அத்தியாயம் 4

6 0 0
                                    

அடுத்த நாள்

காலைல, ரகு தூங்கிட்டு இருக்கான், அவன் மேல ஒரே டிரஸ்ஸா பறந்து வந்து விழுது. தூக்கத்துல இருந்து எழுந்து பாக்குறான், ரஞ்சித் ஒரு ஒரு டிரஸ்ஸா போட்டு பாத்து கழட்டி தூக்கி எரியுறான், அது ரகு மேல படுது.

ரகு to ரஞ்சித் : தங்கம் என்ன பண்ணுது.

ரஞ்சித் : டேய் இன்னைக்கு ஊருக்கு போணும்ல, அது தான் எந்த டிரஸ் போடுறதனு பாத்துட்டு இருக்கன்.

ரகு : எப்பவும் சாதாரணமா தான டிரஸ் பண்ணுவ, இன்னைக்கு என்ன ஸ்பெஷல்.

ரஞ்சித் : பஸ்ல அவங்க வருவாங்களே.

ரகு : யாரு டிரைவரா, கண்டக்டரா.

ரஞ்சித் : என் ஆளு கீர்த்தி டா முட்டாள். ஐயோ இவன் கிட்ட ஒளறிட்டோமே.

ரகு : சரி. நான் உனக்கு டிரஸ் செலக்ட் பண்ணி தரேன். அங்க இருக்க டிரஸ் லாம் எடுத்துட்டு வா.

ரஞ்சித் : இதா.

ரகு : அங்க இருக்க துணி எடு.

ரஞ்சித் : அது அழுக்கு துணி டா முட்டாள்.

ரகு : எடுத்துனு வா.

ரஞ்சித் : இங்க பாரு, கிளம்புற டைம்ல டிரஸ் தோச்சுட்டு இருந்த நான் மனுஷனா இருக்க மாட்டேன். அவ எனக்காக வெயிட் பண்றது எனக்கு பிடிக்காது.

ரகு : எடுத்துனு வாயேன்.

ரஞ்சித் : இந்த டிரஸ்ஸ முதல பிச்சைக்காரனுக்கு போடணும், எவளோ கேவலமா இருக்கு.

owner அம்மா வராங்க.

owner அம்மா : டேய் இதாங்க பால், சாமிக்கு வேண்டுனது, ரொம்ப சக்தி வாயிந்த சாமி.

ரஞ்சித் : பிரசாதம் கொஞ்சமா குடுப்பாங்க பேரு, ரெண்டு பெரிய டம்ளர் full ah எடுத்துன்னு வந்து இருக்கீங்க.

ரகு : டேய் அவங்க எவளோ அன்போட எடுத்துனு வந்து இருக்காங்க, எதாவது சொல்லிட்டு.

ரஞ்சித் : ஓ அப்படியா, எங்க அந்த ஒரு டம்ளர் பால குடி பார்ப்போம்.

owner அம்மா : ஏன்டா அவனுக்கு பால் குடிக்க என்ன கஷ்டம்.

ரஞ்சித் : அவனுக்கு பால் குடிக்க புடிக்காது, குடிச்சா வாந்தி எடுத்துடுவான்.

ரகு : நான் குடிச்சிட்டா என்ன பண்ற.

ரஞ்சித் : டேய் நீ என்ன சொல்றியோ அத பண்றேன்.

ரகு : கண்ண மூடிக்க, குடிச்சுடுறேன்.

ரஞ்சித் : நீ என்ன ஏமாத்துவ, கண்ணு முன்னாடி குடி.

ரகு கஷ்ட்ட பட்டு குடிச்சுடுறான்.

owner அம்மா போயிடுறாங்க.

ரஞ்சித் திரும்பவும் டிரஸ் எடுத்து பாத்துட்டு இருக்கான், புடிக்காத டிரஸ்ஸ, தூக்கி போடுறான், அது ரகு மேல விழுது.

ரகு : டேய் நான் பால் குடிச்சா, நான் சொல்றத நீ பண்ணுறேன்னு சொல்லி இருக்க.

ரஞ்சித் : உனக்கு என்ன வேணுமோ, அத பண்றேன்.

ரகு : நான் சொல்ற டிரஸ்ஸ நீ போட்டுக்கணும்.

ரஞ்சித் : எதோ கஷ்டமா குடுப்பன்னு பாத்தா, சப்ப மேட்டர், என்ன டிரஸ்னு சொல்லு .

ரகு அழுக்கு துணில இருந்து ஒரு டிரஸ் எடுத்து குடுக்குறான்.

ரஞ்சித் : டேய் அது பிச்சைக்காரனுக்கு குடுக்க வச்சி இருக்க டிரஸ் டா, வேற குடு டா.

ரகு : பிச்சைகாரர் ஒன்னும் கோச்சிக்க மாட்டாரு.

ரஞ்சித் : டேய் இத போட்டுட்டு போனா அந்த பொண்ணு பாக்காது டா.

ரகு சிரிக்கிறான்.

ரஞ்சித் : நீ வேணும்னு பழி வாங்குற.

ரகு : டிரஸ் போட்டுட்டு ரெடி ஆகு. டைம் இல்ல.

ரஞ்சித் அந்த டிரஸ் போட்டுட்டு, சோகமா இருக்கான்.

ரகு : கீழ போய், owner வீட்ல, ஊருக்கு போறோம்னு சொல்லிட்டு போவோம்.

ரஞ்சித் : சரி.

ரகு : சிரிச்சா தான் உன்னை கூட்டிட்டு போவேன்.

ரஞ்சித் : இந்த டிரஸ் குடுத்துட்டு, சிரிப்பு வேற, பே.

owner ஐயாவ பாக்குறாங்க.

owner ஐயா : என்ன டா ஊருக்கு போறீங்க போல.

ரகு : எப்படி கண்டு புடிச்சீங்க.

owner ஐயா : அது தான் ரஞ்சித் புது டிரஸ் போட்டு இருக்கானே.

ரகு : நீங்க சூப்பர் ஐயா, உங்களுக்கு அறிவோ அறிவு.

ரஞ்சித் mind வாய்ஸ் : நாசா விஞ்ஞானிங்க, அறிவ பத்தி பேசிக்குதுங்க.

owner ஐயா : இங்க பாத்தியா என் டிரஸ்ஸும் ரஞ்சித் டிரஸ் போல கிழிஞ்சு இருக்கு.

ரகு : ஏன் அப்படி.

owner ஐயா : இப்போ லாம் கிழிஞ்ச pant போடுறது தான் ஸ்டைல்.

ரஞ்சித் : ஐயா ரெண்டு காலுக்கு நடுவுல கிழியுறது லாம் ஸ்டைல் இல்லையா.

owner ஐயா : டேய் அப்போ நீ ஏன் கிழிஞ்ச சட்ட போட்டு இருக்க.

ரஞ்சித் : அது ஏன் பக்கத்துல இருக்க சனியனால. சரி சரி நீங்க பேசிட்டு இருங்க, owner மம்மிய பாத்துட்டு வரேன்.

ரஞ்சித் போறான், owner ஐயா கூப்பிடுறாரு.

owner ஐயா : பின்னாடியும் கிழிஞ்சு இருக்கு பாரு, ஸ்டைல்சு.

ரஞ்சித் : போயா பைத்தியம்.

ரகு : ஐயா அவன் கெடக்குறான், நீங்க இப்படியே டிரஸ் போடுங்க.

owner ஐயா : நீதான் டா என் ஆளு.

கோமதி அக்கா, owner வீட்டுக்குள்ள போறாங்க.

ரகு : ஐயா, கோமதி அக்கா உங்க கிட்ட பேசாம போறாங்க.

owner ஐயா : நமக்கு மரியாதை குடுக்காதவங்க கிட்ட நம்ம பேச கூடாது.

ரகு : என்ன நடந்துச்சுனு சொல்லுங்க, அவங்கள உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கிறேன்.

owner ஐயா : உன்னால முடியுமா.

ரகு : ம்ம்.

owner ஐயா : அப்போ சொல்றேன், நீ கால பொளந்துட்டு இருக்க மாதிரி போட்டோ இருந்ததுல.

ரகு : யோவ் அந்த போட்டோவ விட மாட்டியா, சரி சொல்லி தொல.

owner ஐயா : அந்த போட்டோவ கோமதி கிட்ட குடுத்தேன், அவ நம்ம தெரு ஆண்ட்டிங்க லாம் இருக்குற குரூப்ல போட்டா.

ரகு : ஐயோ என் மாணமே போச்சு.

owner ஐயா : கேளு, அந்த போட்டோ ஆன்ட்டிங்க மத்தில நல்ல வரவேற்பு, சூப்பர் fantastic, marvelous னு கொண்டாடி தீத்துட்டாங்க.

ரகு : யோவ் என் மாணமே போச்சு.

owner ஐயா : எனக்கு அப்போ தான் ஒரு விஷயம் புரிஞ்சுது, ஆம்பளைங்க glamour ah இருந்தா பெண்களுக்கு புடிக்குதுனு.

ரகு : அப்பறம்.

owner ஐயா : ஒரு நாள் கோமதி வரும் போது, உன்ன மாதிரி கால பொளந்துட்டு உட்கார்ந்துட்டு இருந்தேன். கண்டிப்பா ஆன்ட்டிங்க மத்தில எனக்கு பேரு வரும் நினைச்சேன், ஆனா காதுலையே அடிச்சிட்டா பா.

ரகு : அன்னைக்கு, pant தான போட்டு இருந்த.

owner ஐயா : வேட்டி

ரகு : உன்ன காதுலயே அடிச்சு இருக்க கூடாது, காதையே வெட்டி எடுத்து இருக்கணும்.

ரகு போறான், owner அம்மாவ பாக்க.

owner ஐயா : டேய் எங்க போற, கோமதிய என் கால்ல விழ வைக்கிறேன்னு சொன்னியே.

ரகு கோபமா திரும்பி பாக்குறான்.

ரகு : என்ன சொன்ன.

ரகு, owner ஐயா கிட்ட போறான்

owner ஐயா : டேய் டேய் எதும் பண்ணிடாத டா. நான் பெரிய மனுஷன்.

ரகு : பொம்பள கிட்ட அப்படி உட்கார்ந்து காட்டிட்டு, பெரிய மனுஷன் வேற.

owner ஐயா : நான் போட்டோ கொடுத்ததுனால தான் நீ ஆண்ட்டிங்க மத்தில ஹீரோ இப்போ.

ரகு : ஐயோ இந்த கிழவன் அந்த போட்டோவ பெருமையான விஷயமாவே பாக்குறானே. அது எனக்கு அசிங்கம்னு எப்படி புரிய வைப்பேன்.

owner ஐயா : நான் போட்டோ ஷூட் பண்ணலாம்னு இருக்கேன்.

ரகு: இவர் பெரிய சன்னி லியோன், இவரு போட்டோ ஷூட் பண்ணிட்டா, எல்லாரும் பாத்து பித்து பிடிச்சு போய்டுவாங்க

owner ஐயா : முக்கியமா நீ குடுத்த அதே போஸ் ட்ரை பண்ணலாம் இருக்கேன். நீ தான் எனக்காக ஆண்ட்டிங்க கிட்ட ஷேர் பண்ணனோம். கோமதி கிட்ட மட்டும் அந்த போட்டோ காட்டாத, அவ காதுலயே அடிப்பா.

ரகு : நான் இங்க கொஞ்சம் நேரம் இருந்தா, உன்ன கொல பண்ணிடுவேன்.

ரகு சத்தமா ரஞ்சித்னு கூப்பிடுறான்.

ரஞ்சித் : டேய் மாங்கா ஏன் இப்படி கத்துற.

ரகு : நாம உடனே கிளம்பனும், வா.

ரஞ்சித் : owner மம்மி கிட்ட சொல்லிட்டு வா. அவங்க எதிர் பாப்பாங்க.

ரகு போய்ட்டு owner மம்மி கால்ல விழுந்து, போய்ட்டு வரேன் சொல்றான்.

ரகுவும் ரஞ்சித்தும் ரோட்ல நடந்து போயிட்டு இருக்காங்க. பஸ் புடிக்க.

ரகு : டேய், கிழவன், கோமதி அக்கா கிட்ட இப்படி எல்லாம் பண்ணி இருக்கு டா.

ரஞ்சித் : ஹா ஹா ஹா.

பஸ்ல ஏறிடுறாங்க.

கீர்த்தி பஸ்ல உட்கார்ந்துட்டு இருக்கா.

கீர்த்தி : ஹாய் guys.

ரகு : ஹாய் சொல்றான்.

கீர்த்தி : ரஞ்சித் அண்ணா, நேத்து உங்கள அடிச்சதுக்கு சாரி, நான் ரொம்ப வருத்த பட்டேன்.

ரஞ்சித் கண் கலங்கிடுறான்.

கீர்த்தி to ரகு : நான் சாரி கேட்டதுக்கு எமோஷனல் ஆகிட்டார்னு நினைக்கிறன்.

ரகு : இல்ல இல்ல நீ அண்ணான்னு கூப்பிட்டதுக்கு அழுவுறான்.

கீர்த்தி : என்ன பண்றது சில பேர பாத்தா அண்ணான்னு கூப்பிட தோணுது.

ரஞ்சித் பதில் பேசாம அழுவுறான்.

கீர்த்தி : ஓகே விடுங்க இப்போ உங்கள சிரிக்க வைக்க நான் என்ன பண்ணனும்.

ரஞ்சித் : நீங்க ரகுவையும் அண்ணான்னு கூப்பிடனும்.

ரகு : டேய் துரோகி.

கீர்த்தி ரகுவ பாக்குறா.

கீர்த்தி : அவர அண்ணான்னு கூப்பிட தோணல.

ரஞ்சித் : ஏன். அவன் பெரிய மன்மதனோ.

கீர்த்தி : உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது, அங்க ஒரு பொண்ணு உட்கார்ந்து இருக்குல, அவ யார்னு எனக்கு தெரியாது. அவ கிட்ட ரகுவ அண்ணான்னு கூப்பிடுவாளானு கேட்போம்.

கீர்த்தி to அந்த பொண்ணு : ஹாய், நான் ஒரு கேள்வி கேட்குறன், சும்மா ஜாலியா பதில் சொல்லுங்க, அங்க உட்கார்ந்து இருக்க பையன நீங்க அண்ணான்னு கூப்பிடுவிங்களா

அந்த பொண்ணு : கண்டிப்பா மாட்டேன், அவர் பஸ் ஏறி வரும் போது பாத்தேன், பக்கா boy friend material. handsome வேற.

கீர்த்தி : தேங்க்ஸ். யு கேர்ரி ஆன்.

கீர்த்தி : இப்போ புரியுதா ரஞ்சித் அண்ணா.
வேணும்னா உங்கள பத்தி என்ன நினைக்கிறா அந்த பொண்ணுன்னு கேட்டுடுவோமா.

ரஞ்சித் : வேணா வேணா, அவளும் அண்ணான்னு கூப்டா, என் கண்ணுல இருந்து இன்னும் ஒரு லிட்டர் தண்ணி வரும்.

ரகு mind வாய்ஸ் : இவளோ நாள் நம்ம வெயிட் தெரியாம இருந்து இருக்கோமே.

கீர்த்தி : என்ன, உன்ன நினைச்சு நீயே பெருமை படுறியா, shoulder ah எரக்கு. நார்மலா வா.

ரகு : என் மைண்ட்ல இருக்கறத அப்படியே சொல்றா.

ரகுவும் கீர்த்தியும் பக்கத்து பக்கத்துல உட்கார்ந்து வராங்க, ரஞ்சித் தனியா உட்கார்ந்துட்டு வரான்.

நண்பன் ஒருவன் வந்த பிறகுWhere stories live. Discover now