அத்தியாயம் 9

4 0 0
                                    

அடுத்த நாள், காலைல 5.30 மணி.

கீர்த்தி : டேய் ரகு என்ன இவளோ சீக்கிரம் எழுந்துட்ட.

ரகு : சூர்யன் கரெக்ட் டைம்க்கு உதிக்குதான்னு பாக்க வந்தேன்.

கீர்த்தி : சரி வா, ஜாகிங் போய்ட்டு வரலாம்.

ரகு : டிரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு, நான் வரல.

கீர்த்தி : இப்போ போட்டு இருக்க டிரசே நல்லா தான் இருக்கு.

ரகு : பாக்ஸர் போட்டுட்டு எப்படி வெளிய வரது. இப்படி தொடைய காட்டிட்டு வரவா முடியும்.

கீர்த்தி : அவளோ சின்னதா ஒன்னும் தெரியல.

ரஞ்சித் வரான்.

ரஞ்சித் : ஏய் கீர்த்தி, என்ன என்னமோ அவன பாத்து, எதோ சின்னதா ஒன்னும் தெரியலனு சொன்ன.

கீர்த்தி : டேய் அவன் போட்டு இருக்க பாக்ஸர சொன்னேன்.

ரகு : டேய் மண்டையா, வா ஜாகிங் போவோம்.

ரஞ்சித் : இல்ல மச்சான் வேல இருக்கு.

ரகு : காலைல அஞ்சர மணிக்கு என்ன டா வேல.

ரஞ்சித் : பாத்ரூம்ல கக்கூஸ் போய் ரொம்ப போர் அடிக்குது, அதான் தாத்தா கூட போய் வெளில போலாம்னு போறேன்.

ரகு : கிராமத்துல வெளிய போவாங்களா டா, நான் பாத்ததே இல்ல.

ரஞ்சித் : இந்த ஊர்ல ஏறி பக்கத்துல, எல்லாரும் , போவாங்கலாம்.

ரகு : சரி நான் அதெல்லாம் பாக்க குடுத்து வைக்கல, நான் போறேன் ஜாகிங்.

ரஞ்சித் : நீ ஏன் வருத்த படுற, நான் வீடியோ எடுத்துட்டு வரேன்.

கீர்த்தி : டேய் த்து, வீடியோ எத்துன வர விஷயமா டா அது. டேய் ரஞ்சித் நீ கிளம்பு. ரகு நீ வா நம்ம போலாம்.

ரகுவும், கீர்த்தியும் ஜாகிங் போறாங்க ஊர்ல. ஓடிட்டே பேசிட்டு இருக்காங்க.

ரகு : இங்க ஊர்ல யாரும் ஜாகிங் போல.

கீர்த்தி : நமக்கு உடல் உழைப்பு இல்ல, உட்கார்ந்த இடத்துல வேல அதுனால காலைல ஓடுறாம். இங்க விவசாயம் தான, அவங்க வேல செஞ்சாவே எல்லா calories உம் burn ஆகிடும். ஒரு சில பேரு வாக்கிங் பண்ணுவாங்க இங்கயும்.

ரகு : ஆனா கிராமத்து வாழ்க்கைல ஒரு அமைதி இருக்குல.

கீர்த்தி : நீயும் இங்க தான செட்டில் ஆக போற, உனக்கும் ஒரு அமைதியான வாழ்க்கை இருக்கு.

ரகு : ஏய் நாம சென்னைல செட்டில் ஆகுறோம்.

கீர்த்தி : டேய் எங்களுக்கு இங்க எவ்ளோ சொத்து இருக்குனு பாத்தல, அங்க போய் எவன் கிட்டயோ கைய்ய கட்டி நிக்கணுமா.

ரகு : அதுக்குனு, பொண்ணோட சொத்த நான் அனுபவிச்சா , ஊருக்குள்ள மரியாதை இருக்குமா.

கீர்த்தி : இது பத்தி இப்போ பேச வேணாம், சண்டை வரும்.

ரகு : சரி விடு.

ஒரு மாட்ட பாத்ததும் ரெண்டு பேரும் நிக்கிறாங்க.

ரகு : மாடு நல்லா இருக்கே, கம்பிரமா.

அந்த மாட்டு owner : அது பேர் கம்பிரம் தான் பா.

ரகு : இன்னைக்கு பால் கறந்துட்டீங்களா.

மாட்டு owner : இது கால மாடு பா.

ரகு : ஓ.

மாட்டு owner : உன் பக்கத்துல் இருக்க மாடு சீருது, அந்த சிகப்பு கலர் பனியன கழட்டிடு. அதுக்கு புடிக்காது.

ரகு : என்ன னா, படையப்பா படத்துல வர மாடு மாதிரி சொல்றிங்க.

மாட்டு owner : எதுல வர மாடோ ஆனா இது அப்டி தான்.

மாட்டு owner, அவரோட பையன, அந்த மாட்ட கூட்டினு போய் தண்ணி காட்டுனு சொல்ராரு, அந்த மாட்ட கூட்டுனு போறான், அப்போ திடிர்னு மாடு சீருது. மாட்டு owner அந்த பையன் கிட்ட, டேய் அந்த மாட்ட சொல்லலடானு சொல்ராரு. அது அந்த சிகப்பு கலர் பாத்தா கோப படுற மாடு, ரகுவ விரட்டுது, ரகு ஓடுறான் பின்னாடியே கீர்த்தி ஓடுறா. கீர்த்தி ரகுவ பாத்து கத்துறா எந்த வீட்டுக்குள்ளயும் போயிடாதனு, ஆனா ரகு மாடுக்கு பயந்து ஒரு வீட்டுக்குள்ள ஓடி போயிடுறான்.

அந்த வீட்டு owner : ஏய் யாரு பா, வீட்டுக்குள்ள ஓடி வர.

ரகு : சார் மாடு தொரத்தது.

அந்த வீட்டு owner : அதுக்குனு வீட்டுக்குள்ள வந்துடுவியா, ஏற்கனவே என் பொண்ணு வேற ஜாதி பையன லவ் பண்ணிட்டானு, என் ஜாதிகாரன் ஒருத்தனும் சம்பந்தம் பேச வரமாற்றங்க, இதுல நீ எந்த ஜாதினு தெரியல, நீ வீட்டுக்குள்ள வந்தது பாத்தா ஒருத்தனும் என் வீட்டுக்கு எவனும் வர மாட்டாங்க. வெளிய போயா மொதல. ஏய் இவளே பேனாயில் எத்துனு வந்து அவன் நின்ன எடத்து கழுவி விடு டி. நமக்குன்னு வந்து செருதுங்க பாரு.

ரகு தலைய குனிஞ்சு வரான்.

கீர்த்தி : டேய் என்னாச்சு.

ரகு பேசாம வரான்.

கீர்த்தி : எனக்கு என்ன நடந்து இருக்கும்னு புரியுது, இந்த தெருவுல ஒரே ஜாதிகாரங்க தான் இருப்பாங்க. ஜாதி வெறி உச்சத்துல இருக்கும் இவங்க கிட்ட.

ரகு : ஏய் அதுக்குனு, நான் நின்ன இடத்த கழுவி விடுன்னு சொல்றான்.

கீர்த்தி : என்ன சொல்றதுன்னு தெரில டா, சரி விடு feel பண்ணாத.

ரகு சோகமா நடந்து வரான்.

கீர்த்தி : நீ சோகமாவே இருக்க,கள்ளு குடிக்கிறியா.

ரகு : ஏய் இப்போவா, இன்னைக்கு வேற வருண் வர்ஷினி கதைய கேட்கணும்.

கீர்த்தி : இப்போ மணி 6.15 தான், இன்னைக்கு முழு நாள் இருக்கு, பாத்துக்கலாம்.

ரகு : ஓகே.

ரகுவும், கீர்த்தியும் வீட்டுக்கு வந்துடுறாங்க.

குல்லு, வீரானு ரெண்டு பேரு கீர்த்திய வீட்ல வந்து பாக்குறாங்க. கள்ளு பாட்டில் 5 குடுக்குறாங்க.

குல்லு : இதாமா கள்ளு.

கீர்த்தி : தேங்க்ஸ்னா. ரகு இவங்க ரெண்டு பேரும் எங்க விவசாய நிலத்துல, நான் பொறந்ததுல இருந்து, வேல செய்யுறாங்க. எனக்கு ரொம்ப புடிச்சவங்க.

ரகு அவங்கள பாத்து வணக்கம் சொல்றான்.

குல்லு : சரி நாங்க கிளம்புறோமா.

கீர்த்தி : நீங்க இருங்க, ரகு கூட குடிங்க இன்னைக்கு.

குல்லு : மா இன்னைக்கு வேல இருக்கு, உங்க அப்பா திட்டுவாரு.

கீர்த்தி : நான் அப்பா கிட்ட பேசிக்குறேன், இன்னைக்கு லீவு எடுத்துகோங்க.

குல்லு : அப்போ சரி மா.

கீர்த்தி : டேய் ரகு, குடிக்க ஆரமிங்க.

ரகு : ரஞ்சித்த கூப்பிடு.

கீர்த்தி : அவன் குயிலிய பாக்க போய் இருக்கான். குயிலி மெசேஜ் பண்ணா.

ரகு : இவளோ காலைலயா.

கீர்த்தி : காதல் படுத்தும் பாடு.

எல்லாரும் குடிக்க ஆரமிக்கிறாங்க.

குல்லு : என்ன மா கீர்த்தி, இந்த தம்பிய கட்டிக்க போறியா என்ன, அப்டினு கேள்வி பட்டேன்.

கீர்த்தி : இன்னும் அம்மா அப்பாக்கும் சொல்லல னா.

குல்லு : கண்டிப்பா அம்மா அப்பா சம்மதிப்பாங்க. ஆமா மா தம்பி ஏன் சோகமா இருக்காரு.

கீர்த்தி : சந்திர போஸ் தெரு வழியா, ஒரு மாடு தொரத்த, ஒரு வீட்டுக்குள்ள ஓடிட்டான்.

குல்லு : போதும் விடு, இதுக்கு மேல என்ன நடந்து இருக்கும்னு எனக்கு தெரியும். அந்த தெரு மோசமான ஜாதி வெறி குரூப் ஆச்சே.
ரகு தம்பி, விடுங்க, அத மறந்துடுங்க.

வீரா : ரகு தம்பி, நீங்க மாட்டு கறி சாப்பிடுவீங்காலா.

ரகு : சாப்பிடுவேன் னா.

வீரா : நான் ஓடி போய் ஒரு எட்டு, மாட்டு கறி வாங்கினு வந்துடுறேன். நீங்க குல்லு கூட குடிச்சிட்டு இருங்க.

ரகுவும் குல்லுவும் குடிக்கிறாங்க.

ரகு : னா இங்க எல்லாரும் ஜாதி பாப்பாங்களா.

குல்லு : இல்ல பா நான் லாம் பாக்க மாட்டேன், நிறைய பேரு பாக்க மாட்டங்க. அந்த சந்திர போஸ் தெருவுல இருக்கவங்க ரொம்ப மோசம் பா. அவங்களால தான் அப்போ அப்போ ஊர்ல சண்டை வரும்.

ரகு : அவங்கள எதாவது பண்ணனும்னா.

குல்லு : அவங்கள கடவுள் பாத்துப்பான் பா.

ரகு நல்லா போதை ஆகிட்டான். திடிர்னு கள்ளுல தண்ணி கலந்து குடிக்குறான்.

குல்லு : ரகு தம்பி, நீங்க போதை ஆகிட்டீங்க, யாரும் கள்ளுல தண்ணி கலந்து குடிக்க மாட்டாங்க.

ரகு : காக்கா தண்ணில கள்ளு போட்டு குடிச்சா, அத புத்திசாலி காக்கானு சொல்றிங்க, நான் கள்ளுல தண்ணி போட்டு குடிச்சா, என்ன எதும் சொல்லமாற்றிங்க

குல்லு : தம்பி உங்கள காக்கானு சொல்ல முடியாதுல.

ரகு : னா, புத்திசாலினு சொல்லலனு சொல்ல வந்தேன், யாராவது காக்கானு கூப்பிட ஆசை படுவாங்களா.

வீரா : மாட்டு கறி வாங்கிட்டு வந்துட்டேன்.

ரகு : இத கொன்னு தான் சமைச்சாங்களா.

வீரா : வேற எப்படி சமைப்பாங்க. சரி உங்களுக்கு புடிச்ச மாதிரி பதில் சொல்றேன். இத சமச்சோம், ஆனா உயிரோட தான் இருக்கு.

ரகு : உயிரோட சமச்சீங்களா, அப்போ முளகா பொடி போடும் போது, அதுக்கு எரிஞ்சு இருக்கும்ல.

வீரா : என்ன எப்படியும் பேச முடில, இவரு கிட்ட. ரகு தம்பி, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்து இருக்கேன்.

ரகு : இந்த மாட்டு கரிய நீங்க வெட்டி தான் இருக்கீங்க, ஆனா அது உயிரோட தான் இருக்குனு சொல்லுங்க, அது தான் எனக்கு குட் நியூஸ்.

வீரா : அப்படி எப்படி சொல்ல முடியும்.

ரகு : சரி குட் நியூஸ் என்னனு சொல்லுங்க.

வீரா : உங்கள திட்டுனான்னுங்கள, சந்திர போஸ் தெருல, அந்த ஜாதி காரங்கல ஒருத்தன போட்டு கணேசன் கடையில அடி பின்னிட்டு இருக்காங்க,சில பசங்க

ரகு : அவங்கள அப்படி தான் அடிக்கணும்.இந்த சந்தோஷத்த ஒரு ரவுண்டு அடிச்சு கொண்டாடுவோம். இந்தாங்க வீரா அண்ணா இந்த மாட்டு கரிய சாப்பிடுங்க, ஆனா கடிக்காதீங்க அது உயிரோட இருக்குல, அதுக்கு வலிக்கும்.

வீரா : கடிக்காம சாப்டா, வயித்துக்கு ஒத்துக்காது பா.

ரகு : நீங்க குட் நியூஸ் சொல்லி இருக்கிங்க, அந்த ஜாதி காரங்கல அப்படி தான் அடிக்கணும். ஒருத்தனயும் விட கூடாது. கணேசன் கடைல ஏன் ஒருத்தர அடிக்குறாங்க. நிறைய பேர அடிக்கலாம்ல.

வீரா : தம்பி கணேசன் கடை சின்னது, அங்க நிறைய பேர அடிக்க முடியாது.

ரகு : அப்போ அவனுக்கு, நிறைய branch இந்த ஊர்ல வச்சு குடுங்க, எல்லா branch லையும் அந்த ஜாதி காரங்கல அடிக்கட்டும்.

வீரா : தம்பி பேங்க்க்கு தான் branch லாம் இருக்கும், இது பொட்டி கடை.

ரகு : அந்த ஜாதிகாரங்க ஆம்பளைங்க மட்டும் இல்ல பொம்பளைங்களையும் அடிக்கணும்.

வீரா : ஓகே தம்பி.

ரகு : அந்த ஜாதில இருக்க, திருநங்கைகளையும் அடிக்கணும்.

கீர்த்திக்கு ஒரு கால் வருது. கீர்த்தி முகம் சீரியஸா மாறுது.

ரகு : என்ன கீர்த்தி உன் முகம் சந்தோஷமா இருக்கு.

வீரா : அது ஏன் சீரியஸா இருக்குனு கேட்கணும்.

ரகு : அது தான் ஏன் கீர்த்தி சீரியஸா இருக்க.

கீர்த்தி : கணேசன் கடைல ஒரு பையன அடிக்கறது கேட்டு சந்தோஷ படுறல.

ரகு : ஆமா.

கீர்த்தி : அது நம்ம ரஞ்சித்.

ரகு மூஞ்சு டக்குனு மாறுது, அவன் தரைல உட்கார்ந்து இருந்தான்,அவன் எழுந்த உடனே பெஞ்ச் டேபிள்ல இருந்து, கள்ளு பாட்டில் கீழ விழுது. பக்கத்துல ஒரு தண்ணி தொட்டி இருக்கு, அதுல ரகு மூஞ்ச கழுவுறான்.

கீர்த்தி : வேணா ரகு, நீ போதையில இருக்க, உன்னால முடியாது.

ரகு பக்கத்துல இருந்த பக்கெட் எடுத்து தண்ணி மொண்டு தலைல ஊதிக்குறான். வீரா, ரகுவுக்கு டவல் குடுக்குறாரு, அப்பறம் ஒரு புது ஷர்ட் குடுக்குறாரு, அத போட்டுக்குறான்.

ரகு : கீர்த்தி, ரஞ்சித் இருக்க எடத்துக்கு என்ன கூட்டினு போ.

கீர்த்தி, ரகுவ, ரஞ்சித் இருக்க இடத்துக்கு கூட்டினு போறா. 5 பேரு ரஞ்சித்த சுத்தி இருக்காங்க. அதுல நாலு பேரு ரகுவ பாத்துட்டு, ரகு கிட்ட வராங்க. ரஞ்சித் ரகுவ பாத்ததும் எழுந்து நிக்குறான். வெள்ளையன்னு ஒருத்தன்,ரஞ்சித் கிட்ட, டேய் எதுக்கு எழுந்துரிச்ச உட்காருனு சொல்றான், அதுக்கு ரஞ்சித் சிரிக்கிறான்.வெள்ளையன், ரஞ்சித்த பாத்து பயம் போய்டுச்சா, ஏன் சிரிக்கிறனு. கேட்குறான். அதுக்கு ரஞ்சித் அங்க ஒருத்தன் நிக்குறான்ல, அவன் உன்ன வெளுக்குற வெளுல நீ எப்படி கதற போறன்னு நினைச்சு சிரிச்சேன். அவன் என்ன அவளோ பெரிய ஆளானு கேட்டுட்டு வெள்ளையன், அந்த நாலு பேர தாண்டி போயி , ரகுவ தொடர்ந்து நாலு அற வைக்கிறான். ரகு வாங்குன அடியோட குனிஞ்சு இருக்கான், பக்கத்துல ஒரு 8 வயசு குழந்தை, அவ பேரு ரேகா,கிரிக்கெட் வேலையாட்டிட்டு பேட் கையோட , குனிஞ்சு இருக்க ரகுவ, குனிஞ்சு பாக்குறா, ரேகா ரகுவ பாத்து, அடிவாங்குனியானு சிரிக்கிறா, ரகுவும் அவள பாத்து சிரிக்கிறான். ரேகா அவ கைல இருந்த bat ah ரகு கிட்ட குடுத்து இந்தா, அடி அடின்னு சொல்றா. ரகு அந்த பேட்டால, வெள்ளையன, தலைல அடிக்க, அவன் மண்ணுல விழுறான். ரஞ்சித் அந்த நாலு பேருக்கும் நடுவுல போய் எதிர்ல இருந்த சுவர் மேல எகிறி உட்காருறான், உட்கார்ந்து நான் அப்பவே சொன்னேன், என்ன அடிச்சா ஒருத்தன் வருவான் டானு, எங்க கேட்குறாங்க. ரகு ஒருத்தன் கழுத்த புடிக்குறான், ரஞ்சித், அப்டியே அவனுக்கு ஒரு choke slam போடு மச்சான்னு சொல்றான். ரகு எல்லாரையும் அடிக்கிறான்.

கீர்த்தியோட அப்பா, ஸ்பாட்க்கு வந்து சண்டைய நிறுத்துறாரு. சமாதானம் ஆகி வெள்ளையன் குரூப் போறாங்க.ரஞ்சித் அந்த குரூப் நடந்து போறதையே பாக்குறான்.

ரகு : டேய் என்ன டா.

ரஞ்சித் : அதுல ஒருத்தன் என்ன ரொம்ப அடிச்சிட்டான் டா.

ரகு : யாரு.

ரஞ்சித் : அந்த ப்ளூ ஷர்ட்.

கீர்த்தி அப்பா, ரகு கைய புடிக்குறாரு. ரகு அவர் கைய எடுத்து விட்டுட்டு, ஒய்னு கூப்பிடுறான், வெள்ளையன் குரூப் திரும்பி பாக்குறாங்க, ரகு ஓடி போய் அந்த ப்ளூ ஷர்ட் பையன் எகுறி, மூஞ்சுலயே அடிக்கிறான், அவன் கீழ விழுறான்,மத்த எல்லாரும் பயத்துல ஒரு அடி பின்னாடி போறாங்க.

ரகு : என்ன டா ஓகே வா.

ரஞ்சித் : டபுள் ஓகே.

கீர்த்தி அப்பா அங்க இருந்து போயிடுறாரு.

அந்த ரேகா, சின்ன பொண்ணு, ரகுவ கூப்பிடுது.

ரேகா : ஒய், என் பேட்.

ரகு பேட் குடுக்குறான், அந்த பொண்ணு கிட்ட.

ரகு : தேங்க்ஸ் பாப்பா.

ரேகா : நான் உனக்கு ஒரு gift கொடுக்கலாம்னு இருக்கேன்.

ரகு : அந்த கைல எதும் இல்ல.இந்த கைல குழந்தைங்க விளையாடுற பேட், இது குடுத்து அனுப்பிடாத. அது வச்சு நான் ஒன்னும் பண்ண முடியாது.

ரேகா : கீழ வா.

கீழ உட்காருறான் ரகு.ரேகா, ரகு கன்னத்துல ஒரு முத்தம் குடுக்குறா.

ரகு : ஓ முத்தமா. ஓகே. நான் உனக்கு ஒரு gift குடுக்கலாமா.

ரேகா, ரெண்டு விரல் காட்றா.

ரகு : ரெண்டா, ஓகே.

ரகு, ரேகாக்கு ரெண்டு கன்னத்துல முத்தம் குடுத்துட்டு. bye சொல்லிட்டு போறான்.

ரஞ்சித் : மச்சான் கிட்ஸ புடிச்சட்ட டா.

ரகு : அதெல்லாம் இருக்கட்டும், ஏன் அந்த பசங்க உன்ன அடிச்சாங்க, நீ குயிலிய பாக்க தான வந்த.

ரஞ்சித் : குயிலி பாக்க வந்தா, கொஞ்ச நேரத்துல போய்ட்டா. சரி ரொம்ப நாள் ஆச்சே தம் அடிச்சுனு ஒரு சிகெரட் வாங்கி பத்த வச்சேன், புகை அந்த பசங்கல்ல ஒருத்தன் மூஞ்சுல விட்டுட்டேன், சாரி கூட கேட்டேன், அவன் அசிங்கமா திட்டுனான், அப்பறம் அவன் கூட இருந்த எல்லார்கிட்டயும் தனி தனியா சாரி கேட்க சொன்னாங்க, முடியாதுனு சொன்னதுக்கு அடிச்சாங்க.

ரகு : ஒரு நாலு பேரு பின்னாடி இருந்தா, அவனுங்களுக்கு என்ன என்ன பண்ண தோணுது பாரு.

ரஞ்சித் : ஆமா டா உங்களுக்கு எப்படி நான் இங்க இருக்கேன்னு தெரியும்.

கீர்த்தி : அந்த பொட்டி கடைக்காரர் தான் போன் பண்ணாரு, இந்த மாதிரி உங்க வீட்டுக்கு ரஞ்சித் ஒரு பையன் வந்து இருக்கானா, அவன இந்த பசங்க அடிச்சிட்டு இருக்காங்கனு சொன்னாரு.

ரஞ்சித் : அவருக்கு எப்படி தெரியும் நான் ரஞ்சித்னு.

கீர்த்தி : டேய், நீ அந்த பசங்க கிட்ட சொல்லி இருந்தல, இவங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்னு, அது வச்சு தான் அவரு போன் பண்ணாரு.

ரஞ்சித் : ஓகே ஓகே.

மூணு பேரும் வீட்டுக்கு போய்ட்டாங்க.வீட்ல இருக்கவங்க எல்லாம், ரஞ்சித்த் விசாரிக்குறாங்க. சேது வரான்.

சேது : ரஞ்சித் இப்போ தான் டா எனக்கு விஷயம் தெரியும், யாருனு காட்டு வா.

ரகு : மச்சான் நீ வெளிய போக கூடாது டா. ப்ளீஸ்.

சேது : டேய் எனக்கு இந்த ஊர்ல எல்லா பசங்களும் தெரியும் டா. நான் பேசுறன்.

ரகு : நீ வெளிய போன உடனே பேய் உன் மேல இறங்கிடிச்சினா வம்பா போய்டும்.

பாட்டி, தாத்தா வராங்க.

பாட்டி : என்ன பா ரஞ்சித், ரொம்ப அடி பட்டுடுச்சா. பாவி பசங்க இப்படி பண்ணிட்டாங்க.

தாத்தா : ஏய் அவன கூட்டுனு போய், அடி பட்ட எடுத்துல, மஞ்சள் போடு.

தாத்தாவும் பாட்டியும் ரஞ்சித்த ஒரு ஒரு கைல புடிச்சிட்டு கூட்டுனு போறாங்க.கீர்த்தி அத பாக்குறா.

கீர்த்தி : அங்க பாத்தியா ரகு.

ரகு : என்ன.

கீர்த்தி : தாத்தாவும் பாட்டியும் அவன ஒவ்வொரு கைல புடிச்சு கூட்டினு போகுதுங்க. இவங்க மூணு பேருக்கும் இருக்க bond ah பாத்தா. நாங்க அவங்க பேர பசங்கலா, அவனானு சில நேரம் சந்தேகமே வருது.

ரகு : ரஞ்சித்தும் நல்லா பேசுவான், உங்க தாத்தா பாட்டியும், எல்லா பசங்களையும் பேர பசங்களா பாக்குற மனசு இருக்கு. பாக்க நல்லா இருக்குல.

கொஞ்ச நேரம் கழிச்சு,ரஞ்சித்தும் கீர்த்தியும் பேசிக்குறாங்க.

கீர்த்தி : ரஞ்சித், நீ லாம் ஒருத்தர் கிட்ட அடிவாங்குனனு, என்னால நினைச்சு கூட பாக்க முடில, fighters ah அடிச்சு பறக்க விட வேண்டியது.

ரஞ்சித் mind வாய்ஸ் : க்கும். இவ நம்மள கலாய்க்கிரா போல.

கீர்த்தி : சொல் டா.

ரஞ்சித் : ஆண் தானே, ஆண் rugged ah இருப்பான்னு நினைக்காதீங்க, நான் கொஞ்சம் soft ஆன ஆளு.

கீர்த்தி : அப்டியா, அப்பறம் ஏன் facebookல, ரஞ்சித் rugged boyனு பேர் வச்சு இருக்க.

ரஞ்சித் : மாத்திடுறன்.

கீர்த்தி : இந்த இன்ஸ்டாகிராம், ட்விட்டர் லாம்.

ரஞ்சித் : அக்கௌன்ட் க்ளோஸ் பண்ணி, uninstall பண்ணிடுறேன்.

காலைல 10 மணி.

ரகு : பேய் வர டைம் ஆச்சு, எல்லாம் ரெடி ஆகுங்க.

ரஞ்சித் : ஏன் ரெடி ஆகணும், நேத்தே, அந்த பேய்ங்க நடந்து தான் போச்சுங்க.இன்னைக்கும் அதே தான் பண்ணுங்க.

ரகு : எதுக்கோ கதவ மூடுங்க.

சேது முன்னாடி நடக்க, சித்தப்பா பின்னாடி மெதுவா நடந்து வராங்க.

ரஞ்சித் : நான் சொன்னல இதுங்க, ரன்னிங்க விட்டுட்டு வாக்கிங் பண்ண ஆரமிச்சுடிச்சுங்கனு, பாரு.

பேய்ங்க திரும்பி மேல போக, படிக்கட்டு கிட்ட போகுதுங்க. ரகு, வருண்னு கூப்பிடுறான், அப்ப கூட திரும்பல, திறம்பவும் வருண்ணு கூப்பிடுறான், சேது நிக்குறான்.

ரகு : வருண், உன் கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா.

திரும்பி சேது சிரிக்கிறான்.

ரஞ்சித் : டேய் மச்சான், சிரிக்குது டா. கேளு கேளு.

ரகு : நீ யாரையோ, கொலை பண்ண கூடாதுனு, வர்ஷினிய தடுக்குற. நேத்து சந்திரன் உடம்புல அங்க வந்த போது , அப்போ அவ கொள்ளணும் நினைக்கிற ஆள கொன்னு இருக்க முடியும்ல.

சேது : அப்போ அவ பக்கத்துல தான், நானும் இருந்தேன், எதுவும் நடக்க விட்டு இருக்க மாட்டேன்.

ரகு : சரி இன்னொரு கேள்வி.

சேது : நீ ஒரு கேள்வி தான் கேட்குறன்னு சொன்ன.

சொல்லிட்டு சேது மேல நடக்க ஆரமிச்சுட்டான்.

ரஞ்சித் : ஸ்ட்ரிக்ட் ஆன பேய், கூட ஒரு வார்த்தை பேச மாட்டிங்குது.

ரகு : இவங்க தான் வருண், வர்ஷினியோட பேய்னு தெரியும், அத திரும்பவும் உறுதி பண்ணிக்கிட்டேன்.

கீர்த்தி ரகு கிட்ட வரா.

கீர்த்தி : டேய் ரகு, வருண் வர்ஷினி பத்தி தெரிஞ்சிக்க, அந்த பெரியவர் கணியன் நம்மள இன்னைக்கு வர சொன்னாருல, அவருக்கு போன் பண்ணேன், அவரு கொஞ்சம் வெளிய போகணுமாம்.வருண் வீட்டுக்கு வெளிய, அவன் friends டெய்லி கொஞ்ச நேரம் நிப்பானுங்க, அவங்கள சாயுங்காலம் 4 மணிக்கு போய் பாருங்கனு சொன்னாரு.

ரகு : ஓகே போய்டுவோம்.

ரகுவும் கீர்த்தியும், வருண் friends ah பாக்க போறாங்க.

கீர்த்தி : ரகு அந்த பசங்க தான் போல. கிட்ட போய் பாப்போம்.

ரகு : தம்பிகளா நீங்க வருண் friends ah.

ஸ்ரீதர் : ஆமா னா நீங்க யாரு.

ரகு : என் பேரு ரகு, என் friend மேலயும், அவனோட சித்தப்பா மேலயும், வருணும், வர்ஷினியும் பேய்யா இருக்காங்க.

ஸ்ரீதர் : உங்க friend பேரு என்ன.

ரகு : சேது.

வருண் friends ஒருத்தர் ஒருத்தர பாத்துக்குறாங்க.

ஸ்ரீதர் : இப்போ ஏன் உங்க friend மேல அவங்க பேய் இருக்குனு, எங்களுக்கு புரியுது.

ரகு : ஏன்.

ஸ்ரீதர் : அது ஏன் உங்க கிட்ட சொல்லணும்.

ரகு : உன் friend இந்த உலகத்த விட்ட நிம்மதியா போனும்னா, அவன் எதுக்காக, யார கொல்றதுக்கு பேய்யா இருக்கானு எனக்கு தெரியனும்.

ஸ்ரீதர் : நீங்க உங்க friend காக இத பண்றிங்க.

ரகு : உன் friend வருண்காகவும் தான்.அவன் ஆத்மா சாந்தி அடையனும்ல.

ஸ்ரீதர் : கொஞ்சம் பெரிய கதையா இருக்குமே, பரவா இல்லையே.

ரகு : இந்த கதைய கேட்க தான் இவளோ நாள் தேடிட்டு இருந்தோம்.

ஸ்ரீதர் : சரி வாங்க, இப்படி உட்காருங்க.

பிளாஷ் பேக் (சில நாட்களுக்கு முன்பு நடந்தவை ).

வருணும், அவன் friends 4 பேரும்,கிரிக்கெட் விளையாடிட்டு வீட்டுக்கு போறாங்க, சைக்கிள தள்ளிகிட்டு போறாங்க.

ஸ்ரீதர் : டேய் வருண நடுல விட்டு, நம்ம ரெண்டு சைடுல நடப்போம் டா.

வருண் : ஏய் எதுக்கு என்ன நடுவுல நடக்க சொல்றிங்க.

ஸ்ரீதர் : இல்ல டா எப்பவுமே ஹீரோ எல்லாம் நடுவுல தான் நடப்பாங்க, ஹீரோ friends சைடுல் வருவாங்க.

வருண் : ஏன்டா இதெல்லாம் நீயா சொல்ற. எனக்கு எதோ என்ன தப்பிக்காத மாதிரி கேட் போடுற மாதிரி தெரியுது.

ஸ்ரீதர் : உன் கிட்ட சில விஷயங்கள் கேட்கணும், சில விஷயம் சொல்லணும்.

வருண் : அப்டி வாங்க விஷயத்துக்கு.

ஸ்ரீதர் : நம்ம friends மத்தில உனக்கு ஒரு பேர் இருக்கு, அது உனக்கு தெரியாது.

வருண் : கூப்பிட தான டா பேரு, உங்களுக்குள்ள வச்சுக்க எதுக்கு பேரு.

ஸ்ரீதர் : பேர சொல்லிடலாமா.

வருண் : சொல்லி தொல டா.

ஸ்ரீதர் : சைக்கோ.

வருண் : ஏன்டா இந்த பேரு எனக்கு.

ஸ்ரீதர் : சொல்றன்,கிரிக்கெட் நல்லா விளையாடுவ ஆனா எப்பயாச்சும் விளையாட வருவ, கிளாஸ் first வருவ, நீ புக் எடுத்து பாத்ததே நாங்க பாத்தது இல்ல, part டைம் jobக்கு வேற போகுற. பாக்க நல்லா இருப்ப, பொண்ணுங்கள பாக்கவே மாட்ட, அது மட்டும் இல்ல பொண்ணுங்கள ரீல்ஸ்ல கூட பாத்துட கூடாதுனு இன்ஸ்டாகிராமே யூஸ் பண்ண மாற்ற.உனக்கு ஒரு அக்கா இருக்காங்கனு மட்டும் சொல்ற ஆனா இது வரைக்கும் 2 வர்ஷத்துல ஒரு தடவ கூட எங்கள உன் வீட்டுக்கு கூப்பிடினு போனது இல்ல, உங்க அக்காவையும் காட்னது இல்ல.டேய் நம்ம இன்னும் ஒரு வருஷத்துல, காலேஜ் படிப்பயே முடிக்க போறோம் டா.

வருண் : இது தான் விஷயமா. உனக்கு உங்க அக்கா யாரு.

ஸ்ரீதர் : எனக்கு எங்க அக்கா, அக்கா தான்.

வருண் : எனக்கு அக்கா தான் அம்மாவும், அப்பாவும். எங்க அம்மா அப்பா எனக்கு 7 வயசு இருக்கும் போதே போய் சேர்ந்துட்டாங்க,அப்போல இருந்து வேலைக்கு போய் என்ன பாத்துக்குறா. அவளுக்கு வாய் பேச முடியாது. அவள போல பேச முடியாத சில பேரு, அவள கல்யாணம் பன்றேன்னு வந்தாங்க ஆனா அவங்க என் அக்காவ கல்யாணம் பண்ண ரெடியா தான் இருந்தாங்க, ஆனா இலவச இணைப்பா, என்ன சேர்த்துக்க விரும்பல, அதுனால, அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. இப்போ அவளுக்கு 27 வயசு. நான் கிரிக்கெட் விளையாட அதிகமா வர மாற்றேன்னு கேட்டல, நீங்க விளையாடிட்டு மட்டும் வந்துடுவீங்களா, opponent டீம் கூட ஒரு சின்ன அடிதடியாச்சும் பண்ணுவீங்க. நான் எங்க வீட்டுக்கு, அதிகபட்சம் பண்ண கூடிய நல்லது, எந்த பிரச்னையும் வீட்டுக்கு இழுத்துனு வராம இருக்கறது தான். அப்பறம் கிளாஸ் first எடுக்குறேன், part டைம் ஜாப்க்கு போயிட்டேனு கேட்டல. நான் part டைம் job போறதே பைனல் இயர் நம்ம ப்ராஜெக்ட் பண்ணனும், லேப்டாப் வாங்கணும், அதுக்காக first இயர்ல இருந்தே, part டைம் job பண்ண ஆரமிச்சேன். கிளாஸ் first எடுத்தது எல்லாம் ,பேச வேணா, எனக்கு படிக்கறது எல்லாம் ஒரு கஷ்டமான விஷயமே இல்ல. அப்பறம் ஏன் பொண்ண பாக்க மாட்றனு கேட்ட , என் வீட்ல கல்யாணம் வயசுல ஒரு அக்கா இருக்கு, என்னால அவளுக்கு கல்யாணம் நடக்காம போச்சு, அப்பறம் எப்படி நான் பொண்ண பாத்து ஜாலியா பேச முடியும்.

ஸ்ரீதர் : சரி ஏன் எங்கள உன் வீட்டுக்கு கூட்டினு போ மாற்ற.

வருண் : என் வீடு ஒன்னும் அவளோ அழகா இருக்காது டா. வீட்டுக்கு பெயிண்ட் கூட அடிச்சது இல்ல.

ஸ்ரீதர் : எங்களுக்கு உன் அக்காவ பாக்கணும்.

வருண் : அன்னைக்கு தான் போட்டோ காமிச்சனே.

ஸ்ரீதர் : ஜோக்கா. இப்பவே வீட்டுக்கு கூட்டுனு போற.

வருண் : சரி வாங்க போவோம்.

வருண் அவன் friends ah வீட்டுக்கு கூட்டினு போய்ட்டான்.

வருண் : அக்கா இவங்க என் friends, காலேஜ்ல ஒண்ணா படிக்கிறோம்.

வர்ஷினி எல்லாரையும் உட்கார சொல்லி கை காட்றா.

வர்ஷினி : இவங்க வராங்கனு முன்னாடியே சொல்லி இருக்கலாம்னு (கை அசைவுல வருண் கிட்ட சொல்றா).

வருண் : இப்போ திடிர்னு முடிவு பண்ணோம்.

வர்ஷினி : வெயிட் பண்ண சொல்லு, எல்லார்க்கும் சாப்பாடு செய்யுறேன்.

ஸ்ரீதர் : அக்கா என்ன சொல்றாங்க டா.

வருண் : சாப்பாடு எல்லார்க்கும் செய்யுறனே சொல்றாங்க.

ஸ்ரீதர் : அக்கா கொஞ்ச நேரம் முன்னாடி தான், ஒரு கடைல சாப்ட்டோம். எதும் வேணா

வர்ஷினி எதோ கை அசைக்குறா.

வருண் : டீ போடுறேன்னு சொல்றா.

ஸ்ரீதர் : ஓகே கா.

டீ stove ல வச்சிட்டு வந்து வர்ஷினி, வருண் friends கிட்ட பேசிட்டு இருக்கா.

வர்ஷினி கை அசைச்சு பேசுறா. வருண், வர்ஷினி என்ன சொல்றானு சொல்றான்.

வருண் : எனக்கு உங்க எல்லாரையும் பத்தி தெரியும்னு சொல்றா.

விஸ்வா : எங்க எங்கள பத்தி சொல்லுங்க.

வர்ஷினி செய்க பண்ரா.

வருண் : விஸ்வா,இந்த குரூப்லயே புத்திசாலி பையன். வருண் கிளாஸ் first எடுத்தாலும், எல்லா proffessors உம். விஸ்வாவ தான் புத்திசாலி பையன்னு சொல்லுவாங்க.வாத்தியார்களுக்கு செல்ல பிள்ளை.

அந்தோணி : என்ன பத்தி சொல்லுங்க.

வர்ஷினி செய்க பண்ரா.

வருண் : நீ ரொம்ப கோபக்காரன், உள்ள ஒன்னு வச்சு வெளிய பேசமாட்ட.

சிவா : நானு.

வர்ஷினி செய்க பண்ரா.

வருண் : நீ ரொம்ப கூச்ச படுவ. கல்யாணத்துல சாப்பிடும் போதும் கூட, சாம்பார், ரசம் லாம் friends தான் கேப்பாங்க. உனக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்றேன், வருண்க்கு உன்ன தான் எல்லா friends விட கொஞ்சம் அதிகமா பிடிக்கும்.

சிவா : அப்டியா டா வருண் என்ன தான் புடிக்குமா.

ஸ்ரீதர் : என்ன அவன அதிகம் புடிக்கும், அப்போ நான் என்ன தக்காளி தொக்கா.சரி என்ன பத்தி சொல்லுங்க கா.

வர்ஷினி செய்க பண்ரா.பண்ணிட்டு சிரிக்கிறா.

ஸ்ரீதர் : டேய் வருண், ஏன் அக்கா எதோ சொல்லிட்டு சிரிக்கிறாங்க.

வருண் : நாயா இருந்தாலும் நீ பொம்பள நாயா இருந்தா தான் கொஞ்சுவியாம்.

எல்லாரும் சிரிக்கிறாங்க.

ஸ்ரீதர் : டேய் வருண், எல்லார பத்தியும் நல்லா சொல்லி இருக்க, என்ன பத்தி மட்டும் இப்படி சொல்லி வச்சு இருக்க, போடா. இப்போ என்ன பத்தி நல்லதா எதாவது சொல்லுங்க.

வர்ஷினி கை அசைக்குறா.

வருண் : நீ உன் friends க்கு உதவி னா , முதல போய் நிப்ப.நான் தேங்கா பத்த வாங்க சொன்னா கூட வருண் திட்டிகிட்டே போவான், ஆனா நீ culturalsக்கு டான்ஸ் ஆட டிரஸ் கிடைக்கலன்னு, பக்கத்துல இருந்த எல்லா ஊருக்கும் போய் அலைஞ்சு வாங்கிட்டு வந்தான்.

ஸ்ரீதர் : டேய் சிவா, வருணுக்கு உன்ன தான் புடிக்கும்னு ரொம்ப பெருமை படாத, அவன் எனக்காக டிரஸ் தேடி எப்படி அலைஞ்சு இருக்கான் பாரு.

வர்ஷினி டீ எடுத்துனு வந்து தராங்க. அப்டியே எல்லாருக்கும் பிஸ்கட் குடுக்குறாங்க.

அந்தோணி : அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க.

வர்ஷினி சந்தோஷ படுறா.

வருண் : இப்போ உனக்கு மட்டும் ரெண்டு பிஸ்கட் அதிகமா வரும் பாரு.

வர்ஷினி எதோ கை அசைக்கிறா, வருண பாத்து.

அந்தோணி : என்ன டா சொல்ராங்க உன்ன பாத்து.

வருண் : அவனாவது அழகா இருக்கேன்னு சொல்றான், நீ ஒரு தடவ கூட சொல்லலனு சொல்றா.

வர்ஷினி திரும்பவும் கை அசைக்கிறா.

வருண் : நான் அவன ஒரு நாளைக்கு நாலு தடவ அழுகு தங்கம்னு கொஞ்சுடுவேன், ஆனா அவன் ஒரு நாள் கூட சொல்ல மாட்டான்.

அந்தோணி : இப்போ என்ன கா அவன் உங்கள அழகா இருக்கீங்கனு சொல்லணும், அப்டி தான, இப்போ சொல்லுவான். டேய் வருண் சொல்றா, இப்போ நீ சொல்ற

வருண் ஒரே இடத்தையே பாத்துட்டு இருக்கான், எல்லாரும் அவனையே பாக்குறாங்க.

வருண் : ஒரு நாள், கடவுள் சிவன் என்ன நேர்ல வந்து பாத்தாரு, என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்க, நான் படிக்கணும்னு சொன்னேன். உனக்கு வரம் குடுக்க வந்து இருக்கேனு சொன்னாரு. சரி குடுங்கனு சொன்னேன். நீ பத்து நாள் பொய் பேசாம இருந்தா, உனக்கு இந்த வரம் தரேன்னு சொன்னாரு. நான் லாம் பொய்யே பேசுனது இல்ல,10 நாள்ல வரத்த வாங்கிக்கிறேன்னு சொன்னேன்.
ஒரு நாள், நைட் நிலா என்ன பாக்க வந்துது, உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு சொல்லுச்சு, சொல்லுன்னு சொன்னேன். என்ன நிறைய கவிஞர்கள், ஒரு அழகான பெண் முகம்னா, அது நிலா போன்ற முகம்னு சொல்லி, நானும் ஒரு பெண்ணுனு நம்ப ஆரமிச்சிட்டேன், எனக்கு ஒரு சந்தேகம், பெண்கள்ல நான் அழகா, இல்ல உங்க அக்கா அழகா. நீ தான் அழகுன்னு சொன்னேன். என்ன யோசிக்காம சொல்லிட்டன்னு கேட்டுச்சு, ஏன்னா அதான் உண்மனு சொன்னேன். நிலா சந்தோஷமா போய்டுச்சு. 10 நாள் கழிச்சு கடவுள் சிவன் வந்தாரு, கூட ஒருத்தர் இருந்தாரு, யார் இவருனு கேட்டேன், பிரம்மானு சொன்னாரு. சரி கடவுள், நீங்க எதோ வரம் தரேன்னு சொன்னீங்கல அத குடுங்கனு கேட்டேன், கடவுள் நீ தான் பொய் பேசிட்டியே ஏன் உனக்கு வரம் தரணும்னு கேட்டாரு, நான் பொய் பேசவே இல்ல, பேசுனதும் இல்லனு சொன்னேன். நீ பொய் சொல்ற, நான் தான் நிலாவ உன் கிட்ட அனுப்புனேன், அவ நான் அழகா, உன் அக்கா அழகானு கேட்கும் போது, நிலா தான் அழகுனு சொன்ன நீ. இப்போ நான் கடவுள் சொல்றேன் உங்க அக்கா தான் அழகு.கடவுளே நான் பொய் சொல்லல, நிலா என்ன சொல்லிச்சுனு நல்லா யோசிச்சு பாருங்க, பெண்கள்ல நான் அழகா, உங்க அக்கா அழகான்னு கேட்டுது, என் அக்கா பெண் இல்லையே, அவ ஒரு தேவதை.

வர்ஷினி கண் கலங்கிடிச்சு.

வருண் : பிரம்மனும் ஆமா சிவன், நான் வர்ஷினிய தேவதையா தான் படைச்சேன்னு சொல்ராரு. கடவுள் சிவன், சரி பொய் பேசாம இருந்து நீ வரம் பெர தகுதியானவன் ஆகிட்ட, உனக்கு என்ன வரம் வேணும்னு கேளுனு சொன்னாரு, அடுத்த ஜென்மத்துல,அந்த தேவதைக்கு மகன் ஆகணும்.

வர்ஷினி அழுகைய கண்ட்ரோல் பண்ண முடியாம, உட்கார்ந்துட்டு இருந்த வருண கட்டி புடிச்சு அழுவுரா, அவனோட உச்சந்தலையில முத்தம் குடுக்குறா.

ஸ்ரீதர் ஆச்சர்யமா எழுந்துக்குறான்.

ஸ்ரீதர் : டேய் வருண், என்ன டா மிரட்டி விடுற. இதெல்லாம் எங்க வச்சு இருந்த.

விஸ்வா : டேய் ப்ளீஸ் ப்ளீஸ் டா இது மாதிரி எனக்கு ஒன்னு சொல்லு, என் ஆளுக்கு குடுத்துக்கிறேன்.

வருணும் வர்ஷினியும் சிரிக்குறாங்க.

ஸ்ரீதர் : சரி கா நாங்க கிளம்புறோம்.

எல்லா பசங்களும் எழுந்துக்குறாங்க. வர்ஷினி எல்லாரையும் இருக்க சொல்லிட்டு போறா.

வருண் : எங்க வீட்டு ஸ்பெஷல் எப்போ வெளிய போனாலும் விபூதி வச்சு விடுவா எங்க அக்கா.

எல்லாருக்கும் விபூதி வைக்கிறா வர்ஷினி, அந்தோணிக்கு விபூதி வைக்க போகும் போது.

வருண் : அக்கா, அவன் க்றிஸ்டின்.

வர்ஷினி கைய எடுத்துடுறா.

அந்தோணி : அக்கா நீங்க வைங்க, எல்லா சாமியும் ஒண்ணுனு தான் என் வீட்ல சொல்லி வளத்து இருக்காங்க.

வருனோட friends எல்லாம் கிளம்பி போயிடுறாங்க. நடந்து போய்ட்டு இருக்காங்க.

வருனோட friends, வருனோட தெருல நடந்து போய்ட்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து அவங்க கிட்ட, இந்த தெருல முருகன் வீடு எங்க இருக்குனு கேட்குறாரு.

அந்தோணி : தெரில ஐயா, வேற யாரு கிட்டனா கேளுங்க.

அந்த ஆள் : இந்த மைக் வேல செய்யாத பொண்ணு ஒன்னு இருக்காமே, அது வீடு பக்கத்துலனு சொன்னாங்க.

அந்தோணி : எதோ சொன்னீங்கல மைக்குனு.

அந்த ஆளு : மைக் வேல செய்யாத பொண்ணு, இந்த ஊம பொண்ணு வீட்டு பக்கத்து வீடு.

அந்தோணி, அந்த ஆள இப்படி வாங்கனு சொல்லி காதோட சேர்த்து ஒரு அற விடுறான், வாய் பேச முடியாதவங்கனு சொல்லணும். இன்னொரு அற விடுறான், மைக் வேல செய்யாதவங்கன்னா சொல்ற, கஷ்ட்ட படுறவங்கள பாத்து நக்கல் மயிறு பன்றியா. ஸ்ரீதர், விடுடானு சொல்லி அந்தோணிய கூட்டினு போயிடுறான்.

அடுத்த நாள்.

வருணும் வர்ஷினியும் அவங்க வீட்டு வாசப்படில உட்கார்ந்துட்டு இருக்காங்க. வருண் வர்ஷினியோட கால் நகத்த வெட்டிட்டே பேசிட்டு இருக்கான்.

வர்ஷினி கை அசைச்சு பேசிட்டு இருக்கா, வருண் கிட்ட.

வர்ஷினி : டேய் நேத்து நைட், தூங்கிட்டு இருந்த நீ,திடிர்னு எழுந்து போன் பாத்தியே ஏன்.

வருண் : அதுவா, இந்த வாய் பேச முடியாதவங்களுக்கு மேட்ரிமோனியல் இருக்கானு செக் பண்ண தோணுச்சு, அதான் பாத்தேன். இருக்கு பாத்த உடனே சந்தோஷம் வந்துச்சு, உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு.

வர்ஷினி : கல்யாண ஆசை லாம் இல்ல டா எனக்கு.

வருண் : எனக்கு அந்த ஆசை இருக்கு, உனக்கு செஞ்சு வைக்க. ஒரு மூணு வருஷம் எனக்கு குடு, படிக்க ஒரு வர்ஷம், வேல செய்ய 2 வர்ஷம். கண்டிப்பா நான் கேம்பஸ்ல பெரிய கம்பெனில சேருவேன். பெரிய சம்பளத்துல் இருப்பேன். அப்பறம் உனக்கு புடிச்ச பையன கட்டி வைப்பேன்.

வர்ஷினி : நீ நல்லா இரு டா, என்ன பத்தி யோசிக்காத.

வருண் : இந்த தியாக தீபமா லாம் பேசாத,கொஞ்சமாவது நீ ஒரு சின்ன பொண்ணுனு ஒரு நினைப்பு வச்சிக்கோ. எப்பவும் கிழவி மாதிரி பேசாத.

வர்ஷினி : சரி சரி. கிழவி பத்தி பேசும் போது பக்கத்து வீட்டு கிழவி வருது பார்.

வருண் திரும்பி பாக்குறான். ஐயோ இவலானு திரும்பிக்குறான்.

பக்கத்து வீட்டு பாட்டி பேரு மாலா.

மாலா : டேய் வருனே, பாட்டிக்கு ஒரு உதவி பண்ணு பா.

வருண் : பாட்டி,எப்பவுமே என்ன எதுனா வேல வாங்கிட்டே இருப்பியா.

மாலா : பாட்டிக்கு வயசாச்சுபா, நீ தான் உதவி பண்ணனும்.அடுப்பு எரிக்க கொஞ்சம் விறகு வெட்டி குடு.

வர்ஷினி போ சொல்றா வருண.

வருண் : கா எது எதோ சீரியல பாத்து, அந்த கதையெல்லாம் சொல்லுது இந்த பாட்டி, அந்த சீரியல என்ன பாத்து இருக்கியானு கூட கேட்குறது இல்ல, அவ இப்படி பட்டவ, இவ அப்படி பட்டவனு, சொல்லிட்டே இருக்கும். நான் விறகு வெட்டி போற வரைக்கும் பாட்டி பேச கூடாது, அப்போ தான் போவேன்.

மாலா : சரி பா. வா.

வருண் போறான்.

மாலா : பாக்கிய லக்ஷ்மி நாடகமாச்சு தெரியுமா.

வருண் : ஐயோ ஆரமிச்சிட்டா நான் போறேன்.

மாலா : சரி வா நான் பேசல.

மாலா வீட்டு வெளிய, விறகு வெட்டிட்டு இருக்கான். யாரோ எதையோ கீழ போட்டுட்டு போறா மாதிரி ரோட்ல கேக்குதுனு பாக்குறான் வருண், அங்க purse கீழ விழுந்தது தெரியாம போயிட்டு இருக்காங்க, அத பாத்துட்டு, எடுத்துனு போய் குடுக்குறான் வருண், அவங்கள கூப்பிட்டு அவங்க திரும்பி பாக்குறப்போ, இவன் முகம் ஆச்சர்யத்துல மாறுது.

வருண் : அக்கா நீங்களா.

ஸ்ரீ தேவி : யாரு தம்பி நீ.

வருண் : அக்கா, நான் தான் வருண், வர்ஷினியோட தம்பி.

ஸ்ரீ தேவி முகத்துல ஒரு சந்தோஷம்.

ஸ்ரீ தேவி : டேய் என்னடா அடையாலமே தெரில, இவளோ பெருசா வளந்துட்ட. மீச தாடிலாம் வளந்துடுச்சு.

வருண் : பின்ன, இன்னும் குழந்தையாவே இருப்பன. ஆமா ஒரு 5 வருஷமா ஆளே காணாம போயிட்டீங்க, எங்க இருக்கிங்க.
சரி, வாங்க நம்ம வீட்டுக்கு போலாம், வர்ஷினி பாத்தா, சந்தோஷ படுவா, உங்க friend ல.

வர்ஷினி, ஸ்ரீதேவிய பாத்துட்டு வேகமா நடந்து வந்து, வருண கைய புடிச்சு இழுத்துட்டு போறா.

வருண் : அக்கா, எங்க கூட்டினு போற, ஸ்ரீதேவி அக்காவ பாத்தியா இல்லையா.

வருணும் வர்ஷினியும் வீட்டுக்குள்ள போய்ட்டாங்க.

வருண் : அக்கா ஏன் இப்படி இழுத்துட்டு வர.

வர்ஷினி கைய அசைச்சு அவன் கிட்ட பேசுரா.

வர்ஷினி : அவ கிட்ட லாம் இனிமே நீ பேச கூடாது.

வருண் : ஸ்ரீதேவி அக்கா கிட்டயா.

வர்ஷினி : ஆமா.

வருண் : ஏன் பேச கூடாது, அவங்க வீட்ல தான என் சின்ன வயசுல, நீ வேலைக்கு போகும் போது, சாயுங்காலத்துல இருக்க சொல்லுவ. நமக்கு கஷ்டத்துல உதவினது சில பேரு தான், அதுல இவங்களும் ஒருத்தங்க. அவங்கள இப்படி தான் மரியாதை இல்லாம பண்ணுவியா.

வர்ஷினி : அவ என்ன வேல பன்றானு தெரியுமா உனக்கு.

வருண் : என்ன வேல.

வர்ஷினி : விபச்சாரம்.

வருண் ஒரு நிமிஷம் பேசல.

வருண் : அவங்களுக்கு என்ன கஷ்டமோ அந்த வேல பாக்குறாங்க.

வர்ஷினி : எனக்கு அதெல்லாம் தெரியாது, நீ அவ கிட்ட பேச கூடாது.

வருண் அமைதி ஆகிடுறான். வீட்டு வாசல்ல போய் உட்காருறான். வெளிய போய்ட்டு கொஞ்ச நேரம் ஒரு மரத்தடில இருக்கான், நைட் வீட்டுக்கு வரான்.

வர்ஷினி கை அசைச்சு, வருண் கிட்ட பேசுறா.

வர்ஷினி : சாப்பிட வா.

வருண் : நீ ஸ்ரீதேவி அக்காவ பத்தி அப்படி எண்ணம் வச்சுக்காத.

வர்ஷினி : நீ சாப்பிட வரியா இல்ல , நான் சாப்டாம போய் படுத்துக்கவா.

வருணும், வர்ஷினியும் சாப்பிட்டு தூங்குறாங்க.

அடுத்த நாள்.

வருண் காலேஜ்ல ஸ்ரீதர் கூட பேசுறான்.

ஸ்ரீதர் : டேய் நீ நம்ம அக்கா சொல்றத கேளு, விபச்சாரி கூட பேசுனா நம்மள இந்த ஊரு தப்பா பாக்கும்ல.

வருண் : என்ன டா நீயும் இப்படி பேசுற, வெளிநாட்டுல sex worker ன்றது ஒரு job, மத்த வேலைய போல அதையும் ஒரு job ah தான் பாக்குறாங்க.இங்க தான் அவங்க கிட்ட பேசுனா நம்மளயும் தப்பா நினைச்சுடு வாங்களோனு பாக்குறாங்க.

ஸ்ரீதர் : நாலு பேரு கூட தப்பா இருக்கறது, தப்பு இல்லையா.

வருண் : டேய் மனசுல கை வச்சு, நான் யாரையும் மனசுல தப்பா நினைச்சது இல்லனு சொல்றவங்க, ஒரே ஒரு ஆள தான் கல்யாணத்துக்கு முன்னாடியும், கல்யாணத்துக்கு அப்பறம் நினச்சேன் சொல்றதுக்கு இங்க யாரும் இல்ல. ஒவ்வொரத்தன் மனசுலயும் அவளோ சாக்கடை ஓடும் ஆனா நம்ம உடம்பு வச்சு வேலை செய்யறவங்கள தப்பா பாப்போம். இல்ல கேட்குறன் அந்த வேல செய்றவங்க, ரெண்டு வர்ஷம் ட்ரைனிங் எடுத்துக்கிட்டு இந்த வேல தான் செய்ய போறேனா பன்றாங்க, போதாத காலம் அவங்கல அந்த வேலைக்குள்ள தள்ளிடுச்சு.

ஸ்ரீதர் : நீ சொல்றதும் சரி தான்.

வருண் : எனக்கு ஸ்ரீ தேவி அக்காவை போய் பாக்கணும், நேத்து அவங்க எவ்ளோ மனசு கஷ்ட்ட பட்டு இருப்பாங்க. இப்போ தான் தெரிஞ்சவங்க ஒருத்தங்க கிட்ட, அவங்க எங்க இருக்காங்கனு கேட்டேன், அவங்கள போய் பாக்க போறேன்.

வருண் ஸ்ரீதர பாக்குறான்.

ஸ்ரீதர் : டேய் நீ போ, என்ன கூட கூப்டுடாத டா.

வருண் : சரி நான் போறேன்.

வருண், ஸ்ரீதேவிய பாக்க வீட்டுக்கு போறான், கதவ தட்றான். ஸ்ரீதேவி கதவ திறக்குறா.

ஸ்ரீதேவி : டேய் நீ எங்க இங்க.

வருண் : உங்கள நேத்து என் அக்கா, கஷ்ட்ட படுத்திட்டால அதான் மனசு கேட்கல, உங்கள பாக்க தான் வந்தன்.

ஸ்ரீதேவி : உள்ள வா.

வருண் வீட்டுக்குள்ள போய்ட்டான்

வருண் : ஏன் இங்க தங்கி இருக்கீங்க, ரெண்டு மூணு வீடு தான் பக்கத்துல இருக்கு.

ஸ்ரீ தேவி : நிறைய பேர் கேவலமா பாக்குறாங்க, இங்க இருந்தா கேவலமா பாக்குறது கம்மியா ஆகும் அதான்.

வருண் : ஓகே ஓகே. நேத்து எதும் வருத்த படலையே.

ஸ்ரீதேவி : வீட்டுக்கு கூட்னு போய் என்ன சொன்னா உங்க அக்கா.

வருண் : என்ன சொல்லி இருப்பான்னு நீங்களே யூகிச்சு இருப்பிங்க, உங்க கிட்ட பேச கூடாதான்னு சொன்னா.

ஸ்ரீ தேவி : உங்க அக்கா சொல்றதையே கேளு அதான் உனக்கு நல்லது.

வருண் : உங்களையும் நான் அக்காவா தான் பாக்குறேன்.14 வயசு வரைக்கும் உங்கள அக்கானு கூப்பிட்டு இருக்கேன், எங்க வீட்டு பக்கத்துல நீங்க இருந்து இருக்கீங்க, உங்க வீட்ல தான் விளையாடி இருக்கேன், திடிர்னு அஞ்சு வருஷம் நீங்க காணாம போய், இப்போ நீங்க செய்யுற வேலைய காரணம் காட்டி, உங்க பாத்தாலும் நான் பேசு கூடாது சொன்னா, என்னால எப்படி மாத்திக்க முடியும். உங்க மேல தனி அன்பு வைக்க எனக்கு காரணம் இருக்கு.

ஸ்ரீதேவி : என்ன காரணம்.

வருண் : நான் சின்ன வயசுல ஸ்கூல்ல முடிச்சிட்டு, எங்க வீட்ல இருக்க மாட்டேன், ஏன்னா எனக்கு இருட்டுனா பயம், அக்கா வேல முடிஞ்சு வர 8.30 மணி ஆகிடும் அதனால, ஸ்கூல்ல முடிஞ்ச உடனே என் சொந்தகாரங்க வீட்டுக்கு போய்டுவேன், அவங்களும் அப்போ நல்லா தான் பாத்துட்டு இருந்தாங்க என்ன,9 வயசு ஆகும் போது, எனக்கு ஸ்கூல் முடிச்ச உடனே எனக்கு பசிக்க ஆரமிச்சிடும், என் சொந்தக்காரங்க வீட்ல, சாப்பிடுவேன், 10 வயசு ஆகும் போது எனக்கு அவங்க திடிர்னு, சாயுங்காலத்துல் சாப்பாடு போடுறத, நிறுத்திட்டாங்க, என்ன சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் திட்டுவாங்க. என் அக்கா கிட்ட சொல்லலாம் பாத்தா, அந்த டைம் என்ன பாக்குறவங்க எல்லாம் உனக்காக தான் உங்க அக்கா கஷ்ட்ட படுறா, அவளுக்கு எந்த தொல்லையும் குடுத்துறாதன்னு சொல்லுவாங்க. அதனால சாயுங்காலத்துல் பசிச்சாலும், அவங்க திட்டினாலும் யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன். ஒருநாள் என் அக்காக்கு என் சொந்தக்காரங்க என்ன சரியா நடத்துலன்னு தெரிஞ்சு, அவங்க கிட்ட சண்டை போட்டுட்டு என்ன கூட்னு வந்துட்டா, அப்போ விஷயம் தெரிஞ்சு என்ன ஸ்கூல் முடிச்ச உடனே உங்க வீட்டுக்கு வர சொல்லிட்டீங்க நீங்க. நான் சாயுங்காலத்துல சாப்பிடுற பழக்கத்தை விட்டுட்டேன், ஒரு நாள் நீங்க,என்ன கூப்பிட்டு நீ ஏன் சாயுங்காலத்துல் சாப்பிட மாற்ற, நான் ஸ்கூல்ல படிக்கும், ஸ்கூல் முடிச்சு வீட்டுக்கு வந்த உடனே சாப்பிடுவேன், நீயும் சாப்பிடணும்னு சொல்லி எனக்கு சாப்பாடு குடுப்பீங்க. என்னால அதெல்லாம் மறக்க முடியாது, உங்களுக்கு என் மனுசுல ஒரு இடம் எப்பவுமே இருக்கும்.

ஸ்ரீதேவி : ஒரு குழந்தைக்கு சாப்பாடு போட்டதெல்லாம் பெரிய விஷயமா நினைச்சிக்க முடியும்.

வருண் : அதே குழந்தைக்கு தான், என் சொந்தக்காரங்க, சாப்பாடு போடல.

ஸ்ரீதேவி : விடு என்ன பேசி என்ன, எல்லாம் மாறிடிச்சு இப்போ, நேத்து உங்க அக்கா அப்டி நடந்துகனத்துக்கு நான் வருத்த படல டா, ஊர்ல ரொம்ப கேவலமான மனுஷங்க, என்ன புழு பூச்ச பாக்குற மாதிரி பாக்குறாங்க, உங்க அக்கா தேவதை டா, அவ என்ன அப்டி பாக்குறதுல ஒரு தப்பும் இல்ல.

வருண் : நீயும், தேவதை தான் கா.

ஸ்ரீதேவி : டேய் வெளிய வச்சு, யாரு முன்னாடியும் சொல்லிடாத டா சிரிச்சுரு வாங்க.

வருண் : நீ ஏன் தேவதைனு கூட எனக்கு தெரியும்.

ஸ்ரீதேவி : நீ எல்லாம் மனுஷங்களுக்கும் சந்தோஷத்தை தரனு மட்டமா எதும் பேசிடாத.

வருண் : இல்ல இல்லை. ஜீவானு ஒரு பையன் ஞாபகம் இருக்கானா, அவனுக்கு அப்போ 15 வயசு, என்ன விட 2 வயசு ஜாஸ்தி, அப்போ உனக்கு என் அக்கா வயசு, ஜீவா விட நீ ரொம்ப பெரியவ, ஜீவா ஒரு நாள் உன் கிட்ட லவ் பண்றேன் சொன்னானா, அப்போ நீ அவன திட்டல, கோப படல, அவன கூப்ட்டு உட்கார வச்சு தோல் மேல கை போட்டு, தம்பி இதெல்லாம் ஒரு வயசு காரணமா தோணுற விஷயம், இதெல்லாம் விட்டுட்டு நல்லா படி, ஆயிரம் அழகான பொண்ணு உன்ன தேடி வருவானு சொல்லி, நீ பயப்படாம போ நான் உங்க அம்மா கிட்ட இத பத்திலாம் சொல்ல மாட்டேன். போய் நல்லா படினு சொல்லி அனுப்பின. அப்போ தான் நீ தேவதையா என் கண்ணுக்கு தெரிய ஆரமிச்ச.

ஸ்ரீதேவி :சின்ன பையன் டா வேற என்ன சொல்ல முடியும்.

வருண் : நம்ம தெருல சங்கவினு ஒரு பொம்பள இருக்கு ஞாபகம் இருக்கா, அது எந்த பசங்கள பாத்தாலும், அவன் என்ன ஒரு மாதிரி பாக்குறானே சொல்லிட்டு இருக்கும் மத்த பொம்பளைங்க கிட்ட, ஆனா உண்மை என்னனா அவள யாருமே பாக்க கூட மாட்டாங்கன்ற உண்ம லேட்டா மத்த பொம்பளைங்களுக்கு தெரியும். தப்பா பாக்காத பசங்கள தப்பா பாத்ததா சொல்ற ஆளுங்களுக்கு மத்தில, ஒரு சின்ன பையன், வயசு கோளாறுல லவ் பண்றனு சொல்றானு, அன்பா சொல்லி அனுப்பனது எல்லாம், எல்லாராலயும் பண்ண முடியாது.

ஸ்ரீதேவி : என்ன பண்ணி என்ன டா, இப்போ கடவுள் என்ன எல்லாரும் இப்படி பாக்குற மாதிரி ஆக்கிட்டானே.

வருண் : டைம் வந்தா எல்லா மாறும்னு நம்புவோம். சரி கா வர்ஷினி அக்கா மெசேஜ் பண்ணிட்டா எங்க இருக்கணு, நான் போறேன், திரும்பவும் உன்ன வந்து பாக்குறேன்.

ஸ்ரீதேவி : சரி பாத்து போ. இப்படியே நல்ல பையனா இரு டா.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு.

வர்ஷினி, டீ எடுத்துனு வந்து வருண் கிட்ட குடுத்துட்டு, அவனோட உள்ளங்கையில ஒரு முத்தம் குடுக்குறா.

வருண் : இந்த உள்ளங்கையில முத்தம் குடுக்குற பழக்கம்,காலைல, நான் எழுந்த உடனே நீ கொடுக்கறது வழக்கம் தான், நம்ம சின்ன வயசு போட்டோலையும் நீ என் உள்ளங்கையில் முத்தம் குடுத்து இருக்க மாதிரி தான் போட்டோ இருக்கும், எப்பயாச்சும் முத்தம் குடுக்காம இருந்த நாள் இருக்கா.

வர்ஷினி யோசிக்கிறா.

வர்ஷினி : அம்மா அப்பாக்கு accident ஆன அன்னைக்கும், அடுத்த நாள் அவங்க செத்த அன்னைக்கும் கொடுக்கல.

வருண் : ஓ எனக்கு நீ முத்தம் குடுக்காத அப்பல்லாம், நம்ம குடும்பத்துல யாருக்கோ ஏதோ ஆகுது.

வர்ஷினி : டேய், எழுந்து போ டா, பேசுறான் பாரு பேச்சு. கிளம்புடா காலேஜ்க்கு.

வருண் காலேஜ் போயிட்டு, வீட்டுக்கு அவன் friend ஸ்ரீதர் கூட நடந்து வந்துட்டு இருக்கான். வர வழில, ரகுவோட friend சேது(சேது மேல தான் வர்ஷினி பேய் இருக்கு) தனியா பைக்க தள்ளிட்டு போய்ட்டு இருக்கான்.வருண், சேதுவ பாத்துட்டு கிட்ட ஓடி போய் பேசுறான். ஸ்ரீதர் அவங்க பேசுறத கொஞ்ச தூரத்துல இருந்து பாக்குறான்.

வருண் : சார் என்னாச்சு, ஏன் வண்டிய தள்ளிட்டு போறீங்க.

சேது : பெட்ரோல் இல்ல போல பா.

வருண் : இங்கயே வெயிட் பண்ணுங்க சார் இப்போ நான் வந்துடுறேன்.

வருண் : ஸ்ரீதர், இங்கயே இருடா வந்துடுறேன்.

வருண் வேகமா ஓடி போய், திரும்ப ஓடி வரும் போது பெட்ரோல் வாங்கிட்டு ஓடி வரான். வருண், சேது கிட்ட பெட்ரோல் குடுத்து, போட்டுக்க சொல்றான்.

சேது : தேங்க்ஸ் தம்பி, என்ன பா இவளோ வேகமா ஓடி வாங்கிட்டு வந்துட்ட.

வருண் : பரவா இல்ல சார், நீங்க எங்கனா அவசரமா போவீங்கள.

சேது : உன் பேரு என்ன பா.

வருண் : வருண்.

சேது : இந்த விநாயகர் கோயில் பக்கத்துல, ஒரு பெரிய வீடு இருக்குல, அதான் என் வீடு, வீட்டு பக்கம் வந்தா வா, பேசலாம்.

வருண் : ஓகே சார்.

வருணும் ஸ்ரீதரும் திரும்பவும் நடந்து போறாங்க.

ஸ்ரீதர் : டேய், என்ன நடக்குது இங்க.

வருண் : என்ன நடக்குது.

ஸ்ரீதர் : வேகமா நடக்க கூட மாட்ட எவனோ பெட்ரோல் இல்லாம நிக்கிறான்னு அந்த ஓட்டம் ஓடி போய், வாங்கிட்டு வர.

வருண் : டேய்.

ஸ்ரீதர் : என்ன சொல்லு.

வருண் : ஒரு நாள் வீட்ல, வர்ஷினி அக்கா அவன பாக்கறத பாத்தேன் டா.

ஸ்ரீதர் : அக்காக்கு புடிச்சு இருக்கா.

வருண் : ஆமா, அவ முகத்தை பாக்கும் போது அப்டி தான் தெரிஞ்சுது. இப்போ போனாரே சேது அவரும் அவள பாத்தாரு.

ஸ்ரீதர் : அப்போ ரெண்டு பேருக்கும் புடிச்சு இருக்கு, அடுத்து கல்யாணம் தான்.

வருண் : டேய் முட்டாள் தனமா பேசாத, அவருக்கு இன்னும் என் அக்காக்கு வாய் பேச வராதுனு தெரியாது டா, தெரிஞ்சா, இப்போ நான் ஓடுனேன்ல் ஒரு ஓட்டம் அத விட வேகமா ஓடிடுவாரு.

ஸ்ரீதர் : டேய் அப்பறம் இது நடக்காத விஷயம்னு தெரிஞ்சு, ஏன் நீ ஓடி போய் பெட்ரோல் வாங்கி குடுத்த.

வருண் : என் அக்காக்கு அவர புடிக்குமே டா. நான் கூட இல்லனா அவளுக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி இருக்கும், என்ன காரணம் காட்டி, அவள வேணாம்னு சில பேரு சொன்னாங்க. அப்படி இருக்க, இப்போ ஓடுனேன்ல் அந்த ஓட்டம் மட்டும் தான் டா அதிக பட்சம் என்னால இப்போ பண்ண முடியும்.

ஸ்ரீதர் : நீ வருத்த படாத டா. நம்ம அக்காக்கு சிறப்பான முறையில கல்யாணம் பண்றோம்.

வருண் : டேய் நீ இந்த விஷயம் நம்ம friends க்கு தெரியாம வச்சுக்கோ.

அடுத்த நாள் வருண் அவனோட part டைம் job க்கு போய்ட்டான்,வருனோட friends நாலு பேர் மட்டும் இருக்காங்க, விஸ்வாவும் சிவாவும் மழை பேஞ்ச தண்ணில நிக்கிறாங்க, ஸ்ரீதரும், அந்தோணியும் மழை பேஞ்ச தண்ணில, ஒருத்தர ஒருத்தர் தூக்கி போட்டுட்டு விளையாடிட்டு இருக்காங்க. அப்போ சேது அந்த வழில வந்து, அவனோட பைக் சேத்துல சிக்கிடுது, வண்டி என்ன முறுக்குனாலும், வண்டி நகரல. அப்போ ஸ்ரீதர் திரும்பி சேதுவ பாக்குறான்.

அந்தோணி : டேய் ஸ்ரீதர், என்ன அங்க வண்டி வச்சி இருக்கவரையே பாத்துட்டு இருக்க.

ஸ்ரீதர் : விடு.

அந்தோணி : என்ன தெரிஞ்சவறா.

ஸ்ரீதர் : வருண் சொல்ல கூடாதுனு சொல்லி இருக்கான்.

அந்தோணி : ஏன் என்னாச்சு, இந்த ஆளு வருண் கிட்ட எதாவது பிரச்னை பண்ணானா. டேய் வாங்க டா என்னனு கேட்போம்.

ஸ்ரீதர் : டேய் நில்லு நில்லு, பிரச்னைலாம் எதும் பண்ணல. இவரு பேரு சேது, நம்ம வர்ஷினி அக்காக்கு புடிச்சிருக்கு போலனு வருண் சொன்னான் , இந்த ஆளும் அக்காவ குறு குறுனு தான் பாத்து இருக்கான்.

அந்தோணி : அப்பறம் என்ன பிரச்னை இதுல.

ஸ்ரீதர் : அக்காக்கு பேச்சு வராதுன்னு தெரிஞ்சா,இவன் அவங்கள பாக்க மாட்டான்ல டா, இது என்ன சினிமாவா, தியாக தீபமா இருக்க. அத நினச்சு வருண் வருத்த பட்டான்.

அந்தோணி : சரி வாங்க டா எல்லாரும், அவர போய் பாப்போம்.

வருண் friends எல்லாரும், சேதுவ பாக்குறாங்க. சேது வண்டி சேத்துல சிக்கி, வண்டிய முறுக்கி கிட்டே இருக்கான் இன்னும்.

அந்தோணி to சேது : அண்ணா நாங்க வண்டிய தள்ளிட்டு வரோம்.

சேது வண்டிய விட்டு இறங்க பாக்குறான்.

அந்தோணி : அண்ணன் இரங்காதீங்க.

அந்தோணி : டேய் சிவா, விஸ்வா, ரெண்டு பேரும் போய் அண்ணன தூக்கி தோல்ல வச்சு, தூக்கிட்டு போய் தண்ணி இல்லாத எடுத்துல இறக்கிவிடுங்க.

சேது : தம்பிகளா, ஏன் இத பண்ணுறீங்க.

அந்தோணி : எங்க டிரஸ் லாம் சேரா தான் இருக்கு, உங்க டிரஸ் நல்லா இருக்கு, சேர்த்துல இரங்குனா பாழ் ஆகிடும்ல. அதான்.

சேதுவ தண்ணி இல்லாத இடத்துல இறக்கி விட்டுட்டு, வண்டிய குடுத்துட்டு போறாங்க வருண் friends. சேது, அவங்கள திரும்பி பாக்குறான் ஸ்ரீதரும், அந்தோணியும் சண்டை போட்டுக்குறாங்க.

சேது : தம்பிகளா ஏன் சண்டை போட்டுக்கிறீங்க.

அந்தோணி : இங்க பாருங்கனா,facebookல ஒரு பொண்ணு கிட்ட பேசி இவன் லவ் பண்ணான், இப்போ நேரா பாக்கும் போது அந்த பொண்ணுக்கு பேச்சு வராதுனு தெரிஞ்சு, அந்த பொண்ண கழட்டி விட்டுட்டான், தப்பு தான இது.

சேது : ரொம்ப தப்பு டா தம்பி, நமக்கு ஒருத்தர புடிச்சா, இந்த மாதிரி குறைகள எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது.

அந்தோணி : உங்களுக்கு அதே தான.

சேது : எனக்கு அதே தான்.

அந்தோணி,ஸ்ரீதர பாத்து மெசேஜ் போய் சேர்ந்துடுச்சு நம்ம போவோம்னு, ஒருத்தர், தோல்ல ஒருத்தர் கை போட்டுட்டு, போய்ட்டு இருக்காங்க.

சேது : இப்போ தான் சண்டை போட்டாங்க, இப்போ தோல் மேல கை போட்டுட்டு போறாங்க, நல்ல பசங்க டா இவங்க.


நைட் வேல முடிச்சிட்டு வந்துட்டு இருக்கான் வருண், ரோட்ல யாரோ பொம்பள ஒரு ஆம்பள கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கறத பாக்குறான். கிட்ட போய் பாத்தா அந்த பொம்பள ஸ்ரீதேவி.

வருண் : அக்கா யாரது, என்ன பிரச்னை.

ஸ்ரீதேவி, அந்த சண்டை போட்டுட்டு இருந்த ஆள கிளம்ப சொல்லிட்டு, வருண் கிட்ட வரா.

ஸ்ரீதேவி : ஒன்னும் இல்ல தெரிஞ்சவறு தான்.

வருண் : இல்லையே சண்டை போட்ட மாதிரி தெரிஞ்சுது.

ஸ்ரீதேவி : அந்த பையன ஒரு வர்ஷம் முன்னாடி லவ் பண்ணேன் டா.

வருண் : இப்போ.

ஸ்ரீதேவி : இப்போ திரும்ப லவ் பண்ணலாம்னு கேட்குறான் திட்டி அனுப்பி விட்டுட்டேன்.

வருண் : ஏன் அப்படி பண்ணீங்க.

ஸ்ரீதேவி : அவன் கொஞ்ச நாள் முன்னாடி வேற பொண்ணு கூட போய்ட்டான் டா. திரும்ப வாய்ப்பு குடுக்க விரும்பல.

வருண் : relationship ல உண்மையா இல்லனா சேத்துக்க கூடாது தான்.

ஸ்ரீதேவி : இவன்லாம் கண்டிப்பா ஒருநாள் நம்மள விட்டுட்டு போய்டுவான்னு தெரியும் டா முன்னாடியே.

வருண் : அப்பறம் ஏன் லவ் பண்ண.

ஸ்ரீதேவி, அவ கைய நெஞ்சுல ஒரு பக்கம் தேச்சிட்டே வரா.

ஸ்ரீதேவி : டேய் அவனுக்கு ஓசில ஒரு பொண்ணு உடம்பு தேவ, அவ கிட்ட இருந்து கொஞ்சம் காசு தேவ, எனக்கு பொய்யா ஒருத்தர் கேட்டாலும் பரவால, நீ சாப்டியா, நல்லா இருக்கியா கேட்க ஒரு ஆள் தேவ. ஐ லவ் யுனு ஒரு நாளைக்கு மூணு தடவ சொல்லுவான், பொய் தான்னு ஒரு பக்கம் தெரியும், ஆனா மனசு அதெல்லாம் ஆராயாது, அத நினச்சு சந்தோஷ படும்.நானும் ஒரு பொண்ணு தான டா எனக்கும் இந்த ஆசைலாம் இருக்கும்ல.

வருண் : உனக்கு மட்டும் இல்ல, எல்லா மனுஷனுக்கும் இது பொருந்தும்.எல்லாரும் இத தான் எதிர்பாக்குறோம். ஆமா கா ஏன் ஒரு பக்கம் நெஞ்சுல கைய வச்சு தேச்சிட்டே வர.

ஸ்ரீதேவி : அதெல்லாம் ஒன்னும் இல்ல டா விடு.

வருண் : நெஞ்சு எதுனா வலிக்குதா, சொல்லு ஹாஸ்பிடல் போலாம்.

ஸ்ரீதேவி : எல்லாம் இந்த MLA வீட்டுக்கு போய்ட்டு வந்ததால.

வருண் : என்ன MLA வும் உன் customer ah.

ஸ்ரீதேவி : இல்ல டா. எப்படி சொல்றது.

வருண் : அக்கா எனக்கு 20 வயசு ஆக போகுது அடுத்த வர்ஷம், சின்ன பையன் கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிக்கிறியோ.

ஸ்ரீதேவி : அதெல்லாம் இல்ல டா, தம்பி கிட்ட எப்படி சொல்றதனு யோசிக்கிறன் .என்ன கேவலமா நினைக்க மாட்டல.

வருண் : நீ எவளோ கஷ்ட்ட படுறன்னு எனக்கு தெரியும், அப்பறம் எப்படி நினைப்பன்.

ஸ்ரீதேவி : MLA தங்கச்சி தான் டா என் customer.

வருண் : ஓ அவ லெஸ்பியனா.

ஸ்ரீதேவி : அதான் டா. அவ மன நலம் பாதிக்க பட்டவ வேற, என்ன பாத்ததும் பாஞ்சு, நெஞ்ச கடிச்சு வச்சிட்டா. கண்ட எடுத்துல கடிப்பா.போகாமலும் இருக்க முடில அங்க.

வருண் : ஏன் அங்க நிறைய காசு தராங்களா.

ஸ்ரீதேவி : நம்ம கிட்ட புடுங்காம அனுப்புறாங்கலேன்னு சந்தோஷ படு. காசேல்லாம் எல்லாரும் தர மாதிரி தான் தருவாங்க. MLA கூப்டா போவேண்டியது தான், வேற வழி இல்ல.

வருண் : MLA கிட்ட இப்படி உங்க தங்கச்சி பன்றானு சொல்ல வேண்டியது.

ஸ்ரீதேவி : டேய், நான் அவர பாத்ததே இல்ல, அவர் தங்கச்சி தனி வீட்ல இருப்பா டா கொஞ்ச வேல ஆட்கள் கூட இருப்பாங்க பாத்துக்க. ரொம்ப tired ஆக்கிட்டா டா அவ, இனி ரெண்டு நாளுக்கு வேலைக்கு போபோறது இல்ல.

வருண் : கா இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கோ, எனக்கு வேலை கிடைச்சுடும், நீ, நான், வர்ஷினி அக்கா எல்லாம் சென்னை போய் செட்டில் ஆகிடலாம்.

ஸ்ரீதேவி : டேய் வர்ஷினி உன்ன, என்கிட்ட பேச கூட விட மாட்ட, நீ எதோ கதை சொல்ற.

வருண் : நான் அவள சம்மதிக்க வைக்குறன் என்ன நம்பு.உன் கெட்ட நேரம் சீக்கிரம் முடிவுக்கு வர போகுது.

ஸ்ரீதேவி யாரையோ பாத்து பயந்து நிக்குறா.

வருண் : என்ன கா ஏன் இப்படி திடிர்னு நின்னுட்ட.

ஸ்ரீதேவி : அங்க நிக்கிறாங்கல ரெண்டு பேரு,அது MLA அடி ஆளுங்க, அப்போ அப்போ என்ன கூப்டுவாங்க, காசு குறைவா குடுப்பாங்க, இன்னைக்கு வேற MLA தங்கச்சி என்ன ஒரு வழி பண்ணி இருக்கா, நான் tired ah இருக்கேன் என்னால போக முடியாது டா அவங்க கூட.

MLA அடி ஆளுங்க, சுப்பு, ராம்கியும், ஸ்ரீதேவி கிட்ட நெருங்கி வராங்க. சுப்பு ஸ்ரீதேவி கிட்ட பேசுறான்.

சுப்பு : ஏய் பைக்ல ஏறு.

ஸ்ரீதேவி : இன்னைக்கு வேணாமே.

சுப்பு : வேணாம் னா. ஓ MLA தங்கச்சினா தான் போவ, நாங்கெல்லாம் உனக்கு ஊக்க யாட்டும் தெரியுறோமா.

ஏய் ஏறுடினு சுப்பு அவள, கையை புடிச்சு இழுக்குறான்.

வருண் : னா அவங்கள விட்டுடுங்க, அவங்களுக்கு உடம்பு சரி இல்ல.

சுப்பு : ஏய் யாரு டி இவன் இந்த ஆணழகன் கூட போனும்னு தான் எங்க கூட வர மாற்றியா.

சுப்பு : டேய் இவளுக்கு எவளோ தரனு சொன்ன, எங்க கூட வரமாற்றா.

ராம்கி : டேய் அவன் இந்த ஊமச்சி தம்பி டா. நல்ல பொண்ணு அவ. அழகா வேற இருப்பா. பேரு வர்ஷினி

சுப்பு : அப்போ சரி இவள விட்டுடுவோம்.

ஸ்ரீதேவி கைய்ய விட்டுடுறான்.

சுப்பு : டேய் தம்பி, நீ கேட்ட மாதிரி இவள இன்னைக்கு விட்டுடுறோம். ஸ்ரீதேவி நீ போலாம் உனக்கு இன்னைக்கு லீவ்.

ஸ்ரீதேவியும், வருணும் போலாம்னு போறாங்க.

சுப்பு : டேய் தம்பி உங்க அக்கா வருவாளா டா.

வருண் : இப்போ தான கூட்டினு போ சொன்னிங்க.

சுப்பு : டேய் நான் ஊமச்சிய சொன்னேன் டா.

வருண் பட்டுனு சுப்புவ அடிக்க ஆரமிச்சுடுறான், ராம்கி வருண அடிக்க, ஒரு சண்டை நடக்குது, வருண் ரொம்ப கோபம் ஆகி ரெண்டு பேரையும் அடிச்சுடுறான். சுப்பு மொதுல ஓடுறான். அப்பறம் ராம்கிய அடிக்கிறான். ராம்கியால எழுந்திரிக்க முடியல. ஸ்ரீதேவி வருண கூட்டிட்டு போயிடுறா.

ஸ்ரீதேவி : டேய் என்ன டா அவங்கள அடிச்சிட்ட, MLA என்ன பண்ணுவான்னு தெரியல. என் வயிரே கலங்கிடிச்சு. நீ இப்போ போ வீட்டுக்கு, நம்ம நாளைக்கு பாப்போம்.

வருண் வீட்டுக்கு போயிடுறான். வருண் வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே, வர்ஷினி அவனையே பாக்குறா.

வருண் : ஏன் அப்படி பாக்குற, ஓ இன்னைக்கு நான் பாத்திரம் கழுவுற நாளா. மறந்துட்டேன்.

வர்ஷினி : எங்க போய்ட்டு வர.

வருண் : வேலைக்கு தான்.

வர்ஷினி கைல இருக்க டிவி ரிமோட்ட கீழ போட்டு உடைக்குறா.

வர்ஷினி : நீ ஸ்ரீதேவி கூட போனத பக்கத்து வீட்டு அக்கா, பாத்து இருக்காங்க.

வருண் : ஆமா வர வழில, பாத்தேன்.

வர்ஷினி : நம்ம கஷ்ட்ட படுற குடும்பமா இருந்தாலும், ஊர்ல நல்ல பேரு இருக்கு. அவ கூட சேர்ந்தா நம்மளையும் ஊரு தப்பா பேசும்.

வருண் : நீ தான சின்ன வயசுல சொன்ன, நமக்கு உதவி பண்றவங்கள மறக்க கூடாதுனு, மறந்துடாத அவங்க நம்ம சொந்தகாரங்க ஒதுக்கன போது நமக்கு உதவி பண்ணவங்க.

வர்ஷினி : நீ அவ கூட பேசுனா, நீ அக்காவா பேசுனாலும், அந்த விபச்சாரி கூட இந்த பையன் போரான்னு தான் சொல்லுவாங்க.

வருண் : மத்தவங்க பேசுறாங்களோ இல்லையோ நீயே அப்படி பேசுவ போல.

வர்ஷினி வருண அறஞ்சிடுறா, பெரு மூச்சு விட்டுட்டு போய் ரூம்ல தூங்கிடுறா. வருண் சோஃபால தூங்குறான். சாப்பாட்டு குண்டான்ல சாப்பாடு அப்டியே இருக்கு.

அடுத்த நாள் காலைல.

வர்ஷினி வருணக்கு டீ குடுக்க வரா, டீ வச்ச உடனே, எப்பவும் போல வருண் அவன் கைய்ய நீட்டுறான், வர்ஷினி முத்தம் குடுக்கல, அவன பாக்காம கிட்ச்சன் போய்ட்டா, வருண் அவ போறதையே பாத்துட்டு இருக்கான்.

வருண் காலேஜ்க்கு போய்ட்டான், அவன் friend ஸ்ரீதர் கிட்ட பேசிட்டு இருக்கான்.

ஸ்ரீதர் : டேய் என்ன டா சொல்ற, MLA ஆளுங்கள அடிச்சுட்டியா.

வருண் : டேய் நான் என்ன பண்றது அக்காவ தப்பா பேசுனா, பாத்துட்டு வந்துடணுமா.

ஸ்ரீதர் : டேய் அவன் கிட்ட எல்லாமே இருக்கு டா. நம்மள அவன் என்ன வேணா பண்ணுவான்.

வருண் : நான் போய் ஸ்ரீதேவி அக்காவ பாத்துட்டு, அவங்க கூட போய் MLA வ பாத்து மன்னிப்பு கேட்டுட்டு வரன்.

ஸ்ரீதர் : டேய் அவன் என்ன இயேசு நாதரா உன்ன மன்னிக்க, நீ நேர போய் பாக்குறன்னு சொல்ற.

வருண் : பயந்துட்டே இருக்கறத விடு இது மேல்னு நினைக்கிறன்.

ஸ்ரீதர் : நானும் கூட வருவா.

வருண் : இதுக்குள்ள நீ வராத. பசங்களுக்கு தெரிய வேணாம் பாத்துக்கோ. நான் கொஞ்சம் வெளிய வேலையா போய் இருக்கேனு மட்டும் சொல்லு.

வருண், ஸ்ரீதேவி வீட்டுக்கு நடந்து போய்ட்டு இருக்கான், யாரோ அவன follow பண்ரா மாதிரி தோணுது, திரும்பி பாக்குறான், ஆனா யாரும் இல்ல.

காலேஜ்ல வருண் friends பேசிக்குறாங்க.

அந்தோணி : டேய் விஸ்வா, எவளோ நேரம் டா உனக்காக வெயிட் பண்றது, டெய்லி இந்த தம் அடிக்கிற பழக்கத்த எப்போ விட போறியா.

விஸ்வா : டேய் விடுறேன் விடுறேன். ஆமா என்ன கொஞ்சம் கூட்டமா ஆளுங்க டீ கடைல நின்னுட்டு இருக்காங்க, காலேஜ்ல எதுனா சண்டை நடக்க போகுதா.

ஸ்ரீதர் : ஒரு வேலை MLA ஆளுங்களா இருக்குமோ.

அந்தோணி : என்ன சொன்ன.

ஸ்ரீதர் : ஒன்னும் இல்ல டா.

அந்தோணி : எதோ சொல்லிட்டு, முழுங்கிட்ட.

ஸ்ரீதர் : டேய் வருண் சொல்ல கூடாதுனு சொன்னான், அவன் MLA ஆளுங்கள அடிச்சுட்டான் டா, இப்போ ஸ்ரீதேவி அக்கா கூட போய் MLA கிட்ட மன்னிப்பு கேட்குறன்னு போய் இருக்கான்.

அந்தோணி : டேய் முட்டாள், முன்னாடியே, சொல்லி இருக்குலாமே டா, என் மாமா கொஞ்சம் அரிசியல்வாதிங்க தெரியும், அவர் கூட போய் MLA வ பாத்து இருக்கலாம். இப்போ வருண் எங்க இருப்பான்.

ஸ்ரீதர் : ஸ்ரீதேவி அக்கா வீட்ல, ஆனா அவங்க வீடு எங்க இருக்குனு தெரியல.

அந்தோணி : சரி வா தேடுவோம். இங்கயே நின்னுட்டு இருக்க முடியாது.

வருண் friends, வருண தேடி போறாங்க.

வருண், ஸ்ரீதேவி வீட்டுக்கு போற வழில, யாரோ அவன follow பண்ற மாதிரி இருக்குனு, திரும்பி திரும்பி பாக்குறான், யாருமில்ல.

வருண், ஸ்ரீதேவி வீட்டுக்கு போய்ட்டான்.

ஸ்ரீதேவி : டேய் MLA கீழ ஒருத்தன் சண்முகம்னு இருப்பான், அவன் தான் அங்க எல்லாம், MLA வே அவன் பேச்ச கேட்பாரு, அவளோ செல்வாக்கு அங்க, அவன் கிட்ட MLA வ பாக்கணும், மன்னிப்பு கேட்கணும்னு சொல்லி இருக்கேன், இப்போ கால் பண்றேன் சொல்லி இருக்கான். டேய் வர்ஷினிக்கு தெரியுமா நேத்து நடந்த சண்டை.

வருண் : இப்போ அதெல்லாம் அவ கிட்ட சொல்ற நிலம இல்ல.

ஸ்ரீதேவி வீட்டு கதவ யாரோ தட்டுறாங்க.
ஸ்ரீதேவி போய் பாக்குறா, ஒருத்தர் அவ கிட்ட,உன்ன MLA பாக்கணும்னு சொல்றாரு, தனியா வா. இப்போவே போனும், MLA க்கு டைம் இல்ல 5 நிமிஷம் தான் உனக்கு ஒதுக்கி இருக்காரு,வண்டில ஒக்காரு.

ஸ்ரீதேவி, வருண் கிட்ட,5 நிமிஷத்துல வரேன் டா, வீட்ல இருனு சொல்றா.

ஸ்ரீதேவிய MLA ஆளுங்க கூட்டுனு போயிடுறாங்க.

சுப்பு, ராம்கி, நேத்து வருண் கிட்ட சண்டை போட்டவங்க, இப்போ அவனோட பாஸ் சண்முகம் கிட்ட பேசுறான்.

சுப்பு : அண்ணா, நீ சொன்ன மாதிரி ஸ்ரீதேவிய வீட்ல இருந்து கிளப்பி விட்டோட்டோம், நீங்க MLA கிட்ட பேசுட்டீங்களா, நீங்க ஓகே சொன்னா, வேலைய முடிச்சிடலாம்.

சண்முகம் : MLA பிஸிடா இப்போ, நீங்க ஒன்னு பண்ணுங்க, நீங்க என்ன பண்ணனும் நினைக்கிரிங்களோ பண்ணிடுங்க, MLA கிட்ட நான் பேசிக்குறேன்.

ஸ்ரீதேவி வீட்ல, வருண் இருக்கான்.

வருண்க்கு ஒரு மெசேஜ் வருது, போன் எடுத்து பாக்குறான். வர்ஷினி, சாரி டானு மெசேஜ் அனுப்பி இருக்கா, அத பாத்ததும், வருண் முகத்துல் ஒரு சின்ன சிரிப்பு. ஆனா அவன் பதில் எதும் அனுப்புல. உடனே இன்னொரு மெசேஜ் வருது, வர்ஷினி, நான் வேலைல இருந்து permission கேட்டு வந்துட்டேன் வீட்டுக்கு, நீ எப்போ வரனு கேட்குறா.

வருண்க்கு திடிர்னு, வர்ஷினிய எதாவது MLA ஆளுங்க பண்ணிடுவாங்களோனு தோணுது. எழிந்துருச்சு வீட்டுக்கு கிளம்பலாம்னு வெளிய போக கதவ திறக்க போறான், கதவு திறக்குது தானா, பாத்தா சுப்புவும், ராம்கியும் அவங்க ஆளுங்களோட இருக்காங்க. வருண வீட்டுக்குள்ள தள்ளி, எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்க. வருண ஒரு chair ல கட்டி போட்டுட்டாங்க. சுப்பு, வருண் கிட்ட பேசுறான்.

சுப்பு : டேய் தம்பி, உன்ன அடிக்குற அளவுக்கு தான் எனக்கு கோபம் இருந்துது, ஆனா என் friends லாம் என்ன ஒரு ஐட்டதுக்காக அடிவாங்கிட்டு வந்து இருக்கிங்கனு கலாய்ச்சாங்க, சில பேரு ஒரு ஐட்டம் முன்னாடி அடிவாங்கிட்டியேனு கலாய்ச்சங்க. நான் முத கொலை பண்ணும் போது, பெரிய ஆள போட்டேன், அப்போ என்ன பாத்து பயந்தவன் எல்லாம், நேத்து என்ன அவ்ளோ கிண்டல் பண்ணிட்டாங்க, இப்போ என்ன பாத்தா திரும்பவும் அவங்க பயப்படணும்னா, நான் உன்ன கொன்னே ஆகணும்டா. என்ன மன்னிச்சுரு.

வருண chair ஓட கொளுத்தி விட்டுட்டாங்க, அவன் துடிக்குறான். அவன் போன்ல வர்ஷினி திரும்பவும் சாரி கேட்டு ஒரு மெசேஜ் அனுப்புறா. வருண் சூடு தாங்க முடியாம கத்துறான். சுப்புவும் அவன் ஆளுங்களும் போயிடுறாங்க.

ஸ்ரீதேவிய ஒரு கார்ல கூட்டினு போயிட்டே இருக்காங்க, அவ எங்க போறிங்கன்னு கேட்டாலும் சொல்லமாற்றாங்க.

கொஞ்சம் நேரத்துல, வருண் friendsக்கு விஷயம் தெரிஞ்சு ஸ்ரீதேவி வீட்டுக்கு போய் பாத்தா, வருண் செத்து கிடந்தான். வருண் friends கதறி அழுவுராங்க.
வர்ஷினிக்கு விஷயம் தெரிஞ்சு ஓடி வந்து வருண பாக்க, அவன் உடம்பு எரிஞ்சு இருந்துது, அவ பித்து புடிச்சா மாதிரி பாத்துகிட்டே மண்டி போட்டு அதிர்ச்சில இருக்கா.

வருண் வீட்டுக்கு , அவன் பாடிய கொண்டு போய்ட்டாங்க.

சாவுல, வருண் friends அழுவுறாங்க. வர்ஷினி அழுவாம ஒரே இடுத்த பாத்துட்டு இருக்கா, ஒரு பாட்டி வந்து வர்ஷினி கிட்ட பேசுது.

பாட்டி : அம்மா, அழுவாம இருக்காத மா அழுதுடு மா. மனசுல அந்த பாரம் நின்னுடுமா, அழுதுடு.

வர்ஷினி, வருண் சொன்னத நினச்சு பாக்குறா "அக்கா அப்போ என் கைல நீ முத்தம் குடுக்காத அன்னைக்கு, நம்ம வீட்ல யாருக்கோ எதோ ஆகுது " இன்னைக்கு காலைல வருண் கைய நீட்டும் போது வர்ஷினி முத்தம் குடுக்காம போனது அவளுக்கு ஞாபகம் வருது. கத்தி அழுவுரா வர்ஷினி, அவன் கை எடுத்து முகத்துல வச்சுக்குறா, அவன் கைய்யால அவ முகத்த அடிச்சுகிட்டு அழுவுரா.

ஸ்ரீதேவிய இப்போ தான் வண்டில MLA ஆளுங்க எறக்கி விட்டாங்க. ஸ்ரீதேவி விஷயம் தெரிஞ்சு, அழுதுகிட்டே ஓடி வரா வருண் வீட்டுக்கு, அந்த தெருல வந்ததும் ஒருத்தங்க, ஸ்ரீதேவி கிட்ட, மா போகாத மா உன்ன எதாவது பண்ணிடுவாங்கனு சொல்றாங்க. அவன் என் தம்பி, என்னால தான் அவனுக்கு இப்படி ஆச்சுனு அழுதுட்டே சொல்லிட்டு,வருண் வீட்டுக்கு போறா.

கும்பல குள்ள புகுந்து வருண பாக்க போறா,ஸ்ரீதேவி உள்ள போனவுடனே, வர்ஷினி அவள பாக்குறா, பாத்து,கோபம் ஆகி , ஸ்ரீதேவிய அடிக்க வர்ஷினி ஓடுறா, அங்க இருந்த ஆளுங்க எல்லாம் வர்ஷினிய புடிச்சிடுறாங்க. அங்க இருக்கவங்க ஸ்ரீதேவிய போ சொல்லிடுறாங்க. கும்பல்ல இருந்து வெளிய வரா, அந்த சின்ன பையன் வாழ்க்கையே இவளால போச்சுன்னு அங்க நாலு ஆம்பளைங்க ஸ்ரீதேவிய அடிக்கிறாங்க, அவ புடவையை உருவி, வாய்லயே அடிச்சு அனுப்பிடுறாங்க.

வருண் சாவ எடுத்துடுறாங்க, வர்ஷினி சாவ எடுக்க உடாம, வருண் கால புடிச்சிக்கிறா. அப்பறம் கொஞ்ச நேரத்துல சாவ எடுத்துடுறாங்க.

ரெண்டு நாள் கழிச்சு.

ஸ்ரீதேவிய MLA பாக்க வர சொல்லி இருக்காரு, அவ அவர பாக்க ரூம் வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கா. அந்த ரூம்ல MLA, இன்ஸ்பெக்டர் மட்டும் இருக்காங்க,பேசிட்டு இருக்காரு.

இன்ஸ்பெக்டர் : சார் வருண கொலை பண்ணது உங்களோட ஆள் சுப்புவும் ராம்கியும், ஆனா நீங்க உங்களோட வேற ஆள கேஸ்ல சரணடைய சொல்லிட்டீங்க. நாங்களும் அவன் மேல கேஸ் போட்டுட்டோம்.

MLA : சுப்புவும், ராம்கியும் என்னோட முக்கியமான ஆளுங்க. என் கிட்ட ரொம்ப வருஷமா இருக்காங்க. சரி அதெல்லாம் விடு, உனக்கு காசு வீடு தேடி வரும், இப்போ நீ கிளம்பலாம்.

இன்ஸ்பெக்டர் : வரேன் சார்.

MLA, ஸ்ரீதேவிய உள்ள வர சொல்ராரு.
ஸ்ரீதேவி உள்ள வரா. MLA, ஸ்ரீதேவி பாத்ததும் ஆச்சர்யபட்டு எழுந்துக்குறாரு.

MLA : வாங்க உட்காருங்க.

ஸ்ரீதேவி, எதும் பேசல, உட்காராம நிக்குறா.

MLA : சொன்னாங்க பசங்க, அந்த செத்துட்டானே அந்த பையன் வருண் , உங்க தம்பி மாதிரின்னு. இங்க பாரு அந்த பையன நான் கொல்ல சொல்லல என் கீழ சண்முகம்னு ஒருத்தன் இருக்கான் அவன் தான் எனக்கு எல்லாமே, அவன் வருண கொல்ல போற விஷயத்த சொல்லவே இல்ல, எனக்கு கால் போலன்னு அவனே முடிவு பண்ணிட்டான், நான் அவனுக்கு அந்த உரிமையும் குடுத்து இருக்கேன். நான் சன்முகத்த கேட்டேன், ஏன் பா இப்படி என் கிட்ட சொல்லாம பண்ணிட்டனு கேட்டேன், வருண் பையன் நம்ம ஆளுங்குல அடிச்சது மட்டும் இல்லாம, நம்ம எதிரி கேங் கிரி கிட்ட நம்ம ஆளு ஜானி இருக்கற இடத்தையும் காட்டி குடுத்து இருக்கான், அவனுங்க ஜானிய கொன்னுட்டாங்க. நம்மாளு ஒருத்தன் கொலை பண்றதுக்கு காரணம் ஆனவன நீங்க என்ன பண்ணுவீங்களோ, நானே அத பண்ணிட்டேன், மன்னிச்சிக்கோங்கனு சொல்லிட்டான். நீயே சொல்லு, உன் தம்பி என் ஆளு ஒருத்தன் இருக்கற இடத்த, என் எதிரி கிட்ட காட்டி குடுத்தது தப்பு இல்லையா.

ஸ்ரீதேவி, MLA வ ஆச்சர்யமா பாக்குறா.

MLA : உன் இழப்பு பெருசு தான், எனக்கு புரியுது, ஆனா அந்த இழப்ப ஈடு கட்ட பாக்குறேன். முதல இனி நீ என் தங்கச்சிய, சந்தோஷ படுத்த போக தேவ இல்ல, எனக்கு தெரியும் அவ கண்ட இடுத்தல கடிச்சு வச்சிடுறான்னு. உனக்கு அதுல இருந்து விடுதலை. இத காரணமா வச்சு உன் தம்பிய கொன்னதுக்கு நீ எனக்கு மன்னிப்பு தர மாட்ட. என்னால ஒரு சின்ன பையன் உயிர் போச்சு. நான் உனக்கு ஒரு offer தரேன் உன்னால சாம்பாரிக்க முடியாத ஒரு விஷயத்த தரேன்.

ஸ்ரீதேவி என்னனு புரியாம பாக்குறா.

MLA : அது என்னனா, மரியாதை. நான் எப்படி உனக்கு மரியாதை வாங்கி தர முடியும்னு யோசிக்கிறியா. நீ MLA பொண்டாட்டி ஆகிட்டா.

ஸ்ரீதேவிக்கு ஆச்சர்யம்.

MLA : ஆமா உன்ன இப்போதான் பாத்தேன், எனக்கு எப்படி ஒரு பொண்ணு இருக்கணும்னு யோசிச்சு வச்சு இருக்கனோ அப்படி இருக்க நீ. நான் நிறைய பொண்ணு கூட, சுத்தி இருக்கேன் ஆனா யாரையும் காசு குடுத்து கூப்பிட்டது இல்ல, ஒருத்தற்கு என்ன புடிச்சா தான் நான் அவங்க கூட இருப்பேன். எனக்கு 40 வயசு ஆகுது ஆனா உன்ன பாத்த அப்பறம் தான் கல்யாணம் பண்ணிக்க தோணுது. நீ என்ன கல்யாணம் பண்ணிட்டனா, உன்னால இந்த ஜென்மத்துல சாம்பாரிக்க முடியாத மரியாதைய நான் வாங்கி கொடுக்குறேன். அப்பறம் இவன கல்யாணம் பண்ணிக்கிட்டா அவன் தங்கச்சிய பாக்கணும்னு நினைப்ப, அதெல்லாம் இல்ல என் தங்கச்சி வேற வீட்ல இருப்பா வேல ஆளுங்க கூட, எங்க அம்மாவோட கடைசி ஆசை அவள பாத்துக்கணும்ன்றது, அவங்களுக்காக தான் பாத்துக்குறேன்.நீயே சொல்லு உனக்கு MLA பொண்டாட்டி ஆகணுமா, வேணாமான்னு. உன்னோட வாழ்க்கைய மாத்துற தருணம் இது, யோசிச்சிக்கோ.

MLA ரூம் விட்டுட்டு வெளிய வந்து சண்முகம் கிட்ட பேசுறான்.

MLA : டேய் அவளுக்கு, நான் அந்த பையன கொல்ல அனுப்புனேன்னு தெரியவே கூடாது.

சண்முகம் : ஸ்ரீதேவிக்கானா.

MLA : ஸ்ரீதேவி அண்ணினு கூப்பிட உனக்கு கஷ்டமா இருக்கா.

சண்முகம் : புரிஞ்சு போச்சுனா, இனி அப்டியே கூப்ட்டுவோம்.

MLA அவர் ரூம்க்கு போய்ட்டாரு.

சண்முகம், சுப்பு கிட்ட பேசுறான்.

சண்முகம் : டேய் சுப்பு, நீங்க வருண கொல்லணும்னு அடம் பிடிச்சதால தான், அவன் கிரி கிட்ட, ஜானி இருக்க இடத்தை சொன்னான்னு MLA கிட்ட பொய் சொன்னேன். அப்போ தான் அந்த பையன கொல்ல சொல்லுவாருனு
அத அப்படியே maintain பண்ணிக்கோங்க, MLA க்கு தெரிஞ்சிட கூடாது.

சுப்பு : சரி னா.

ரெண்டு நாள் கழிச்சு.

MLA கூட ஸ்ரீதேவி நல்ல புடவை கட்டி, நிறைய நக போட்டுக்குட்டு நிக்குறா, ரோட்ல. ஸ்ரீதேவிய ரோட்ல பாக்குறா வர்ஷினி, MLA ஸ்ரீதேவி கூட selfie எடுத்துட்டு இருக்காரு. வர்ஷினி கோபமா போய் ஸ்ரீதேவி புடவைய இழுத்து, அடி அடினு அடிக்குறா. MLA வும், MLA ஆளுங்களும் வர்ஷினிய புடிச்சு போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுடுறாங்க. வர்ஷினி முகத்துல, ரொம்ப அடி பட்டு இருக்கு, MLA ஆளுங்க அவள அடிச்சு இருக்காங்க.

போலீஸ் இன்ஸ்பெக்டர் MLA கிட்ட போன்ல பேசுறாரு.

MLA : என்னயா சொல்லு.

இன்ஸ்பெக்டர் : இந்த வர்ஷினி இருக்குறது, எப்படியும் உங்களுக்கு பிரச்னை தான் அவ உங்கள என்னைக்கு இருந்தாலும் எதாச்சு பண்ண வாய்ப்பு இருக்கு.

MLA : யோவ் என்ன என்ன பண்ண முடியும்.

இன்ஸ்பெக்டர் : குடும்பத்துல இப்படி மிச்சம் இருக்கறதுங்க, கண்டிப்பா கொலை கூட பண்ணுங்க, இவ தம்பி வேற அவளுக்கு புள்ள மாதிரி. நீங்களே யோசிங்க, ரெண்டு நாள்ல கல்யாணம்னு கேள்வி பட்டேன், உங்க மனைவிய கூட எதுனா இவ பண்ணலாம், இன்னைக்கே அந்த அடி அடிச்சு இருக்கா ரோட்ல வச்சு.

MLA : சரியா. அப்போ உன் ஸ்டேஷன்லயே வச்சு முடிச்சு வுட்ரு.

இன்ஸ்பெக்டர் : சார், என்ன பிரச்னைல மாட்டி விடுருங்களே, நீங்களே செயின் snatching மாதிரி பண்ணி, கொன்னுடுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்.

MLA : ரைட் விடு. அப்போ அவள ரிலீஸ் பண்ணி விடு.

அடுத்த நாள் வர்ஷினி ரோட்ல செத்து கிடந்தா. வருண் friends போய் இறுதி சடங்க பண்ணாங்க.

இன்றைய நாளுக்கு வந்துட்டோம்.ஸ்ரீதர், ரகு கிட்ட பேசுறான்.

ஸ்ரீதர் : இதானா நடந்தது.

ரகு : தேங்க்ஸ் பா. நாங்க பாத்துக்குறோம் என்ன பண்றதுனு.

ஸ்ரீதர் : னா நாங்க வருண் ஆவி கிட்ட பேசலாமா.

ரகு : எனக்கு புரியுது பா நீங்க நினைக்கறது, ஆனா அவனோட பேய் உங்க மேல இறங்கிடுச்சுனா வம்பா போய்டும். சின்ன பசங்களா இருக்கீங்க,உங்க safety நான் பாக்கணும்.

ஸ்ரீதர் : சரி னா. ஊர்ல தான இருப்பிங்க பாக்கலாம்.

வருண் friends கிளம்பிடுறாங்க. ரகுவும் கீர்த்தியும் வீட்டுக்கு வந்துடுறாங்க.

ரகு, சேது கிட்ட போய் பேசுறான்.

ரகு : மச்சான், உனக்கு எதாவது வாய் பேச வராத பொண்ண புடிச்சிதா.

சேது ஆச்சர்யமா ரகு பாக்குறான்.

சேது : ஏன் மச்சான் அப்டி கேட்குற.

ரகு : சொல்லேன்.

சேது : ஆமா ஒரு பொண்ண புடிச்சுது இந்த ஊர்ல, ஆனா அவளுக்கு வாய் பேச வராதுனு தெரிஞ்சதும், நான் அவள பாக்கறத நிறுத்திட்டேன். அவ பேரு வர்ஷினி.

ரகு : அவளோட பேய் தான் உன் மேல இருக்கு.

சேது : அவ செத்துட்டாளா.

சேது முகம் சோகத்துல மாறுது.

சேது : நிஜமாவே சொல்றேன் ஒரு ரெண்டு நாளா, அந்த பொண்ணுக்கு பேச்சு வராதுனு தெரிஞ்ச உடனே நான் அப்படி அவள பாக்கறது நிறுத்தி இருக்க கூடாதுனு வருத்த பட்டுட்டு இருக்கேன். நான் தப்பு பண்ணிட்டேன் டா.

ரகு : சரி விடு. வருத்த படாத. இனி நடக்கறத பாப்போம்.

நண்பன் ஒருவன் வந்த பிறகுOpowieści tętniące życiem. Odkryj je teraz