்ட விட்டு வெளிய போகும் போது, கதவ வேகமா சாத்திட்டு போறேன். கதவு மூடின சத்தம் நல்லா கேட்குது.

ரகு மொறச்சிட்டு இருக்கான்.

ரஞ்சித் : டேய் ரகு, அவனுக்கு எதாவது பிரச்னையா இருக்கும் டா, நீ feel பண்ணாத.

ரகு : நம்ம கிட்ட பிரச்னைய சொன்னா solve பண்ண மாட்டோமா.

ரஞ்சித் : அவன் அப்படி தான், சில விஷயம் சொல்லுவான், சிலதா மறைப்பான். அவன அவன் போக்குல விட்டுடுனும்.

ரகு கோபமாவே இருக்கான்.

ரஞ்சித் : டேய் ராஜா நீ மொறச்சிட்டு இருக்கறது எனக்கு பயமா இருக்கு, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு.

ரகு : ஓகே நீ எப்போ ஊருக்கு போற.

ரஞ்சித் : நாளைக்கு தான்,தங்கச்சிய பாக்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வராங்க.

ரகு : நீங்க ரெண்டு பேரும் இல்லாம ரூம்ல கடுப்பா இருக்கும்.

ரஞ்சித் : ரெண்டு நாள்ல வந்துடுவேன்.

ரகு : அந்த புடுங்கி எப்போ திரும்ப வருவான் தெரில.

ரஞ்சித் : அவனும் சீக்கிரம் வருவான், நாளைக்கு அவனே போன் பண்ணுவான், நீ பண்ணாத.

ரகு : ஓகே ஓகே போற விஷயத்தை நல்ல படியா முடிச்சிட்டு வா.

அடுத்த நாள் காலைல எழுந்துச்சி பாக்கும் போது, ரஞ்சித் ஊருக்கு போய் இருந்தான்.


ரகு வேலைக்கு கிளம்பி கீழ இறங்கி வந்தான். owner ஐயா, நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தாரு, மெதுவா நியூஸ் பேப்பர் விளக்கி ரகுவ பாக்குறாரு.
ரகு அவர பாத்து கிழவன் லுக்கே சரி இல்லையேனு நினைக்கிறான்

owner ஐயா : என்ன கண்ணா வேலைக்கா.

ரகு : ஆமா. நேத்து நடந்த சம்பவத்த மறந்துட்டீங்களா.

owner ஐயா : இல்ல இல்ல மறக்க மாட்டேன், அப்பறம் நம்ம friendship க்கு என்ன மரியாதை.

ரகு : நமக்குள்ள என்ன friendship.

owner ஐயா : நம்ம தான் எந்த ஒளிவு மறைவு இல்லாம பழகி இருக்கோமே.

ரகு : டபுள் மீனிங்கு. என் டைம்மு .

owner ஐயா : ரஞ்சித் எங்க.

ரகு : ஏன், அவன பாக்காம இருக்க முடியாதோ.

owner ஐயா : இல்ல டா நேத்து எடுத்த போட்டோவ சென்ட் பண்ண சொன்னேன், இன்னும் பண்ணல.

ரகு : அந்த போட்டோவ வச்சி நீ என்னயா பண்ண போற.

owner ஐயா : நம்ம கோமதி நீ பொளந்துட்டு உட்கார்ந்து இருந்தத, பாத்து இருக்கு, பக்கத்து வீட்டு அம்மா கிட்ட சொல்லி இருக்கு, ஆனா அவங்க நம்பவே இல்லனு என் கிட்ட வருத்த பட்டச்சு. நான் போட்டோவே இருக்கு நான் அனுப்புறேன், நீ தெரு full ah காட்டுனு சொன்னேன். நான் சொன்னது கரெக்ட் தான.

ரகு : சீக்கிரமா நாங்க வீட்ட காலி பண்றோம்.

ரகு கோபமா கிளம்புறான்.

owner அம்மா : டேய் ரகு டீ குடிச்சிட்டு போடா.

ரகு திரும்பாம போறான்.

owner ஐயா சிரிக்குறாரு.

owner அம்மா : என்னங்க சொன்னிங்க புள்ளைய.

owner ஐயா : இதுலாம் ஆம்பளைங்க விஷயம். நீ உள்ள போ.

நைட் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்துடுறான் ரகு. சேதுக்கு போன் பண்ணலாமா வேணாமானு யோசிச்சிட்டு, போன் பன்றான், ஆனா அவன் எடுக்கல தூங்கிடுறான். ஒரு கருப்பு உருவம் உள்ள பேய், ரகுவ அமுக்குது.

ரஞ்சித், வீட்டுக்கு வந்து,கதவ தொறந்த உடனே, ரகு தூக்கத்துல, கத்திட்டு எழுந்துக்குறான். ரஞ்சித் பயந்துடுறான்.

ரஞ்சித், ரகு கிட்ட பேசுறான்.

ரஞ்சித் : டேய் எரும, ஏன் இப்படி கத்துற.

ரகு : ஒரு கெட்ட கனவு டா.

ரஞ்சித் : கத்தி ஊற கூட்டும் போதே, நினச்சேன், சொல்லு.

ரகு : நம்ம சேதுக்கு பேய் புடிக்குது, அவன் நம்மள அவன் ஊருக்கு கூப்பிடுறான், நான் வரலன்னு சொன்ன உடனே, என்ன அமுக்குற மாதிரி ஒரு கனவு.

ரஞ்சித் : சரி விடு.அவளோ பயங்கரமாலாம் இல்ல, நான் ஹாலிவுட் பேய்களையே பாத்தவன்.

ரகு : சரி , என்ன ரெண்டு நாள்ல வரேன் சொல்லிட்டு, இன்னைக்கே வந்துட்ட. போன விஷயம் நல்ல படியா முடிஞ்சுதுல.

ரஞ்சித் : ம்ம் நல்லபடியா தான் முடிஞ்சுது, வரதட்சணை அதிகம் கேட்டுட்டாங்க.

ரகு : மாப்பிள்ளையே வேணாம் போங்கய்யானு சொல்லிட வேண்டியது தான.

ரஞ்சித் : அடுத்த வரவனும் கேட்பான். கொஞ்சம் நிலம் இருக்கு ஊர்ல, ஒரு வீடு இருக்கு ரெண்டுத்தையும் வித்து தான் பண்ணனும்.

ரகு : பசங்க வாழ்க்கையும் கஷ்டம் தான்ல.

ரஞ்சித் : தங்கச்சி நல்லா இருந்தா போதும்னு நினைக்கிறன், காசு கூட கொடுத்துடலாம் அவ நல்லா இருக்கணும்ல.

ரகு : பாரு டா உனக்குள்ள ஒரு செண்டிமெண்ட் சைடு இருக்கு.

ரஞ்சித் : உங்கள பொறுத்த வரைக்கும் நான் ஒரு காமெடியன்.

ரகு : காமெடியன் னா அவ்ளோ ஈசியா போச்சா, ஒரு ஜோக் சொல்லு டா பார்ப்போம்.

ரஞ்சித் : டேய் போதைல தான் ஓலரூனனு பாத்தா, இப்பவும் சேம் டயலாக் அடிக்கிற, ஆத்தி இவன் கிட்ட உஷாரா இருக்கணும்.

ரகு : அப்புறம் டேய், நேத்து சேதுக்கு போன் பண்ணேன் அவன் எடுக்கல.

ரஞ்சித் : அவனே போன் பண்ணுவான் நீ பண்ணாதனு சொன்னேன்ல டா. அப்பறம் என்ன டா என் பேச்சுக்கு மரியாதை.

ரகு : சரி விடு கோப படாத.

ரஞ்சித் : என்ன இருந்தாலும் நான் ஒரு காமெடியன் தான.

owner ஐயா கதவ தொறந்துட்டு வராரு.

owner ஐயா : யாரது காமெடியன்னு சொன்னது.

ரஞ்சித் : நான் தான்.

owner ஐயா : காமெடியன் னா அவ்ளோ ஈசியா,எங்க ஒரு ஜோக் சொல்லு பார்ப்போம்.

ரஞ்சித் ஷாக் ஆகுறான். என்னடா இவருக்கு அந்த டயலாக் சொன்னது யாரு.

ரஞ்சித் : நான் காமெடியனே இல்ல, ஹீரோ போதுமா.

owner அம்மா வீட்டுக்குள்ள வராங்க.

owner அம்மா : யாரது ஹீரோனு சொன்னது.

ரஞ்சித் : நான் இல்ல நான் இல்ல.

owner ஐயா : ரஞ்சித் தான் சொன்னான்.

owner அம்மா அவன ஒரு மாதிரி பாத்துட்டு போயிடுறாங்க.

ரஞ்சித் : owner ஐயா, இந்த லுக்குக்கு என்ன அர்த்தம்.

owner ஐயா : அவ ரெண்டாவது தடவ இந்த லுக் விட்டு நான் பாக்குறேன்.

ரஞ்சித் : இதுக்கு முன்னாடி எப்போ இந்த லுக்கு விட்டாங்க.

owner ஐயா : நான் பொண்ணு பாக்க போகும் போது, மாப்பிள்ளை ஹீரோ மாதிரி இருப்பாருனு யாரோ அவ கிட்ட சொல்லி சந்தோஷத்தோட வந்து பாத்தா நானு, அப்ப இதே லுக்கு தான். நான் கூட என் அழகுல மயங்கி தான் அந்த லுக் விட்டான்னு இவளோ நாளு நினைச்சுட்டு இருந்தேன் , ஏன் அந்த பார்வை பாத்தாணு இப்போ தான் எனக்கு புரியுது.நான் ரொம்ப அப்செட் ஆகிட்டேன்.நான் போய் இப்போ சாப்பிட கூட போறது இல்ல.

ரகு : ஐயா போய் சாப்பிடுங்க.

owner ஐயா : இப்போ தான் பா சாப்பிட்டேன், திரும்ப கேட்டா அவ திட்டுவா.

ரகு மொறைக்கிறான்.

ரஞ்சித் சோகமா இருக்கான்.

ரகு : டேய் அந்த கெழவிக்கு புடிக்கலான பருவா இல்லடா, சரிகா ஆண்ட்டியே உன்னை ஹீரோனு சொல்லுவாங்க.

ரஞ்சித் : என்னோட கடைசி நம்பிக்கை அவங்க தான், அவங்களுக்கு போன் பண்ண போறேன்.

ரகு : ஸ்பீக்கர்ல போடு நானும் கேக்குறேன்.

ரஞ்சித் : கண்டிப்பா டா நான் ஹீரோன்னு உனக்கு புரிய வைக்குற நேரம் டா இது.

ரஞ்சித் போன் ஸ்பீக்கர்ல போடுறான்

ரஞ்சித் : ஆண்ட்டி.

சரிகா ஆண்ட்டி : நானே உனக்கு போன் பண்ணனும் நினைச்சேன் டா.

ரஞ்சித் : அதான் ஆண்ட்டி நமக்குள்ள ஒரு ட்ரு லவ் இருக்கு.

சரிகா ஆண்ட்டி : சரி நான் சொல்லுறத கேளு, நம்ம மேட்டர் என் புருஷனுக்கு தெரிஞ்சிடுச்சு, இனி வீட்டுக்கு வராத.

ரஞ்சித் : நீங்களும் இல்லையா எனக்கு, சரி ஒரு கேள்வி உங்களுக்கு, இது நம்ம லவ் மேல சத்யம்.

சரிகா : ம்ம் சொல்லு.

ரஞ்சித் : என்ன நீங்க ஹீரோ மாறி இருக்கணு சொல்லுவீங்கள, அது உண்மை தான.

சரிகா : உனக்கு புரியற மாதிரி சொல்லணும், எல்லா புருஷனும், மனைவிங்க கிட்ட நீ உலக அழகிடினு சொல்லுவாங்க, அதெல்லாம் ஒரு வேல ஆகுறதுக்காக சொல்றது, நீ ஹீரோ லாம் இல்ல

ரஞ்சித் அழுவுறான்.

ரஞ்சித் : உங்களுக்கும் நான் காமெடியனா.

சரிகா : ஒரு காமெடியனா அவ்ளோ ஈசியா போச்சா.

ரஞ்சித் : நான் போன கட் பண்றேன்.

ரகு, ரஞ்சித்த கட்டிபுடிக்கிறான்.

ரகு : விடு டா இனி உன்னை வில்லன்னு சொல்லிக்கோ.

ரஞ்சித் : சரி மச்சான். நான் இனி வில்லன்.

சொல்லும்போது ஜன்னல் கண்ணாடி உடையுது, கிரிக்கெட் பால் உள்ள வருது.

ரஞ்சித் : என்னடா வில்லன் சொன்னா ஜன்னல உடைக்கிறாங்க.

ரகு : எனக்கு, நீ ஒரு மனுஷன்னு சொல்லி, வீட்ட கீட்ட புல் டோஸ்ர் வச்சு இடிச்சிடுவாங்களோனு பயமா இருக்கு.

நண்பன் ஒருவன் வந்த பிறகுDonde viven las historias. Descúbrelo ahora